
மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்பி மஹுவா மொய்த்ரா. இவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதும், ஆளும் பாஜவுக்கு எதிராக கருத்துகளை வெளியிடுவதிலும் கில்லாடி. ! சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற கால்பந்து போட்டி துவக்க நிகழ்ச்சியில் மஹுவா மொய்த்ரா பங்கேற்றார்.
பின்னர் கால்பந்து இறுதி போட்டியை துவக்கி வைத்ததும், விளையாடும் ஆர்வத்தில் சேலை கட்டியிருந்தாலும் மஹுவா மொய்த்ரா களமிறங்கினார். அவர் கண்களில் கூலிங்கிளாஸ் அணிந்தபடி, சேலையை வரிந்து கட்டியபடி ஓடி, கால்பந்தை உதைத்து கோலுக்கு அனுப்பியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கால்பந்து இறுதி போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அப்போது எனது வேடிக்கையான தருணங்கள். ஆம்… நான் சேலை கட்டிய நிலையில் கால்பந்து விளையாடினேன்!’’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதெல்லாம் ஒரு செய்தியா கட்டுரையா என்று கடுப்பாவதற்கு முன்னர் ஒரு முறை மேலே உள்ள படத்தை பார்க்கவும்.
இப்படி ஒரு விளையாட்டை ஊக்குவிக்கும் ஜில்லுனு ஒரு படம் கிடைக்கும் போது அதையும் போடா விட்டால் எப்படி ???

Leave a comment
Upload