
இந்தியாவின் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து ஆண்டுதோறும் ‘டெக்னோ பார்க்’ எனும் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது. இதேபோல் நடப்பாண்டுக்கான ஆய்வறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன் டெக்னோபார்க் நிறுவனம் வெளியிட்டது.
இந்த ஆய்வில், ‘இந்தியாவில் 25 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மையமாக கொண்டு புடவை தயாரிப்பு தொழில் செயல்படுகிறது. வரும் 2031-ம் ஆண்டில் இந்தியாவில் புடவை அணியுடம் பெண்களின் எண்ணிக்கை 45.5 கோடியாகவும், 2036-ல் 49 கோடியாகவும் உயரும். 25 வயதுக்கு மேற்பட்ட 37 கோடி இந்திய பெண்கள், ஆண்டுதோறும் சராசரியாக ₹3,500 முதல் ₹4 ஆயிரம் வரை புடவைகளை வாங்க செலவிடுகின்றனர்.
2020-2025-ம் நிதியாண்டுகளுக்கு இடையில், வடஇந்தியாவில் புடவை வர்த்தகம் ஆண்டுதோறும் 6 சதவிகிதம் வரை வளர்ச்சியடையும். ஆனால், மக்கள்தொகை அடிப்படையில், வடஇந்தியாவில் பெண்கள் அதிகமாக இருந்தும், அவர்களில் புடவை அணிபவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், அதனால் ₹15 ஆயிரம் கோடி அளவுக்கே வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால், நாடு முழுவதும் ₹1 லட்சம் கோடிக்கு புடவை வர்த்தகம் நடக்கிறது.
திருமணங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் 41 சதவிகித அளவுக்கு புடவைகளின் விற்பனை அதிகமாக இருக்கிறது. அதாவது, இந்த காலகட்டத்தில் ₹23,200 கோடி மதிப்பிலான புடவைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. உ.பி-யில் பனாரஸ் புடவை, ராஜஸ்தானின் கோட்டா, ம.பி-யின் சாந்தேரி உள்ளிட்ட பல்வேறு புடவை ரகங்கள் அதிகளவில் விற்பனையாகின்றன!’ என்று குறிப்பிட்டுள்ளது.
சமந்தா படம் எதுக்கு ?? பின்ன எப்படி இந்த மேட்டரை படிக்க வைக்கிறதாம் ????
ஆமா..... இன்னுமா நம்ம பெண்கள் சேலை கட்டுறாய்ங்க ???
எல்லாரும் சுடிதாருக்கு மாறிட்டாங்கன்னு நினைச்சேனே........
மாலா ஶ்ரீ.

Leave a comment
Upload