
உலகெங்கிலும் முதன்முறையாக விமானம் போன்றதொரு வானில் பறக்கும் அதிநவீன ‛பைக்கை' ஜப்பான் நாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த பறக்கும் ‛பைக்', அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜப்பான் நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‛ஏர்கின்ஸ் டெக்னாலஜி' சார்பில், தற்போது வானில் விமானத்தை போல் பறக்கும் அதிநவீன மோட்டார் பைக்கை கண்டுபிடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் நடந்த வாகன கண்காட்சியில் ‛ஏர்கின்ஸ் டெக்னாலஜி' நிறுவனம் சார்பில் பறக்கும் பைக்கின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதில், இந்த பைக் டிராபிக் சிக்னல் இடையூறு இன்றி, மற்ற வாகனங்களின் 'ஓவர்டேக்' இல்லாமல், வானில் சர்ரென்று பறந்து செல்வதை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பறக்கும் பைக்குக்கு 'XTURISMO' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 300 கிலோகிராம் எடை கொண்ட இந்த பறக்கும் பைக், மணிக்கு 99 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த பைக் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அப்போது இதன் விலை, இந்திய ரூபாய் மதிப்பில் ₹6.20 கோடி!
சரி ஒரு வேளை எல்லாரும் இந்த பைக் வாங்கும் அளவு விலை குறைந்து வாங்கி விட்டால், சாலைப் போக்குவரத்து மாதிரி இந்த போக்குவரத்தை எப்படி சமாளிப்பது ??
அட அது கூட பரவாயில்லை மேலே எப்படி சிக்னல் அமைப்பது ???
அட அதையுமே சமாளிக்கலாம் என்றாலும் எப்படி இந்த பைக்கை மடக்கி நம்ம டிராஃபிக் போலீஸ் கல்லா கட்டறது ????

Leave a comment
Upload