தொடர்கள்
தொடர்கள்
மக்கள் பார்வையில் கம்பர் -01 -ரமேஷ் எத்திராஜன்

20220824072839597.jpg

சாதாரண குடிமக்கள் பார்வையில்
கம்பர்

பால காண்டத்தில் ஆற்றுப்படலத்தில்
வரும் பாடல் இது

காப்பியத்தை இயற்றிய கம்பர்
அதன் வழியே சாதாரண குடி
மக்களும் எளிதில் புரியும்படி
பாடல்கள் இயற்றியது சிறப்பு

இந்த பாடலில் உணவு முறையை
கம்பன் எளிமையாக சாதாரண
மக்களுக்கு எளிதில் புரியும்படி
நயமாக உரைக்கிறார்

உணவிற்க்கு முன் முக்கனி
இன்றைய அறிவியலும்
சாப்பிடுவதற்கு முன் கனிகள்
சாப்பிடுவதால் உடலில் உள்ள
கழிவுகள் வெளியேற வழி
வகுப்பதாக கூறுகிறது

பிறகு பலதரப்பட்ட பருப்புவகைகள்
அதாவது புரதச்சத்து
அது மூழ்க்கும்அளவு நெய்

நெய் ஜீரண சக்திக்கு உதவுகிறது
சுண்ட காய்ச்சிய பாலில் உறை
ஊற்றிய செந் தயிர்
பால்புரதம்

இவற்றுக்கு இடையே செறித்த
சோறு
தம் தம் வீட்டில் விருந்தினரோடும்
உறவினரோடும் மகிழ்ந்து
பகிர்ந்து உண்ணும்

விருந்தோம்பலை சாதாரண
மக்களுக்கு புரியும்படி
எளிதாக கம்பர் உரைப்பது சிறப்பு

இதில் விருந்தோம்பல் எனும்
நீதியை நயமாக உரைக்கிறார்
கம்பர்

மீண்டும் சந்தித்து சிந்திக்கும்
வரை விடை பெறுவது


20220824074944172.jpg