தொடர்கள்
தொடர்கள்
வாழ்க்கை இவ்வளவு தான் !

சின்ன சின்ன சவால்களும், அபூர்வ விடைகளும்

வாழ்க்கை வாழ்வதற்கே.

ஆனால் எப்படி வாழணும்? அதுதான் தெரியவில்லை என அனைவருக்கும் தோன்றும் ஒரு சவால் தான்.

பலருக்கு தினப்படி வாழ்க்கையையே ஒரு சவால் தான். உண்ண உணவு, உடுக்க உடை, உறைவிடம், கேள்விக்குறி தான்.

இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றிரண்டு இருந்துவிட்டால் அதற்கு ஏற்றார்போல் அடுத்த ஆடம்பரத்திற்கு மனம் முதலிடம் தரத் தயாரகிவிடுகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டே எழும் சவால்களை ஒட்டு மொத்த அளவில் பௌதீக ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரித்து விடலாம்.

அடிப்படையில் எழும் சவால்களுக்கு நமது பாரத தேசத்தில் அவ்வப்போது தோன்றிய ரிஷிகள், முனிகள், சான்றோர்கள் பொது ஜனங்களின் மேல் அக்கறை கொண்டு தம்மைச் சுற்றியிருந்த மக்களுக்கு நல்லுரைகளை கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

இனி வரும் வாரங்களில் வாரம் ஒரு மகான் அல்லது சிந்தனையாளர் நம் சின்ன சின்ன கேள்விகளுக்கு ஏதேனும் ஒரு விடை சொல்லியிருப்பதை தேடலாம்.

சேலம் சின்ன திருப்பதியில் உள்ள பெருமாள் கோவில் பிரகாரத்தில் ஒரு தூணில் இருந்த கரும்பலகைச் சுவடு தெரிவிக்கும் செய்தி இந்த வாரம்.

20220825184432986.jpg

பளிச்சினு இருக்கு இல்லையா? பட்டென சிந்திக்கவும் வைக்கிறது அல்லவா?

இனி அடுத்த வாரம் முதல் நமது எண்ணங்கள் இடையூறு இல்லாமல் அந்த மகான்கள் / மேதைகள் / சொல்லும் ஏதோ ஒரு செய்தி உங்களுக்குள் புதைந்திருக்கும் ஏதோ ஒரு கேள்விக்கு விடையாய் இருக்கக் கூடும்.......