தொடர்கள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
" திரில்லிங்கான100 கிலோ கிறிஸ்துமஸ் கேக் ரெடியாகும் ஸ்டைல் " - ஸ்வேதாஅப்புதாஸ்

நவம்பர் மாதம் வந்துவிட்டாலே உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் களை கட்டிவிடுகிறது .

2022102318541953.jpg
ஒரு பக்கம் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் ஜோடனைகள் துவக்கம் . மறுபக்கம் வித்தியாசமான கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிப்பு துவங்கி விடுவது ஒரு திரில்லிங்கான ஒன்று .

20221023190016436.jpg
கிறிஸ்துமஸ் கேக் மற்றும் வைன் ஒரு பாரம்பரியமான ஒன்று .
கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பை ஒரு சிறிய விழா போல கலக்கி வருகின்றனர் ஊட்டி ஜெம் பார்க் ஹோட்டல் செஃப் மற்றும் அதிகாரிகள் .

20221023230704489.jpg
கடந்த இருபத்தி ஆறு வருடமாக ஒரு பாரம்பரிய வைபவமாக இந்த கேக் தயாரிப்பை செய்து வருகின்றனர் .
கிறிஸ்துமஸ் விழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே இந்த கேக் தயாரிப்பு ரெடியாகும் இதை பாரம்பரிய கேக் மிக்ஸிங் என்று கூறுகின்றனர் .
தீபாவளிக்கு பின் கிறிஸ்துமஸ் தான் ஒரு பெரிய பண்டிகை அதை துவக்கும் விதமாக இந்த பாரம்பரிய கேக் மிக்சிங் வைபவத்தை நடத்துகிறார்கள் .
ஊட்டி நகரில் உள்ள முக்கிய நண்பர்களை அழைத்து ஒரு சிறிய அழகான சுவையான விழாவை ஜெம் பார்க் குடும்பம் நடத்துவது தான் சிறப்பு .

2022102323090801.jpg
கேக் மிக்சிங்கில் நட்ஸ் , உலர் திராட்சை , பிளம்ஸ் வாசனை பொருட்கள் அதனுடன் ரம் , பிராண்டி , வைன் , விஸ்கி ,ஜின் மற்றும் கோக் எல்லாவற்றையும் ஊற்றி மிக்ஸ் செய்து ஒரு கலவையாக அனைவரும் சேர்ந்து மாற்றிவிடுவது ஒரு சூப்பர் நிகழ்வு .
இந்த கேக் மிக்ஸ் ஒரு மாத காலம் பாதுகாக்க பட்டு டிசம்பர் 15 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பிளம் கேக் பேக் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு விடப்படும் .இந்த கேக்கை ஒரு வருடம் வைத்து உண்ணலாம் என்கின்றனர் .
ஜெம் பார்க் ஹோட்டல் ஆப்பரேஷன் மேனேஜர் சுரேஷ் நாயரை சந்தித்து பேசினோம் ,

"கடந்த 26 வருடமாக இந்த பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் திருவிழாவை நடத்தி வருகிறோம் .
பதினோராவது நூற்றாண்டில் கிரேட் பிரிட்டனில் துவக்கப்பட்டது .அங்கு நட்ஸ் , ட்ரை ப்ரூட்ஸ் விளைச்சல் அதிகமாக அறுவடை செய்து கிறிஸ்துமஸுக்கு இந்த கேக் மிக்ஸிங் செய்துள்ளார்கள் .17 ஆம் நூற்றாண்டில் அந்த கேக்கின் மேல் ஐசிங் போட்டு அலங்கரிக்கும் பழக்கம் வந்துள்ளது .
நம் நீலகிரியை பொருத்த மட்டில் 1900 ஆண்டுகளில் 250 பிரிட்டிஷாரின் பங்களாக்கள் இருந்துள்ளன அங்கு அவர்கள் இந்த கேக் மிக்ஸிங் செய்து கிறிஸ்துமஸ்க்கு தயாராகுவார்கள் .

20221024001407593.jpg
அதே போல நாங்களும் தயாரிக்கிறோம் .இந்த மிக்சிங்கை பாதுகாக்க பிரேசெர்வேட்டிவாக ரம் , பிராண்டி , விஸ்கி ஊற்றி மிக்ஸ் செய்து வைக்கிறோம் . முப்பது கிலோ கலவை தயாரிப்பில் நூறு கிலோ கேக் ரெடியாகும் .
எங்க ஹோட்டல் டீம் , டூரிஸ்ட் , லோக்கல் கெஸ்ட் சேர்ந்து இந்த மிக்சிங்கை ரெடி 8செய்துள்ளோம் .கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எங்க கேக் அனைவரையும் மகிழ்விக்கும் .
கொல்கத்தாவில் இருந்து வந்த சிவசங்கர் கூறும்போது,

" ரொம்பவே ஆச்சிரியமாக இருக்கிறது , இப்படி ஒரு கேக் மிக்சிங்கை பார்த்ததே இல்லை . அதுவும் கெஸ்டாக வந்த எங்களை அழைத்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ள செய்தது மிக ஹாப்பியான நேரம் மறக்க முடியாத ஒன்று .

20221024002850760.jpg

இந்த கிறிஸ்துமஸ் கேக்கை அடுத்த மாதம் டேஸ்ட் செய்ய முடியுமா என்பது தான் கேள்விக்குறி " என்று கூறினார் .
ஜெம் பார்க் ஹோட்டலின் முத்த செஃப் சுரேந்திரன் நம்மிடம் கூறும் போது ,


" கிறிஸ்துமஸ் நெருங்கி வரும் நேரத்தில் கிறிஸ்துமஸ் என்றாலே பிளம் கேக் தான் எப்படி விநாயக சதுர்த்தி என்றால் கொழுக்கட்டையோ அது போல தான் கிறிஸ்துமஸ் ப்ளம் கேக் . ப்ளம் கேக் ஏன் முக்கியத்துவம் என்றால் ஐரோப்பிய நாடுகளில் அந்தகாலகட்டத்தில் போக்குவரத்து வசதி இல்லை மலை முடுக்குகளில் மைல் கணக்கில் நடந்து செல்ல வேண்டும் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் அப்பொழுது அதற்கான எனர்ஜியை இந்த ப்ளம் கேக் கொடுக்கும் .

20221024002008546.jpg

இந்த ப்ளம் கேக்கில் 12 வகை உலர் பழங்கள் மிக்ஸ் ஆகியிருக்கும் . உடன் வாசனை பொருட்கள் இருக்கும் .இதனுடன் மது பானங்கள் சேர்க்கப்படும் .இது எதற்கு என்றால் கேக் மிக்ஸை பாதுகாக்க பிரேசெர்வேட்டிவ் அப்பொழுதெல்லாம் கெமிக்கல் எதுவும் இல்லை . இந்த மது பானங்கள் ப்ளம் கேக் கெடாமல் பாதுகாக்கும் ,அதை சாப்பிடும் போது போதை ஏற்படுமா என்றால் இல்லை .அந்த கேக்கை பேக் செய்யும் போது ஆல்ககால் ஆவியாகி போய்விடும் . அதனுள் உள்ள வாசனை தன்மை மட்டும் மிஞ்சும் .

20221024002150939.jpg

ஒருமாதம் ஊறவைத்து பின் மைதா முட்டை நெய் தேன் வெண்ணெய் கொண்டு பேக் செய்து கேக்காக மாறும் .இந்த கேக்கை தான் நான்கு துண்டு சாப்பிட்டுவிட்டு குளிரில் மலை முகட்டில் நடந்து செல்வார்கள் அதிலும் வைனில் முக்கி அதை சாப்பிடுவார்கள் .வைனில் ஆன்டி ஆக்சிடென்ஸ் இருக்கும் மலையில் ஏறி நடந்து செல்லும் போது இதயத்தை பாதிக்காது .
ஏன் இந்த கேக் மிக்ஸிங் என்றால் கூடி கொண்டாட ஒரு சந்தர்ப்பம் தேவை அதனால் தான் இந்த கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழா நடத்த படுகிறது .
மிக்ஸ் செய்யப்பட்ட கேக் அடுத்த மாதம் ரெடியானவுடன் அதை பலர் வாங்கி சென்று கிறிஸ்துமஸ் இரவு அன்று 12 மணிக்கு மேல் அதன் மேல் ரம் ஊற்றி அதை பற்ற வைத்து , " ஹாப்பி கிறிஸ்துமஸ் பாடல் பாடி " கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கும் .


இந்த கேக்கை சுவைக்க ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் .அதே சமயம் ஒரு வருடத்திற்கு வைனில் முக்கி சுவைத்து கொண்டே இருக்கலாம் என்பது ஒரு த்ரில்லிங் தகவல் .

20221024002445417.jpg
உலகில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் 27 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை முதல் கிறிஸ்துமஸ் சீசன் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.