தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

பூர்வீக வீட்டில் கீர்த்தி சுரேஷ்

20221025071454697.jpg

நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்டாலினுடன் நடித்த மாமன்னன் படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்து சைரன் படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது கோயில் உறவினர் வீடுகளுக்கு செல்வது வழக்கம்.கீர்த்தி சுரேஷ் அம்மா பூர்வீகம் திருக்குறுங்குடி இது நாங்குநேரி அருகில் உள்ளது. தனது அம்மாவின் பூர்வீக வீட்டுக்குச் சென்று அங்கு தரையில் அமர்ந்து அனுபவித்து பாட்டி அம்மாவுடன் ஃபோட்டோ எடுத்து மகிழ்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்

யானை பராமரிப்பாளராக நயன்தாரா

20221025071640472.jpg

நயன்தாராவின் 81 வது படம் பற்றி விக்னேஷ் சிவன் தரும் தகவல் இது இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் எங்கள் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு பெயர் இன்னும் தீர்மானமாகவில்லை. .இந்தப் படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இவர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் காக்கி சட்டை தனுஷ் நடித்த கொடி பட்டாசு ஆகிய படத்தை இயக்கியவர் இந்தப் படத்தில் நயன்தாரா யானை பராமரிப்பாளராக நடிக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.

ஜெயிலர் வேடத்தில் எமி ஜாக்சன்

20221025071930960.jpg

அச்சம் என்பது இல்லையே ஏ.எல்.விஜய் இயக்கும் படம் இது இதில் அருண் விஜய் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடிக்கிறார்கள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்தது இப்போது லண்டன் சிறைச்சாலை போல் சென்னையில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்தது இந்தப் படத்தில் எமி ஜாக்சன் ஜெயிலர் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு சில சண்டைக் காட்சிகளும் உண்டு அதற்காக அவருக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது.

மஞ்சிமா மோகன் திருமணம்

2022102507220108.jpg

கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் சமீபத்தில் அவர்கள் நிருபர்களை சந்தித்து நாங்கள் இருவரும் நவம்பர் 28ஆம் தேதி எளிய முறையில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் இது பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் என்று சொல்லி இருக்கிறார்கள் கூடவே திருமணத்துக்கு பிறகும் நாங்கள் நடிப்போம் நீங்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் நிருபர்களிடம் கேட்டுக் கொண்டார்கள்.

வாரிசு சிக்கல்

20221025072453943.jpg

விஜய் படத்துக்கும் சிக்கலுக்கும் எப்போதும் ஒரு ராசி உண்டு வாரிசு படத்துக்கும் சர்ச்சைக்கு பஞ்சமில்லை சென்னையில் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது உரிய அனுமதி இன்றி படப்பிடிப்பில் யானைகளை பயன்படுத்தியதாக விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது இது பற்றி காவல் தெரியும் விசாரிக்கிறது இது ஒரு பக்கம் வாரிசு படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. சங்கராந்தி அன்று தெலுங்கானா ஆந்திராவில் வாரிசு படம் ரிலீஸ் ஆகிறது ஆனால் தெலுங்கு திரையரங்க உரிமையாளர் சங்கம் நேரடியாக தெலுங்கில் தயாரிக்கப்படும் படத்துக்கு தான் முன்னுரிமை தரப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள் எனவே தெலுங்கு மாநிலத்தில் வாரிசு படத்துக்கு குறைவான திரையரங்குகள் தான் கிடைக்குமாம்