தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம்  -   123- ஆர் . ரங்கராஜ்

குரவை இராமானுஜதாஸர் திருநீர்மலை பற்றிய பாடல்
20240222090216170.jpg

குரவை இராமானுஜதாஸர் இயற்றிய நூற்றெட்டு திருப்பதி திருப்புகழ்

சிறந்த புலவரான குரவை இராமானுஜதாஸர் அருணகிரிநாதரின் திருப்புகழ் போன்ற அமைப்பில் நூற்றெட்டு திருப்பதிகள் மீது ஒரு பாடல் தொகுதியை இயற்றியுள்ளார்.

இந்நூலில் திருநீர்மலை பற்றிய பாடல் உள்ளது.

ஒரு விரசா நதிக் கிடைந்தொழிந்துன
பிரக்ருதி மாயையிற் கிடந் தலைந்திடு
முயிர்களெலாமு மொய்த் திடுங் கொடுங்கலி வசமாயே
யுழல் வதலான் மனப் பிரபஞ்ச சுந்தனை

விடுவதெ வாறடுத் தபஞ்ச விந்தரிய
மொழிவதே வாற்சித் துடம்ப தொன்றினை யியல்பாயே
தெரிவ தெவாறுனைத் தெரிந்து நின்பத
மடைவதெ யாறுரைப் சகந்த விர்ந்தொரு
செயலிலை யாதலிற் பிறந்தி றந்தலை -- வது தானே
திரமிதி னானொருத் தனந்த வஞ்சக
னறிவிலி பாவிகெட் டவம்ப னுன் செய
றெளிவதெ வாறு புத்திகந்து நின்சர் - ணருள்வாயே
அருவுரு வாகும் வத்துவென்று நின்றறி
வழிபர வாதியர்க் ககங்கு றைந்திட
வருமறை நால்விதத் தையுஞ்செழுந்தமிழியலாலே
வருடிரு வாய்மொழிப் ப்ரபந்த மந்திர
சொருபுகு வாகும்வத் துவென்று நின்றிரு
வடிமிசை பாடுமுத்தர் நங்கள் செண்பக - மகிழ்மாறர்
வருகருணேச சிற் பரம்ப தந்தரு
தசரத ராமச்சக்கரதுங்க பங்கச
வனிதை சலாப முக்ய மந்திர தந்திர நெடுமாலே
வளவயலூடு முத்துமிழ்ந்து சங்கின
மதியினி லாவெறிப் பவெங்க ணுந்தவழ்
வருதிரு நீர்மலைக் குகந்து நின்றருள் பெருமாளே.


(தொடரும்)