தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240222181229151.jpg

Heading : நாயன்மார்கள் புத்தக வெளியீடு மற்றும் விகடகவி மீட் !

Comment : பலே... பலே... விகடகவி மீட்டில் ஆரூர் சுந்தரசேகரின் 63 நாயன்மார்கள் தொடர் ஆன்மீக கட்டுரைகளைத் தொகுத்து புத்தக வெளியீடா?! எங்கேப்பா வீடியோ போடறேன்னு ஏமாத்திட்டீர்!

பிருந்தா, சிவானந்தம், பிரேம்ஜி , கொல்கத்தா

Heading : பப்லுவை காணவில்லை - ராம்

Comment : என்னய்யா இது அநியாயம்... நாயை காணவில்லை என்று போஸ்டரை வைத்து ஒரு செய்தியை போட்டிருக்கிறீர் ராம். இதெல்லாம் இங்க சாதாரணமப்பா... அதென்ன விவிஐபி வீட்டு உயர்ரக நாயா... உடனே கண்டுபிடிச்சு கொடுக்க! இங்க காணாமப் போன மனுஷனை கண்டுபிடிச்சு கொடுக்க ஆளில்லை... இதுல இது வேறயா?!

தஸ்லிமா பானு, ஆறுமுகம், டேவிட் , ராயபுரம், சென்னை

Heading : சமுக வலைதளங்கள் Vs பெண்கள் பாதுகாப்பு -II மரியா சிவானந்தம்

Comment : மரியா சிவானந்தம் எழுதிய சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு பற்றிய கட்டுரை மிகப் பயனுள்ளதாக இருக்கிறது. இதுபோன்ற கட்டுரைகளை அவர் தொடர்ந்து வெளியிடலாமே?;

பத்மாவதி பாலசுப்பிரமணியம் , திருவண்ணாமலை

Heading : உங்கள் அம்மாவியின் பெயர் என்ன ?? - பால்கி

Comment : இதுதான் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர மாநில அரசின் ஹைலைட் அரசியல் காமெடி. இதை வெச்சே பாராளுமன்ற தேர்தலில் இங்கு பாஜ அதிக தொகுதிகளை கைப்பற்றிடுமே..‌. தமிழகத்தில் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றதைப் போல்!

சிவராமகிருஷ்ணன், சுக்வீந்தர் சிங், விசாகப்பட்டினம்

Heading : தில்லையை நினை,தொல்லையை மற! -மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி

Comment : பேராசிரியர் பத்ரியின் 'தில்லையை நினை, தொல்லையை மற' ஆன்மீக கட்டுரையை படித்ததும் கோயில்களின் தல வரலாறுகள் மற்றும் அதுதொடர்பான வரலாற்று தகவல்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. அதை விகடகவியில் ஆரூர் சுந்தரசேகரும் பேராசிரியர் பத்ரியும் பூர்த்தி செய்வது மிக்க மகிழ்ச்சி.

ரேணுகா ஹரி ஜமுனா, பிரபாகரன் , பெங்களூர்

Heading : "ஆசிய கண்டத்தில் நம் நாட்டில் தான் ஆன்மீக ஒற்றுமை" - ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : தமிழகத்தில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில்தான் அனைத்து மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு ஆன்மீக வழிபாடுகள்தான் காரணமாக விளங்குகிறது என்பதை படிக்கும்போது இந்தியனாக நெஞ்சில் பெருமிதம் கொள்கிறது. இதே நிலை தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதே விகடகவி வாசகர்களின் வேண்டுதல். ஸ்வேதா அப்புதாஸுக்கு பாராட்டுகள்.

ராதா வெங்கட், மாயா குப்புசாமி , சென்னை

Heading : வாழ்வில் திருப்பம் தரும் திருப்போரூர் முருகன் கோயில்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : திருப்போரூர் முருகன் கோயிலுக்கு இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு தகவல்களை ஆரூர் சுந்தரசேகர் வழங்கிய விதம், பாற்கடல் அமுதத்தை அள்ளி பருகியது போலிருந்தது. விகடனின் பரணிதரனைப் போல், விகடகவியில் அவரது ஆன்மீக தொடர் பயணத்துக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செண்பகராமன், வித்யாசாகர், மல்லிகா, மதுரை

Heading : போடுங்கம்மா ஓட்டு !!!

Comment : கலக்கல் மீம்ஸ் தலீவா... ஒவ்வொண்ணும் ச்சும்மா நச்சுனு இருக்கு தலீவா! இந்தப் பார்த்தாவது ஜனங்க பணத்தை வாங்காம ஓட்டு போடுமா? இங்க இப்பவே வேட்டி, சேலைய வரிஞ்சு கட்டி 'கல்லா' ரெடியா ஆயிட்டாங்க. திருத்தவே முடியாது!

தங்கத்துரை, ஓமனா, பாலமுருகன் , வியாசர்பாடி

Heading : பத்து கட்டளைகள்- நமது நிருபர்

Comment : மிக அருமையான கட்டுரை மற்றும் 10 கட்டளைகள். இவற்றை காப்பி எடுத்து, அதை இந்தியில் மொழிமாற்றம் செய்து, எங்களின் அபார்ட்மெண்ட் மற்றும் பள்ளிகளில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எங்களாலான சிறு முயற்சி.

வைஷ்ணவி வாஞ்சிநாதன், சியாமளா விஸ்வம் , குர்கான், புதுடெல்லி

Heading : தமிழ்நாட்டில் தேர்தல் நடக்குமா ?-விகடகவியார்

Comment : எடப்பாடியார் சுயரூபத்தை மாற்றினாரோ இல்லையோ, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விகடகவியார் தனது சுயரூபத்தை விஸ்வரூபமாக மாற்றத் துவங்கிவிட்டார். இனி வாரா வாரம் சுடச்சுட தேர்தல் 'பித்தலாட்ட' செய்திகள்தான் அதிகளவில் எதிர்பார்க்கலாம். கோ அஹெட்!

ஹர்கிரண் சிங், லாவண்யா, ரோகித் , சிங்கப்பூர்

Heading : '... என்றான் அவன்!' (10) -என் குமார்

Comment : மரங்கள், காடுகள் வெட்டுப்பட்டு கொண்டே எதிர்காலத்தில் உயிர் வாழ காற்றே இருக்காதே... அப்போ, மூச்சை நிறுத்திக் கொள்ளாமல் என்ன செய்வது? செடியை வெச்சுட்டு, அதை தண்ணி ஊத்தி பாதுகாக்க மாட்டோங்கறாங்க. ஜனங்களும் அதை உணராமல் செடிகளை பிடுங்கி எறிஞ்சுட்டு போயிடறாங்க. தனக்கு வந்தால்தான் வலியும் வேதனையும் தெரியுது! இந்த கவிதை வரிகள் ஏற்படுத்திய தாக்கம்...

விஷாலினி, சவுந்தர்யா , பெங்களூர்

Heading : போதை தலைநகரம் தமிழ்நாடு? - விகடகவியார்

Comment : தமிழகத்தில் ஒவ்வொரு ஆட்சியில் ஒருவர் போதைபொருள் கடத்துவதுடன், சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சியினர், அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உரிய பங்களிப்பை வழங்குகிறார். பின்னர் அவர்களின் செல்வாக்குடன் கோலோச்சுகிறார். அடுத்த ஆட்சி மாறும்போது காட்சி மாறும்... ஆட்கள் மாறுவர். போதைபொருள் நடமாட்டம் மட்டும் என்றுமே மாறாது. தொடர்கதைதான்!

காதர் மொய்தீன், சிவசக்தி , ராமநாதபுரம்

Heading : காணாமல் போன கருத்து சுதந்திரம்

Comment : திமுகவை பொறுத்தவரை, இரட்டை முகம் கொண்டதுதான் என்பதுதான் ஆரம்ப காலத்தில் இருந்தே நிதர்சனம். ஆசிரியர்களை ஆளுங்கட்சியினர் என்றுதான் மதித்தனர்? அவர்களுக்கு ஜால்ரா போடும் சங்க நிர்வாகிகளுக்கு பதவி, வசதிவாய்ப்பு. ஆசிரியர்களிடமே பணம் வசூலித்து, அவர்களுக்கே ஆப்பு வைப்பர். கண், காது, வாயை மூடிக்கொண்டால் சம்பளம் வரும்... ஆனா, ஓய்வூதியம் வராது. ஓட்டை மாத்திப் போட வேண்டியதுதான்!

தமிழ்செல்வி, முத்துமனோகரன் , சிவகங்கை