தொடர்கள்
கவர் ஸ்டோரி
தேர்தல் திருவிழா-3- ஆர்.ராஜேஷ் கன்னா

20240220091121716.jpg

நன்றி: தினமணி

நாடாளுமன்ற தேர்தல் திருவிழா களை கட்ட தொடங்கி விட்டது. தமிழகத்தில் திமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை சூடாக அறிவித்து விட்டது. பல திமுக ஜாம்பவான்கள் வாரிசுகள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றதை பார்த்து பல திமுக வினர் அசந்து போய்விட்டனர்.

விட்டமின் “ப” இருந்தால் மட்டுமே நாடாளுமன்ற வேட்பாளர்களாக தகுதி பெற முடியும் என்ற நிலை தற்போது அரசியலில் எழுதப்படாத விதியாக உள்ளது.

தேர்தல் கமிஷன் ஒரு எம்பி தொகுதிக்கு 95 லட்சம் வரை செலவு செய்ய வேட்பாளருக்கு அனுமதியளித்துள்ளது.

தற்போது இருக்கும் விலைவாசியில் ஒரு எம் பி தொகுதிக்கு குறைந்த பட்சம் ரு 200 கோடிக்கு மேல் செலவு செய்ய வேண்டும் என்ற பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வாய்ஸாக உள்ளது.

திருமங்கலம் பார்மூலா ஓட்டிற்கு பணம் கொடுத்து வாக்களர்களை கவர்ந்து வாக்களிக்க செய்வது தற்போது இந்திய முழுமைக்கும் கொடிய நோயாக பரவி உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் கவலைப்படும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒரு பக்கம் போதை தரும் லகரி வஸ்துக்கள் மறுபுறம் ஓட்டிற்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் என்பதால் தேர்தல் கமிஷன் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தனது அதிகாரிகளை முடுக்கிவிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் என்பதால் வாக்களர்களும் விட்டமின் “ப” எந்த கட்சி அதிகம் தருகிறதோ அவர்களுக்கு வாக்கு அளிக்கும் முடிவில் இருக்கிறார்கள்.

கொள்கை , கோட்பாடு , பழைய கட்சிக்காரன் என்ற எந்த பாகுபாடும் வரும் தேர்தலில் எதிரொலிக்காது விட்டமின் ப மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்பது நிதர்சனம் என்று பெரிய கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்குமோ என்று வயிற்றில் புளியை கரைப்பதாக பேச்சு வருகிறது.

20240220091552705.jpg

2024 ஆண்டின் மாபெரும் காமடியாக இருக்க போவது பிரதான கட்சிகள் அளிக்கும் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் வரும் வாக்குறுதிகள். தேர்தல் முடிந்ததும் வழக்கம் போல் வாக்குறுதிகள் காற்றில் கரைந்து போகும் என்று வாக்காளர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

தேர்தல் வரும் போது மட்டும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலை குறையும், பெட்ரோல் –டீசல் விலை குறையும் , அதன்பின் தேர்தல் முடிந்ததும் இதன் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் என்பது ஏழை வாக்காளர்களின் குமுறலாக உள்ளது.

முன்பெல்லாம் தேர்தல் என்றால் தெரு முனை கூட்டங்களை மக்கள் ரசித்து கேட்டு வாக்களிப்பார்கள் .

இப்போது கூட்டத்திற்கு ஆள் சேர்க்க தலைக்கு ரு. 500 , குவார்டர் , பிரியாணி என்று பிரதான கட்சிகள் கொடுத்து கூப்பிடும் அளவிற்கு வந்துவிட்டது.

இதில் வந்து பங்கு பெரும் பொதுஜனம் அடுத்த நாள் வேறொரு கட்சி கூட்டம் நடத்தினால் அதில் சென்று கலந்து கொண்டு பணம் , லகரி வஸ்துக்கள் வாங்கி மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கின்றனர்.

மிஸ்டர் பொதுஜனம் எந்த கட்சி கூட்டத்திற்கு கூலிக்கு போகிறதோ அந்த கட்சியின் சின்னம் தோளில் துண்டு அணிந்து கொண்டு செல்கின்றனர்.

தமிழகத்திற்கு அடுத்த ஏப்ரல் 19 தேர்தல் ….அதற்குள் அக்னி பகவான் வெப்பம் எப்படி அடித்து தூள் கிளப்புவாரோ என்று வேட்பாளர்கள் இப்போதே நடுங்க தொடங்கி விட்டனர்.

கத்திரி வெய்யிலில் வரும் 100 F வெப்பம் இப்போதே தமிழகத்தினை சுட்டெரிக்க தொடங்கி விட்டது .

ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்கு பிறகு தான் மழை வாய்ப்பு என்று வானிலை நிபுணர்கள் தகவல் தந்துள்ளனர்.

இந்திய தேர்தலில் இந்த தடவை மோடி என்ற பிம்பத்தினை வெற்றி கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தாலும் வாரிசு அரசியல் , பதவி ஆசை ,சொத்துகுவிப்பு , வழக்குகள் என பல்வேறு ஆசைகளால் அனைவரும் பிரிந்து சென்று தனியாக நின்று ஜெயிக்க வேண்டும் என்று கூட்டணியில் இருந்து கழண்டு கொண்டு விட்டனர்.

20240220113657473.jpg

இந்த தேர்தல் மோடி என்ற தனிமனித இமேஜை இந்தியா கூட்டணியினர் உடைத்து வெற்றி காண முடியுமா என்பதே பில்லியன் டாலர் கேள்வியாக அரசியல் பார்வையாளர்கள் கேட்கிறார்கள்.

இந்திய அளவில் கொள்கைகள் பார்த்து வாக்களர்கள் வாக்கு அளிக்க போவதில்லை என்பதே தற்போதைய நிலவரம் .

ஆளும் பிஜேபி அரசு மீது எப்படிப்பட்ட ஊழல் குற்றசாட்டை முன் வைக்கலாம் என்று எதிர்கட்சிகள் போட்ட திட்டம் தவிடு பொடியாகி தேர்தல் தேதி அறிவிப்பு வந்துவிட்டது.

20240220091414680.jpg

அரசியல் வாதிகள் என்ன சொன்னாலும் அதை நம்ப மிஸ்டர் வாக்களர்கள் தயாராக இல்லை என்பதே இந்த தேர்தல் திருவிழாவின் முதற் கட்ட கணிப்பாக உள்ளது.