தொடர்கள்
தேர்தல் ஸ்பெஷல்
" தேர்தல் பணியில் அலைக்கழிக்க பட்ட ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் " - நமது நிருபர் .

கடந்த வாரம் தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவுக்கு முழு காரணம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தான்.

20240325235410587.jpg

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தேர்தல் ஆணையத்தின் நேரடி கொத்தடிமைகளாக மாற்றப்படுகிறார்கள் .

ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு என்பது மிரட்டலாகவே இருப்பது வேதனையான ஒன்று .

கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் வகுப்பு அதிரடியாக நடத்த பட்டது .

அன்று கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு குருத்தோலை ஞாயிறு அன்று வகுப்புகளை வைத்தது கிறிஸ்தவர்களை புண் படுத்துவதாக இருந்தது என்று கூறுகிறார்கள் .

கன்னியகுமாரி நாகர்கோயில் ஊழியர்கள் குருத்து ஞாயிறு அன்று தேர்தல் வகுப்புக்கு வரமுடியாது என்று அழுத்தம் கொடுக்க அந்த மாவட்டத்தில் மாற்றியமைத்தார்கள் .

நீலகிரி மாவட்டத்தில் 22 ஆம் தேதி வகுப்பு என்று அறிவித்து பின் தேர்தல் அதிகாரிகள் குருத்து ஞாயிற்று கிழமை தான் நடத்த வேண்டும் என்று நடத்தினார்கள் .

இந்த நாளில் வகுப்புக்கு வராத ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஷோ காஸ் நோட்டீஸ் கொடுத்து மிரட்டினார் மாவட்ட ஆட்சியர் அருணா .

மற்ற ஒரு அதிரடியை நீலகிரியில் நடத்தினார்கள் தேர்தல் அதிகாரிகள் .

முதல் வகுப்புக்கு வராத ஊழியர்களை வலுக்கட்டாயமாக மிரட்டி அரசு விடுமுறையான புனித வெள்ளி அன்று தேர்தல் வகுப்பு நடத்தினார்கள் .

வருவாய் அலுவலரிடம் அன்று வகுப்பு வேண்டாம் என்று சில அலுவலர்கள் எடுத்து கூற முடியாது, அந்த நாளில் தான் நடத்த வேண்டும் என்று கூறி நடத்த கிறிஸ்தவ ஊழியர்கள் பகல் 3 மணிக்கு ஆலயங்களில் ஏசு இறப்பு நினைவு வழிபாட்டில் கலந்துகொள்ள அனுமதி கேட்க வருவாய் அலுவலர் முடியாது என்று போனில் கூற ஊழியர்கள் தாங்களாகவே எழுந்து சென்றுவிட்டனர் .

அடுத்த வகுப்பு எந்த தொகுதியில் பணிக்கு அமர்த்தப்படுகிறார்களோ அங்கு நடக்கும் என்ற உத்தரவை பிறப்பித்து ஏப்ரல் 7 ஆம் தேதி ஞாயிற்று கிழமை வைத்தனர் .அதில் ஒரு ஆறுதலான விஷயம் பெண் ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அவர்களின் தொகுதிக்கு உட்பட்டு பயிற்ச்சி வகுப்பு நடைபெற்றது .

2024032523553489.jpg

காலை முதல் மாலை வரை ஒரே தேர்தல் விடீயோவை திருப்பி திருப்பி போட அனைவருக்கும் தூக்கம் தான் வந்ததாம் .

20240325235744918.jpg

மதிய உணவு கடும் வெயிலில் பள்ளி மைதானத்தில் சிறை கைதிகளுக்கு போடுவது போல போட்டனர் என்று கூறினார்கள் ஊழியர்கள் நம்மிடம் .

மீண்டும் 13 ஆம் தேதி அதே மையங்களில் தேர்தல் வகுப்பு என்ற பெயரில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக அழைத்து அமர செய்ததை என்ன சொல்வது என்று வருத்த பட்டனர் .

இதில் மேல்நிலை உயர்நிலை ஆசிரியர்களுக்கு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை ஆரம்பித்தனர். கல்வி தேர்வு துறை தேர்தல் மற்றும் விடை தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வெறுத்து போயினர் .

இந்த தேர்தல் வகுப்பு முடிந்து வரும்போது கோவை மாவட்டத்தில் ஒரு ஆசிரியர் சாலை விபத்தில் சிக்கி இறந்து போயுள்ளார் .

18 ஆம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் அந்தந்த வாக்குசாவடிகளுக்கு சென்று மிக மோசமான கசப்பான அனுபவத்தை சந்தித்துள்ளனர் .

சரியான உணவு வசதி கழிப்பறை வசதி படுக்க வசதியில்லாமல் துக்கம் இல்லாமல் தவித்துள்ளனர் .

சில இடங்களில் சம்பத்தப்பட்ட ஆர் ஐ மற்றும் வி ஏ ஒ மூன்று வேளையும் உணவு கொடுத்து உபசரித்ததை மறக்க முடியாது என்று கூறுகின்றனர் .

ஒரு ஊழியர் கூறும்போது தேர்தல் அன்று அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து ரெடியாகி மாதிரி ஓட்டு போட்டு சரிபார்த்து சரியான நேரத்தில் தேர்தல் நடத்தி முடித்த பின் தான் தலைவலி சார் , ஏகப்பட்ட தேவையற்ற உரைகள் அதை சரி செய்ய மண்டை உடைந்து விடும் .மண்டல அதிகாரிகள் இ வி எம்மை எடுத்து செல்ல வெகு நேரம் அது ஒரு கொடுமை .

அந்த இரவில் ஒரு உணவும் கிடைப்பதில்லை .

20240325235851264.jpg

ஸ்ரீரங்கம் தொகுதி 139 ஆம் வாக்குசாவடியில் ஓட்டு பதிவு முடிந்த எல்லா பணியும் முடித்தும் இ வி எம்மை எடுக்க அடுத்த நாள் காலை தான் வந்து எடுத்துள்ளனர் .

அங்கு பணிபுரிந்த தேர்தல் அதிகாரிகள் பட்ட பாடு சொல்லி மாளாதது . எந்த வசதியும் இல்லாமல் அவதிக்குள்ளானோம் என்கின்றனர் அந்த ஊழியர்கள் .

இதை விட கொடுமை தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் கமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தேர்தல் பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார் .

அதே போல இராமலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் செல்வராஜ் வீரகனுர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பணி முடித்து இரவு 2.30 மணியளவில் விபத்தில் சிக்கி அகலா மரணமடைந்துள்ளார் .

பெத்தநாயக்கன்பாளையம் சேர்ந்த ஜான் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சில்வியா கேத்தரின் அனிதா ஆசிரியை தேர்தல் பணிக்காக ஏத்தாப்பூரில் இருந்து ஆத்தூர் நோக்கி பைக்கில் செல்லும்போது நாய் குறுக்கே வர விபத்து ஏற்பட்டு ஜான் பிரகாஷ் தலையில் அடிபட்டு இறந்து போனார் . சில்வியாவுக்கு கையிலும் கன்னத்திலும் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் உள்ளார் .

இந்த உயிர்கள் பறிபோனதை பற்றி தேர்தல் ஆணையத்திற்கு கவலை இல்லை .

தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல எந்த பொது போக்குவரத்து வசதி செய்து கொடுக்கவில்லை .

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒரு வாக்கு சாவடியில் சிறுத்தை விசிட் இருந்துள்ளது அதை பற்றி கூட தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை

தேர்தல் ஆணையத்தின் தேவையற்ற அழுத்தத்தால் பெருபாலான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மனஅழுத்ததால் வேதனையுடன் இருக்கிறார்கள் இன்னும் .

இனியாவது தேர்தல் ஆணையம் தன் அராஜக கொத்தடிமை போக்கை கைவிடுமா .

ஒரு விஷயம் நீயா நானா கோபிநாத் கூறியுள்ளார் , தேர்தலின் வெற்றிக்கு காரணம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தான் என்பது ஆறுதலான ஒன்று .