
கமல் தயாரிக்கிறார்...
ரஜினி நடிக்கிறார் ....
சுந்தர் சி இயக்குகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்ட அறிவிப்பு நான் இந்த படத்தில் இல்லை என்ற ஒரு அறிக்கையோடு சுந்தர்.சி கழன்று கொண்டு விட்டார்.
சுந்தர்ச்சியை பொறுத்தவரை ரொம்பவும் பிரபலமாகாத நடிகர்களை வைத்து சக்சஸ் கொடுத்தவர்.
கமலைப் பொறுத்தவரை இந்த படத்தில் நான் தயாரிப்பாளர் மட்டும்தான் கதை எல்லாம் முடிவு செய்ய வேண்டியது ரஜினி தான் என்று அவரை கைகாட்டி விட்டார்.
சுந்தர்.சி சொன்ன இரண்டு கதைகள் அதில் ஒரு கதை பேய் தொடர்புடையது இரண்டுமே வேண்டாம் என்று மறுத்து விட்டார்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்" சீக்கிரம் கதையை தயார் செய்யுங்கள் நாம் பிப்ரவரி மாதம் சூட்டிங் போக வேண்டும்" என்று கமல் சொல்லி இருக்கிறார்
சுந்தர்.சி ஒரு விஷயத்தை கமலிடம் தெளிவுபடுத்தினார்.
"சார் அழுத்தம் எல்லாம் கொடுத்தால் என்னால் யோசிக்க முடியாது. தவிர பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு நடத்த வாய்ப்பே இல்லை.நான் இப்போது இயக்கி வரும் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு பிப்ரவரியில் தான் முடிவடைகிறது. அதன் பிறகு நான் உட்கார்ந்து ஒரு நல்ல கதையை யோசித்து ரஜினி சாரிடம் சொல்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.
கமல் பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்று உறுதியாக இருந்திருக்கிறார் .
அப்படி என்றால் 'நீங்கள் வேறு இயக்குனரை வைத்து படம் பண்ணிக் கொள்ளுங்கள்' என்று கழன்று கொண்டார் சுந்தர்.சி.
கமலுக்கு நெருக்கமான சில ஆலோசகர்கள் தனுஷ் இப்போது சிறந்த இயக்குனராக வரத் தொடங்கி இருக்கிறார் அவரிடம் பேசினால் என்ன என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது பற்றி ரஜினிிடம் பேசிய போது அவர் இயக்குனர் நான் நடிகர் அவ்வளவு தான் என்று அவரும் கிட்டத்தட்ட ஒப்புக் கொண்டு விட்டார்.
படப்பிடிப்பில் ஏதாவது மரியாதை குறைவாக சம்பவம் சங்கடம் என்றால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று கமல் யோசிக்கிறார்.
கடைசியாக கிடைத்த தகவல் படி நெல்சனுக்கு அந்த வாய்ப்பு என்கிறார்கள்.

Leave a comment
Upload