தொடர்கள்
கவர் ஸ்டோரி
தனித்தீவில் விஜய்??!-விகடகவியார்

20251021163413267.jpg

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் நடத்திய போராட்டத்தில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் பேர் கலந்து கொண்டார்கள்.

வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தை கண்டித்து போராட்டம் நடத்திய நிர்வாகிகள் எல்லோரும் திமுக வைத்தான் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணி குளறுபடி பற்றி விஜய் வெளியிட்ட வீடியோவிலும் அவர் மோடி அல்லது பாஜகவை விமர்சனம் செய்யவில்லை.

"நாங்கள் சந்திக்க இருப்பது சட்டமன்றத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலில் எங்கள் பிரதான எதிரி திமுக தான். இப்போ எதற்கு நாங்கள் பாஜகவை விமர்சனம் செய்ய வேண்டும். எங்கள் தளபதிக்கு பாஜகவை எப்போது போட்டு தாக்க வேண்டும் என்று தெரியும். அப்போது திமுகவை விட நாங்கள் கடுமையாக பாஜகவை எதிர்ப்போம்" .கூட்டணி பற்றிய கேள்விக்கு அதெல்லாம் ஜனவரி மாதம் நடக்கும் என்கிறார்கள் தமிழக வெற்றி கழக கட்சியினர் பலர் .

காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழக தலைவர் விஜயுடன் பேசினார்கள் என்று ஒரு ஆங்கில பத்திரிக்கை செய்தி வந்த போது அப்படி எல்லாம் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று கட்சியின் நிர்வாகி அருண் ராஜ் அறிக்கை வெளியிட்டார்.

கார்த்திக் சிதம்பரம் சில வருடங்களுக்கு முன்பு ராகுல் காந்தியை சந்தித்து விஜய் பேசியது உண்மை.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டும் என்று கேட்டார் என்கிறார்.இது பற்றி விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தில் கேட்டபோது !இதெல்லாம் பழைய கதை புதிதாக ஏதாவது சொல்லுங்கள்! என்கிறார்கள்..

காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா 40 முதல் 60 இடங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அப்படி இருக்கும் போது பாரதிய ஜனதாவுக்கு அதிமுக எத்தனை தொகுதிகள் கொடுக்கிறதோ அதைவிட திமுக எங்களுக்கு கூடுதலாக தர வேண்டும் இல்லையென்றால் நாங்கள் அணி மாறுவது பற்றி யோசிப்போம் என்கிறார்கள்.

இதையெல்லாம் ராகுல் காந்தி ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு பீகாரில் மிகப்பெரிய பின்னடைவு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுகவுடன் முரண்டு பிடிக்குமா என்பதும் சந்தேகம்தான். .

தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தளபதியின் வேகம் பத்தாது இன்னும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்க வேண்டும்.

வாக்காளர் சிறப்பு திருத்தம் என்பது மிகவும் பழைய விஷயம். .அது எல்லாம் ஓகே சொல்லி பீகாரில் தேர்தலே நடந்து முடிந்து விட்டது.

திமுக ஒரு பக்கம் இதை எதிர்த்தாலும் இன்னொரு பக்கம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தீவிரமாக இறங்கி இருக்கிறது .

திமுகவை எதிர்த்து போராட வேண்டிய பிரச்சினைகள் பல இருக்கின்றன அவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள்..

இதன் நடுவே வரும் டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி விஜய் மனு செய்து இருக்கிறார். அன்று கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவதால் வேறு தேதியில் விண்ணப்பியுங்கள் என்று சேலம் காவல்துறை ஆலோசனை வழங்கி இருக்கிறது.