தொடர்கள்
பொது
சபரிமலையில் தொடரும் பக்தர்களின் அவதி – பால்கி


20251021223001189.jpg

2025-26க்கான மண்டல மகர புண்ணிய காலம் கார்த்திகை 1, அதாவது 17 நவம்பர் 2025 ஆரம்பித்துவிட்டது. என்றாலே, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கொண்டாட்டம் தான்.

நாடெங்கும், இல்லை இல்லை, உலகெங்குலுமிருந்து ஐயப்ப பக்தர்கள் ஆறு வாரம் நோன்பிருந்து சபரிமலை ஐயப்பனைக் காண வரத் தொடங்கிவிட்டார்கள்.

சபரிமலையில் திருக்கோயிலும் மண்டல மகர புண்ணிய கொண்டாட்டத்திற்காக நவம்பர் 16 மாலை திறக்கப்பட்டது.

அதே நேரத்தில்,

கீழே தரப்பட்ட சபரிமலையில் இரண்டாம் நாளில் (18.11.2025) எடுக்கப்பட்ட வீடியோவைப் பாருங்கள். முதல் நாளிலிருந்தே இப்படித்தான் கட்டுக்கடங்காத கூட்டமாம்.

20251021223150366.jpg

https://youtube.com/shorts/CmBdKkXXqj0?si=9wR9h90VpVkESJmQ

மேலும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தனது x தளத்தில் கொடுத்துள்ள வீடியோவும் கடந்த ஐந்து தினங்களில் காணும் பக்தர்கள் படும் அவல நிலையை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

மேலும், அதில் அவர், “ஆண்டுதோறும், நாத்திக இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் அலட்சியத்தால் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தவிர்க்க முடியாத சிரமங்களை அனுபவித்து வருவதைப் பார்ப்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.

இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் மோசமான முன்னேற்பாடு மற்றும் தவறான நிர்வாகத்தால் நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒருபுறம், பக்தர்களுக்கான அத்தியாவசிய சேவைகள் போதுமானதாக இல்லை; மறுபுறம், ஐயப்ப சேவா சங்கம், அமிர்தானந்தமயி மடம் மற்றும் சுப்பிரமணிய மத அறக்கட்டளை போன்ற அமைப்புகள் தங்கள் தன்னார்வ ஆதரவை வழங்குவதில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மிகவும் கவலையளிக்கிறது.

சபரிமலை வெறும் புனித யாத்திரைத் தலம் மட்டுமல்ல; அது நம் நாட்டில் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஆன்மீக நங்கூரமாகும். ஒரு அரசாங்கம் செய்யக்கூடியது, அதன் பொறுப்பை நேர்மையுடனும் மரியாதையுடனும் நிலைநிறுத்துவதாகும்”.

ஜனவரி 27, 2024 அன்று நமது விகடகவில் வெளியான “தொடரும் அவல நிலை ! சொல்ல முடியாத சிரமங்கள் !! சபரி மலையிலிருந்து நேரடி ரிப்போர்ட்” கட்டுரையும் இதையே படம் பிடித்து காட்டுகிறது. அந்த கட்டுரையின் லிங்க் இதோ.

https://www.vikatakavi.in/magazines/354/12441/Continuing-difficulties-in-sabarimalai-a-on-the-spot-report.php

அதில் நான் பக்தர்களின் அவதிகளை மட்டும் சொல்லிவிட்டு நிறுத்தாமல், அந்த கடினங்களை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதையும் சொல்லியிருக்கிறேன். முத்தாய்ப்பாக, மேற்கூறியவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரியிடமும் நேரிலேயே விரிவாக எடுத்துரைக்கும் அவகாசமும் கிடைத்தது.

அவற்றில் சிலவற்றை நிவர்த்தி செய்யும் முறைகளில் நிர்வாகம் இறங்கியிருப்பதை அவரும் பின்னாளின் எனக்கு சொல்லியிருக்கிறார்.

இருந்தும், இந்த கூட்ட நெரிசல் பிரச்சினை பூதாகாரமாக இருப்பது வேதனை தருகிறது. போலீஸின் கயாலாகாத்தனத்தைக் காண்பிக்கிறது என்று ஐயப்ப பக்தர்கள் கூறுகிறார்கள்.

சபரிமலை மூலம் கேரள அரசுக்கு எக்கச்சக்க வருவாய். இருந்தும் அந்த பணத்தை அள்ளிக்கொட்டும் பக்தர்களுக்கு என்று ஏன் வசதிகளைச் செய்து கொடுக்க மறுக்கிறது.

சாஸ்தா தாஸன், டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், இது பற்றி கூறுகையில், ” இங்கு இரண்டு பக்கமும் தப்பு செய்கிறார்கள். பக்தர்கள் முறை தவறி நடந்து கொள்வதை மறுக்கமுடியாது. எனினும், தினம் ஒன்றுக்கு எழுபதாயிரம் பக்தர்களுக்கு முன்னனுமதி சீட்டு முன் பதிவு கொடுத்துவிட்டு ஸ்பாட் புக்கிங்க் என்று தினம் ஒன்றுக்கு மேலும் எழுபதாயிரம் பக்தர்களுக்கு என்று அனுமதித்தால் தினப்படி ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பக்தர்களை அவர்களால் கன்ட்ரோல் செய்யுமளவிற்கு முன்ன்னேற்பாடில்லாமல் போய்விட்டது. என்று தான் தோன்றுகிறது. அதுதான் முக்கிய காரணம்” என்று கூறுகிறார்.

போலீஸ் அடக்குமுறை இவ்வளவு கூட்டத்திற்கு நல்லதல்ல. பக்தர்களை பாங்கான முறையில் நடத்த வேண்டும். அங்கு வரும் பக்தர்களில் பெண்களும் வயதானவர்களும் சிறுவர்களும் உண்டே. அதிலும் அனைவரும் ஆறு வாரம் கடும் விரதமிருந்து வருகிறவர்களாயிற்றே.

மாநில அரசு தன் தார்மீக பொறுப்பை ஏற்று பக்தர்களின் நலனில் அக்கரையுடன் அணுகினால் நிலமை சீரடைய நிச்சயம் வாய்ப்புண்டு. இதற்காக அரசு, தன்னார்வலத் தொண்டு நிறுவனங்களின் உதவி கிடைப்பின் அதையும் ஏற்று உபயோகத்தில் விடுவது தவறில்லை. இது போன்ற தன்னார்வலர்களை நாடெங்கிலும் உள்ள பெரிய கோயில்களில் சேவை செய்வதை நாம் பார்த்திருக்கின்றோமே.

இனி வரும் நாட்களில் பக்தர்களின் குறைபாடுகள் குறைந்திடும் என்று வேண்டுவோம்.