தொடர்கள்
கவிதை
சத்ய சாய் பாபா ! ஒரு பாமாலை !!  - சி. கோவேந்த ராஜா.

20251022084521575.jpeg

ஓம் சாய் ராம் ...

புட்டபர்த்தி வாசன்...பாபா ...

புண்ணிய பூமி நேசன்...பாபா...

தெய்வீகப் பெற்றோர் -

மீசரகண்ட ஈஸ்வரம்மா ..

ரத்னாகரம் பெத்தவெங்கட் ராயூ ...

அருளிட்ட.... சத்ய நாராயணன் ...பாபா ...

அருட் பார்வையால் ...

அன்பினைப் பொழிந்திடும் ...

அழகு அன்னை - பாபா...

ஆனந்தப் பார்வையால்....

ஆசிகள் அருளிடும்...

அன்புத் தந்தை - பாபா...

இன்முகப் பார்வையால் ...

இனிய சேவைகள் செய்திடும்...

அற்புத... ஆன்மீக... குரு பாபா...

ஈகைப் பண்பினால்...

ஈரெட்டுச் செல்வங்கள்...பெருக்கிடும்...

ஈடில்லா ...இறை மனிதம் ...பாபா...

உலகாளும் ஈசனின் ...

உண்மை...வடிவம்... பாபா...

ஊழ்வினை வீரியம் போக்கிடும்...

உன்னத மருத்துவர்.. பாபா...

எல்லையில்லா ...

கருணைக் கடல் ...பாபா...

ஏழ்மையை விரட்டி...

ஏற்றம் பெறச் செய்திடும்...

மனித நேயப் புனிதர்.. பாபா..

மக்கள் சேவையே...

மகேசன் சேவை ... எனப் போதித்து..

செங்கோல் ஏந்தி...செயலாற்றிடும்...

வெள்ளுடை வேந்தர்... பாபா...

அமைதியின் உறைவிடமாம் ...

பிரசாந்தி நிலையம் - நிறுவி...

சேவை ஒன்றையே ....

குறிக்கோளாக்கி....

கல்வியில் புரட்சி...

மருத்துவத்தில்...வளர்ச்சி...

ஆன்மீகத்தில் மலர்ச்சி...

படைத்திட்ட...

தியாகத்தின் வண்ணமாம்...

காவி உடை ...

அணிந்திட்ட ...

பண்பாளர் - பகவான் பாபா...

மத நல்லிணக்கம் ..

கண்டிட்ட...

காப்பாளர் - மகான் பாபா...

சத்தியம் - தர்மம் -

அமைதி - அஹிம்சை -

இறை பக்தி - பரவிட...

பல்கிப் பெருகிட...

தர்ம ஸ்தூபி ஸ்தாபித்த...

தான தர்ம...

வகுப்பாளர் - வள்ளல் பாபா...

உடல் -

உறுதி பெற வேண்டும்...!

மனம் -

மென்மையும் ... மேன்மையும்...

பெற வேண்டும்...!

எனக் கருதி... வலியுறுத்தி...

உறுதி மிக்க...

தர்ம ஸ்தூபியில்..

தாமரை வடிவம் வடித்திட்ட ...

தான தர்ம...

தாளாளர் ...பாபா...

திருவருள் ...

புரியுங்கள் பாபா...!

குருவருள் ...

தொடர்ந்து...தாருங்கள் பாபா...!

''மானஸ பஜரே குரு சரணம்

துஸ்தர பவ சாகர தரணம்."

ஓம் சாய் ராம் ...