பூஜா ஹெக்டே

தனுஷின் 55-வது படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்க இருக்கிறார். இசை இளம் இசையமைப்பாளர் சாய் அபய்ங்கர்.
வில்லன்
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ஆர்யா.
சந்தானம்
கதாநாயகன் நடித்த படங்கள் பெரிய அளவு பேசப்படாததால் மீண்டும் காமெடியனாக மாற முடிவெடுத்து இருக்கிறார் சந்தானம். சிம்பு நடிக்கும் படம் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 காமெடியனாக நடிக்கப் போகிறார். இதைத்தொடர்ந்து அவரது ஆஸ்தான இயக்குனர்களும் காமெடி வேடத்தில் நடிக்க அழைப்பு விடுக்கிறார்கள்.
கல்யாணி பிரியதர்ஷன்

ஏற்கனவே ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கல்யாணி பிரியதர்ஷன் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன்
அடுத்த தளபதி நான் தான் என்று பேசப்பட வேண்டும் அப்படிப்பட்ட கதைகளுடன் என்னிடம் வாருங்கள் என்கிறார் சிவகார்த்திகேயன்.
ரஷ்மிகா மந்தனா

முதல்முறையாக தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக ராஷ்மிகாவுக்கு ஆயிரம் பேர் மத்தியில் அவர் முத்தம் கொடுத்த வீடியோ வைரல் ஆகி உள்ளது. "தி கேர்ள் ஃப்ரெண்ட்" பட சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் எல்லோரும் சந்திக்கிறார் விஜய தேவர்கொண்டா. அப்போது அங்கு வரும் ராஷ்மிகாவின் கையை பிடித்து அவரது வலது கையில் முத்தம் தருகிறார். இந்த வீடியோ தான் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
துருவ் விக்ரம்
மணிரத்தினம் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
சூர்யா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு படம் ரிலீசுக்கு தயார்தான். ஆனால், பொங்கலுக்கு விஜய், சிவகார்த்திகேயன் படங்கள் வெளியாவதால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று ஜனவரி இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று சூர்யா யோசனை சொல்லியிருக்கிறார்.
கீதா கைலாசம்
விபின் ராதாகிருஷ்ணன் இயக்கும் படத்துக்கு பெயர் அங்கம்மாள். இந்தப் படத்தில் அங்கம்மாளக நடிக்கும் கீதா கைலாசம் ரவிக்கை இல்லாமல் நடிக்கிறார். பீடி சுற்றும் வேடத்தில் நடிக்கும் இவர் படத்திற்காக சுருட்டு பிடிக்கும் பயிற்சியிலும் தற்சமயம் ஈடுபட்டு வருகிறார்.
நிஹாரிகா

நடிகை நிஹாரிகா கடந்த மார்ச் மாதம் வெளியான 'பெருசு' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சமூக வலைதளத்தில் நான் மிகவும் பிரபலம் எனக்கு 3.5 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர் .அதன் மூலம் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்கிறார் இந்த நடிகை.
பார்ட்டி '
வெங்கட் பிரபு இயக்கத்தில் சத்தியராஜ், ஜெய், ஷாம், சிவா ,ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன் ,நிவேதா பெத்துராஜ், ரெஜினா கசன் டிரா சஞ்சிதா ஷெட்டி cஆகியோர் நடித்த படம் 'பார்ட்டி ' இந்தப் படத்திற்கு வெங்கட் பிரபு தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைத்தார். இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை ஆக்சன் படம். 2018-ஆம் ஆண்டு இந்த படத்துக்கான அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கும் தயாராக இருந்த போதிலும், படத்தின் தொடர்புடைய நிதி பிரச்சனைகள் மற்றும் படம் முழுக்க ஃ பிஜி தீவில் படமாக்கப்பட்டதால் அதற்கான சான்றிதழ் கிடைப்பதற்கான தாமதம் காரணங்களால் வெளியீடு தடை பட்டது. இப்போ இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது. இந்தப் படத்தை 2026 பிப்ரவரி தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றது
நந்திதா ஸ்வேதா

"சினிமாவில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ஒரு படம் ஹிட்டானதும் நான் பெரிய ஆள் என்று நினைத்து விடக்கூடாது. ஒரே படத்தில் யாரும் கோடி கோடியாக சம்பாதிக்க முடியாது சாதனையிலும் சம்பளத்திலும் படிப்படியாகவே முன்னேற முடியும் "என்கிறார் நந்திதா ஸ்வேதா .
ஆண்ட்ரியா
"வடசென்னை படத்தில் நடித்த 'சந்திரா 'கதாபாத்திரத்திற்கு பிறகு எந்தப் பட வாய்ப்புகளும் வரவில்லை. ஆனால் பாராட்டுக்கள் கிடைத்தது. உண்மையில் பல நடிகர்கள் அவர்கள் படங்களில் பவர்ஃபுல் பெண் கதாபாத்திரத்தை விரும்புவதில்லை "என்கிறார் நடிகை ஆண்ட்ரியா
காதல் குறித்து ..

தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்கு மெய்ன்'இந்தி படம் வரும் 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது முழுக்க முழுக்க காதல் கதையாகும். இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் இந்த படத்தின் கதாநாயகன் தனுஷிடம் காதல் பற்றி கேள்விக்கு "காதல் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்று நினைக்கிறேன் "என்று பதில் சொல்லியிருந்தார் தனுஷ். இதே கேள்வியை அவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சனோனிடமும் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் இது. "நான் காதலை முழுமையாக நம்புகிறேன். உண்மையான மற்றும் ஆழமான காதலுக்கு பல வரையறைகள் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் நீங்கள் காதலுக்காக மாற வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். தயக்கமின்றி ஒருவருடன் சிரிக்க முடிந்தால் அதுதான் காதல் "என்று பதில் சொன்னார் நடிகை.

Leave a comment
Upload