தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20251021074903808.jpeg

தமிழக வெற்றி கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர் .

அது இருக்கட்டும் அவங்க எல்லாம் பத்திரமா வீட்டுக்கு போய் சேர்ந்தாங்காள அத சொல்லுங்க !!

தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது ஆ.ராசா கடும் தாக்கு.

தேர்தல் மாசம் நெருங்க நெருங்க ரொம்ப பயப்படுறீங்க பாவம் !!

பீகார் தேர்தலில் 14000 கோடி உலக வங்கி நிதி பயன்படுத்தப்பட்டது பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு..

எல்லோருக்கும் ஜெயிக்க வழி சொல்லிக் கொடுத்த உங்களுக்கு ஜெயிக்க வழி தெரியலையே .

வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெல்ல வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

அப்ப மீதி 34 தொகுதி தான் கூட்டணி கட்சிகளுக்கா ?

பீகார் சட்டமன்றத் தேர்தல் அனைவருக்கும் ஒரு பாடம் முதல்வர் கருத்து.

நீங்கப் பிரச்சாரத்துக்கு போனீங்க இல்ல ?

தேர்தலில் விஜய்க்கு தோல்விதான் அடித்துச் சொல்லும் அண்ணாமலை.

சீச்சி இந்த பழம் புளிக்கும் !!

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

இதத்தான் அப்பவே காந்தி சொன்னாரு! இப்ப பாலாஜி சொல்றாரு !!

ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை தேர்தல் முடிவு குறித்து லாலு பிரசாத் கட்சி கருத்து.

அதாவது அரசியலில் இதெல்லாம் சகஜம் என்கிறார்கள்.

சாதாரண ஆளாக இருந்த நான் அமைச்சராக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் தொகுதி மக்களிடம் அமைச்சர் பி.மூர்த்தி உருக்கம்.

அதாவது மறுபடியும் எனக்கே ஓட்டு போடுங்கன்னு சொல்றார் !!

பீகார் தேர்தல் முடிவை விமர்சனம் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் கமலஹாசன் எம்பி புது விளக்கம்.

எனக்கு என்னவோ உங்க பேச்சு புரியாமல் பயந்து போய் தான் சுந்தர் சி ஓடிட்டாருன்னு சந்தேகமா இருக்கு ?

நாங்கள் வென்றால் துள்ளி குதிப்பதும் இல்லை, தோல்வி அடைந்தால் கவுந்து படுப்பதும் இல்லை செல்வப் பெருந்தகை.

ஆமா ,நியூயார்க் யூரோப் என்று கிளம்பி விடுவோம் !!

குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் விஜய்.

ஆமா விஜய் கூட்டத்துக்கு அழைத்து போவேன்னு அம்மாக்கள் பிடிவாதம் பிடிக்க கூடாது !!

கல்வியில் மாணவர்கள் முன்னேறினால் குடும்பம் முன்னேறும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

யாரோட குடும்பம்னு சொல்லல பாத்தீங்களா !!

கட்சி தொடங்கி பதினெட்டு வருடங்களுக்குப் பின்னால் ஆட்சியை பிடித்த கட்சி திமுக. இப்போவருகிறவர்கள் உடனே ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள் அது நடக்காது ஆர்.எஸ்.பாரதி திமுக.

ஆனால் கட்சி தொடங்கிய உடனே எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடிச்சாரே அது எப்படி?