தொடர்கள்
மருத்துவ ஸ்பெஷல்
சுட்டெரிக்கும் சூரிய பகவான் – ஆர்.ராஜேஷ் கன்னா

20240326172024247.jpeg

இந்திய நாடாளுமன்ற முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த போது பல ஸ்டார் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை சுட்டெரித்த வெயிலால் முகம் கறுத்து போய் இருந்தனர். நாடு முழுவதும் அடிக்கும் வெப்ப அலை சூட்டினை தாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.

2023 ஆண்டு எல் –நினோ ஆண்டு , ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நிகழ்வு.இந்தாண்டு எல்-நினோ வால் அதீத மழை, திடீர் புயல், அதீத வெப்ப அலை,மிதமிஞ்சிய வறட்சி போன்ற பாதிப்புகள் உலகம் முழுவதும் ஏற்படலாம் என உலக வானிலை வல்லுநர்கள் எச்சரித்து இருந்தனர்.

தமிழ்நாட்டில் எப்போதும் கத்திரி வெயில் கடைசி வாரத்தில் தான் 100 °F வெப்பம் தகிக்கும் , கோடை மழை மார்ச் ,ஏப்ரல் , மே மாதங்களில் தீடீரென பொழியும் ,வெயில் சூடு அடங்கும் . இந்த வருடம் பிப்ரவரி இறுதி வாரத்தில் இருந்து காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

கத்திரி வெயில் தொடங்கும் முன்பே ஏப்ரல் மாதத்தில் 108 °F வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

இந்தியாவை பொறுத்த வரை 70 சதவீத எல்-நினோ தாக்கத்தால் அதிக வெப்பம் , அதிக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் கணித்தது .

காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும் என்றும் தொழில்கள் நசிந்து போகும் வாய்ப்பு இதனால் பொருளாதார தேக்கம் ஏற்படும் சூழல், புதிய நோய்கள் வெப்ப அலை தாக்காத்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடப்பட்டது.

20240326172051778.jpeg

இந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகள் பருவநிலை மாற்றத்தால் நாடு முழுவதும் ஏற்படப்போகும் விவசாய உற்பத்தி பாதிப்பு மற்றும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை எப்படி சமாளிக்க போகிறோம் என்று யாரும் தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை. பிரதான அரசியல் கட்சிகள் லோக்கல் பஞ்சாயத்து தேர்தல் போல் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருவது தான் வேடிக்கையாகி விட்டது.

இப்போதே வெயில் காலை நேரத்திலேயே சுட்டெரிப்பதால் வரும் கத்திரி வெயிலை தமிழகம் எப்படி சமாளிக்க போகிறது என்பது பில்லியன் டாலர் கேள்வி.

கோடைமழை தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் இதுவரை பெய்யவில்லை. கடல் காற்றும் தாமதம் வருவதால் கான்கீரிட் வீடுகள் வசிப்பவர்கள் இரவு நேரத்தில் அனல் தகிக்கிறது என்கின்றனர்.

20240326172116986.jpeg

தமிழக அரசு போர்கால அடிப்படையில் மரம் நட்டு அதனை பராமரித்து வளர்த்து வந்தால் தான் வரும் கால வெப்ப அலைகளில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

சூரிய வெப்பத்தால் பாதிக்கப்படும் நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஒரு டம்ளர் தண்ணீர், அரை டீஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு இதனை தயாராக சிறிய பாட்டில்களில் அடைத்து வைத்து வெயிலில் வெளியில் போகும் போது தலைகிறுகிறுப்பு , சிரமம் ஏற்படும் போது உடனே இந்த கரைசல் நீரை குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

20240326172158895.jpeg

வரும் மே மாதம் தமிழகத்தில் அதிகபட்சமாக 114.8 °F வெயில் சுட்டெரிக்கும் என்ற எச்சரிக்கையும் வந்துள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் வெயில் தகிப்பு இதற்கு முன்பு எப்போதும் இருந்ததில்லை .

இயற்கை எதிராக நாம் செயல்பட்டதன் விளைவு அது திருப்பி தாக்கும் போது நம்மால் தாங்க முடியாது என்பதற்கு இந்த வெப்ப அலை ஒரு ட்ரெய்லர் தான்!