தொடர்கள்
கவர் ஸ்டோரி
தேர்தல் திருவிழா?! 2-விகடகவியார்

20240222091703752.jpg

உதயநிதி கை ஓங்குகிறது

விகடகவியார் அலுவலகத்திற்கு வந்ததும் ஏசியை கூடுதலாக வைத்த கொண்டதும் மோரை ஆபிஸ் பாய் கொடுத்ததும் ஒரே மடக்காக குடித்துவிட்டு தன்னிடம் இருந்த நியூஸ்களை மடமடவென்று சொல்ல ஆரம்பித்தார்.

திமுக வேட்பாளர் பட்டியல் இந்த முறை 10 புது முகத்துக்கு வாய்ப்பு அதே சமயம் 10 பழைய முகத்துக்கு வாய்ப்பு மறுப்பு. இதில் கனிமொழி விருப்பப்படி இரண்டு பேர் தேர்வு ஏவா வேலு பரிந்துரை செய்த இரண்டு பேர் வேட்பாளர்கள் மீதி ஆறு பேர் இளைஞர் அணி சிபாரிசு இப்போதைக்கு வேட்பாளர் தேர்வில் உதயநிதி ஸ்டாலின் கை ஓங்கி இருக்கிறது என்பது உண்மை.

20240222164920665.jpeg

கள்ளக்குறிச்சியில் தான் கொஞ்சம் குழப்பம்" என்று விகடகவியார் சொன்னதும் "என்ன குழப்பம் "என்று நாம் கேட்க அங்கு ஏற்கனவே போட்டி போட்டு இருந்த, தற்சமயம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொன்முடி மகன் கௌதம சிகாமணிக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை என்பது உறுதிப்பட சொல்லப்பட்டது. எனவே சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டார். கிட்டத்தட்ட அவர்தான் வேட்பாளர் என்று பேச்சு வர தொடங்கி இருந்தது. ஆனால், மலையரசன் என்று வேறு ஒரு பெயர் அறிவிக்கப்பட்டதும் வெறுத்துப் போன மாவட்ட செயலாளர் சிவலிங்கம் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்துதனது செல்பேசியும் அணைத்து வைத்திருந்தார். அவர் கோபமாக இருப்பதை கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அதிகாலை கட்சி நிர்வாகிகளை அனுப்பி அவருடன் பேசி சமாதானம் செய்திருக்கிறார்.

"வேட்பாளர் தேர்வுக்கு பிறகு திமுக தலைவர் காணொளியில் மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர்களிடம் பேசினாரே "என்று நாம் கேட்டதும் வழக்கப்படி 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் ஒரு குறிப்பிட்ட வாக்கு சாவடியில் நமக்கு அல்லது கூட்டணி கட்சிக்கு வாக்கு குறைந்தால் கூட அதற்கு நீங்கள் தான் பொறுப்பு உங்கள் சண்டையை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு வெற்றிக்கு பாடுபடுங்கள் இல்லையென்றால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். கூட்டணி கட்சிக்கு நம் கை காசு போட்டு செலவு செய்து நம் கட்சி பதவியை அமைச்சர் பதவி தக்க வைத்துக் கொள்ள வேண்டுமோ என்று இப்போதே திமுக புள்ளிகள் புலம்ப தொடங்கி விட்டார்கள் "என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.

'சரி பாரதிய ஜனதா விஷயத்துக்கு வாருங்கள் 'என்றோம் 'அந்தக் கட்சி கொஞ்சம் வித்தியாசமான கட்சி' என்று சொல்லி நிறுத்தி விட்டு மிச்சமிருந்த மோரை குடித்துவிட்டு டிடிவி தினகரன் கூட்டணி ஓகே நீங்கள் எத்தனை தொகுதி கொடுக்கிறீர்களோ உங்கள் விருப்பம். ஆனால், நான் குக்கர் சின்னத்தில் தான் போட்டி போடுவேன். குக்கர் சின்னம் தாமரை சின்னத்தை விட பிரபலம் என்று வெளிப்படையாக பேச அவருக்கு குக்கர் சின்னம் கிடைக்க வழிவகை செய்ததுடன் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டது ,

ஆனால், ஜி கே வாசன் பாவம் அவர்தான் முதலில் பாஜக கூட்டணி என்று அறிவித்தார். அவருக்கு கேட்ட தொகுதிகள் எதுவும் கிடைக்கவில்லை. ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி என்று கேட்காத தொகுதிகளை அவர் தலையில் கட்டி விட்டது பாரதிய ஜனதா என்றார் விகடகவியார்.

20240222170601517.jpg

அப்போது "தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து ராதிகா சரத்குமார் போட்டி போடுவார் என்று சொன்னார்களே என்று நாம் கேட்டபோது கடைசி நிமிடத்தில் ராதிகா சரத்குமார் போட்டி போட மறுத்து விட்டார் என்கிறார்கள்.

இன்னும் சிலர் ராதிகா சரத்குமார் ஆரம்பத்திலேயே முடியாது என்று சொல்லிவிட்டார் சரத்குமார் தான் நான் எப்படியாவது சம்மதிக்க வைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

பிறகு பாரதிய ஜனதா இது வேலைக்கு ஆகாது என்று சொல்லி அதை தமாக பக்கம் தள்ளிவிட்டது என்கிறார்கள்.

அண்ணாமலை முதலில் போட்டியில்லை என்றார் பிறகு கட்சி சொன்னால் போட்டி என்றார் அதேபோல் நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் போட்டியிட விருப்பம் தெரிவிக்காததால் அவர் ராஜ்யசபாவுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது நீலகிரியில் அவர் வேட்பாளர் என்கிறார்கள் வேட்பாளர் அறிவிப்பு வந்த அரை மணி நேரத்தில் நைனார் நாகேந்திரன் தொகுதி மாறியது.

இதேபோல் வேட்பாளர் பட்டியலிலும் மாறுதல் வர வாய்ப்பு என்கிறார்கள் என்று விகடகவியார் சொன்னதும் 'அதெல்லாம் இருக்கட்டும் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் அடிக்கடி வர ஆரம்பித்து விட்டார்.

2024022217004572.jpeg

தமிழ்நாட்டுக்கு ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவில்லையே ஏன் 'என்று கேட்டோம் அமித்ஷா வரமாட்டார் அவருக்கு அண்ணாமலை மீது கோபம் அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டு போனதற்கு அண்ணாமலையின் தேவையற்ற பேச்சு தான் காரணம். தமிழக விஷயத்தை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று பிரதமர் பக்கம் தள்ளிவிட்டார் அமித்ஷா என்கிறார்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.