தொடர்கள்
அரசியல்
தேர்தல் திருவிழா - பணப்பட்டுவாடா அவ்வளவாக இல்லை  ? !!!! விகடகவி யார்

20240327002217358.jpeg

"ஜில்லுனு கொஞ்சம் அரசியல்"

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் ஆரஞ்சு பழ ரசம் தந்து உபசரித்த ஆபீஸ் பையன்" ஏதோ தேர்தல் தள்ளி வைப்பு என்று சில வாரங்களுக்கு முன்பு சொன்னீர்கள் ! ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லையே ? என்று கேட்டதும் நம்மை திரும்பிப் பார்த்தார் விகடகவியார்.

பிறகு ஆரஞ்சு ஜூசை கொஞ்சம் பருகி வைத்துவிட்டு "அமலாக்கத்துறை வருமான வரித்துறை திமுக நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தினால் பறக்கும் படை பாஜக நிர்வாகிகளை குறிவைத்து சோதனை செய்தது. அதனால் இந்த முறை உஷாராக திமுக பணப்பட்டுவாடா செய்வதை நிறுத்தியது. சில இடங்களில் குடிசைப் பகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா நள்ளிரவில் நடத்தியது. எனக்கு தெரிஞ்சு திமுக போட்டி போட்ட தொகுதிகளில் 18 தொகுதிகளில் பணப்பட்டுவாடா இல்லவே இல்லை. தேர்தலை ஒத்திவைப்பதை முதல்வர் விரும்பவில்லை. நமது கூட்டணி வலுவாக இருக்கிறது மகளிர்க்கு நிறைய நல திட்டங்கள் வழங்கி இருக்கிறோம். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு என்று மாதந்தோறும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம். பாரதிய ஜனதா அதிமுக தனித்துப் போட்டி போடுகிறது எனவே நமக்கு பெரிய பாதிப்பு இருக்காது. தேர்தல் ஒத்திவைப்பு மீண்டும் தேர்தல் என்பது நமக்கு இரட்டை வேலை. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் எடுத்த உஷார் நடவடிக்கையால் தான் தேர்தல் தள்ளிவைப்பு இல்லை "என்று சொன்னதும் ஆபீஸ் பையன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

"சரி, தேர்தல் முடிந்ததும் கூட்டணித் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்களே ! " என்று நாம் கேட்டதும் அவர்களிடம் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லிவிட்டார். உங்கள் கட்சி எதுவுமே கட்டமைப்பு சரி இல்லை. 2026-குள் உங்கள் கட்சியில் உறுப்பினர்களை சேருங்கள். கட்சியை கட்டமைத்து வளர்க்கப் பாருங்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள்,விடுதலை சிறுத்தை கட்சிகள், காங்கிரஸ் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். உங்களைத் தொடர்ந்து எங்களால் சுமந்து கொள்ள முடியாது என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார் ஸ்டாலின் "என்றார் விகடகவியர்.

'சரி, அதிமுக விஷயத்துக்கு வாரும் 'என்று நாம் சொல்ல அதற்கு முன் துரைமுருகன் பற்றி ஒரு செய்தியை சொல்லி விடுகிறேன். கட்சி பொதுச் செயலாளர் நான்தான். ஆனால், டம்மி பொதுச் செயலாளர் கூட்டணி பற்றி எனக்கு எதுவும் தெரியாது வேட்பாளர் தேர்வில் நான் கண்டுகொள்ளப்படவே இல்லை என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார் "என்று விகடகவியார் சொன்னதும் 'ஏன் இந்த புலம்பல் ? 'என்று நாம் கேட்டோம் அவருக்கு வயதாகி விட்டது 80 கடந்து விட்டார். எனவே அவருக்கு பதில் துடிப்பான ஒருவரை நியமிக்க கட்சி விரும்புகிறது. அந்த வாய்ப்பு அமைச்சர் நேருவுக்கு கிடைக்க இருக்கிறது "என்றார் விகடகவியார். நாம் 'அப்போது துரைமுருகனுக்கு என்ன பதவி ?' என்று கேட்டோம். "அவருக்கு மூத்த அரசியல் ஆலோசகர் என்று ஒரு புதிய பதவியை உருவாக்கி அதில் உட்கார வைக்க திட்டம் " இப்போது நீங்கள் சொன்ன அதிமுக விஷயத்துக்கு வருகிறேன்" மீதி இருந்த ஆரஞ்சு ஜூஸ் குடித்துவிட்டு நாக்கை சப்பு கொட்ட, இன்னொரு ஆரஞ்சு ஜூஸ் அவருக்கு ஆபீஸ் பையன் கொண்டு வந்து வைத்தார்.

எடப்பாடி பொருத்தவரை குக்கர் பலாப்பழம் கோவையில் அண்ணாமலை ஜெயிக்க கூடாது இவர்கள் மேல் மூவரும் ஒன்று சேர்ந்தால் நமக்கு அது ஒத்துக்காது. அதற்கு தான் நான் தீவிரமாக வேலை செய்யச் சொன்னேன். ஆனால், நீங்கள் அப்படி எதுவும் செய்ததாக எனக்கு தெரியவில்லை. எனக்கு எல்லா விவரமும் தெரியும். தேர்தலுக்குப் பிறகு நீங்கள் வேறு ஒரு பழனிச்சாமி பார்ப்பீர்கள் என்று ஆவேசமாக தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சற்று உரக்கவே பேசியிருக்கிறார் "என்ற விகடகவியார் ஒரு முக்கிய "சாரிடம் இருந்து ஒரு அழைப்பு" என்று சொல்லி ஜூட் விட்டார்.