தொடர்கள்
பொது
" பத்தி எரிந்து கொண்டிருக்கும் நீலகிரி வனம் " - ஸ்வேதா அப்புதாஸ் .

நீலகிரி மாவட்டம் குன்னுர் வெல்லிங்டன் ராணுவ முகாமை தொட்டால் போல் உள்ள அடர்ந்த வனம் தான் பாரஸ்ட் டேல் .

20240221223014608.jpg

கரன்சி டீ எஸ்டேட்டும் அருகில் தான் உள்ளது .

கடந்த பன்னிரெண்டாம் தேதி இந்த காட்டில் திடீர் என்று தீ பற்றி கொண்டது

20240221223053320.jpg

.

வழக்கமாக கோடை கால வெயில் காலத்தில் வனங்கள் தீ பற்றி கொள்வது சகஜம் என்று தான் வன துறையும் தீயணைப்பு வீரர்களும் நினைத்து கொண்டு வழக்கமான பாணியில் அணைக்கும் படலம் தொடர தீ அணைந்த பாடில்லை .

2024022122312870.jpg

கடந்த ஒரு வாரமாக கொழுந்துவிட்டு எரிந்து சாம்பலாகி கொண்டிருக்கும் வனத்தை காப்பற்றும் முயற்ச்சி பயன் அளிக்காமல் இராணுவம் களத்தில் இறங்கி ஹெலிகாப்டர் முலம் ரெலியா அணையில் இருந்து தண்ணீர் மொண்டு வந்து கொட்டியும் எந்த பயனும் இல்லை .

அறுபது ஏக்கர் அடர்ந்த வனம் சாம்பலாகி போயுள்ளது .

20240221223200845.jpg

முன்னுருக்கும் மேற்பட்ட இராணுவ , தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை வீரர்கள் போராடி கொண்டிருக்கிறார்கள் .

தற்போது சற்று தீயின் தாக்கம் குறைந்துள்ளது அதே சமயம் இன்னும் நெருப்பு எரிந்து கொண்டு தான் இருக்கிறது .

இயற்கை ஆர்வலர் சிவதாஸ் கூறுகிறார் ,

20240221223234766.jpg

" நீலகிரி அடர்ந்த காடுகள் அவ்வப்பொழுது பற்றி எரிந்து வருவது அதிர்ச்சியான தகவல் . இந்த மாவட்டத்தில் வனத்தின் அருகில் டீ எஸ்டேட்டுகள் மற்றும் கிராமங்கள் .

ஒரு பக்கம் எஸ்டேட்டுகளின் அருகில் உள்ள காடுகளை வளைத்து கொள்ளும் தேயிலை எஸ்டேட் உரிமையாளர்கள் கையாளுவது தீ குச்சியை கொளுத்தி காய்ந்து இருக்கும் சருகுகளை பத்தி வைக்க காடு எரிந்து சாம்பலாக அந்த இடம் நாளடைவில் எஸ்டேட்டின் வசம் .

அதே போல கிராம வாசிகள் வனங்களை ஆக்கிரமிப்பது நிலங்களை அபகரிக்கவும் காட்டு விலங்குகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள . எரிப்பு யுக்தியை கையாளுகிறார்கள் .

இப்படித்தான் இந்த பாரஸ்ட் டேல் காடும் நெருப்பு பற்ற வைக்க பட்டு தற்போது அணைக்க முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது . இப்படிப்பட்ட மேன் மேட் அழிவுகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கும் வன துறைக்கும் உண்டு .

20240221223439332.jpg

நீலகிரி ஒரு உயிர்சூழல் பகுதி அப்படியிருக்க இப்படி பட்ட இயற்கை அழகை எப்படி அழிக்கலாம்". என்று கேட்கிறார் .

சுற்றுசூழல் ஆர்வ பத்திரிகையாளர் நம்மிடம் பேசினார் ,

"இந்த காடு அழிய வேண்டிய ஒன்று .உயர்நீதி மன்றமே அந்நிய தாவரங்கள் exotic plants அடர்ந்த காப்பு காடுகள் அகற்றப்படவேண்டும் நீலகிரியில் பிரிட்டிஷார் உருவாக்கின காடுகள் தான் அதிகம் அதனால் சதுப்பு நிலங்கள் மறைந்து வருவது கவலை அளிக்கும் ஒன்று .

20240221223545477.jpg

யூகலிப்டஸ் , பைன் , சைப்ரஸ் , குப்ருஸ் , செஸ்டரும் , பார்த்தினியின் போன்ற அந்நிய தாவரங்கள் மரங்கள் தான் இந்த காட்டிலும் உள்ளது .

நீலகிரியில் சோலை வனங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள் காணாமல் போவது வருத்தமான ஒன்று .

முதுமலை அப்பர் பவானி முக்கூர்த்தி தேசிய பூங்காவில் சோலை வனங்கள் புல் வெளி சதுப்பு நிலம் பாதுகாப்பக இருப்பது ஒரு வரப்பிரசாதம் .

இந்த வனம் மட்டும் தான் தண்ணீருக்கு ஆதாரம் .

மற்றபடி அந்நிய காடுகள் பரந்து இருப்பது எந்த யூசும் இல்லை . நிலத்தடி நீரை இவை உறிந்துவிடுகிறது

தற்போது இந்த காடு எரிந்து கொண்டிருப்பது நல்ல விஷயம் தான் .

இதனால் எந்த மிருகமும் மடியவில்லை .

இந்த காடு அழிந்து சாம்பலாகி அது எருவாகி புதிய புல் முளைத்து அந்த இடம் சதுப்பு நிலமாக மாற வாய்ப்பு உண்டு .

தீயணைப்பு மற்றும் வன துறையினர் மிகவும் போராடியுள்ளனர் அவர்களுக்கு உணவு கூட கொடுக்கப்படவில்லை .

அதற்கான முயற்ச்சியை மாவட்ட நிர்வாகமும் எந்த அதிகாரியும் இரக்கம் காட்டவில்லை என்பது வருத்தமான ஒன்று ." என்று கூறுகிறார் .

இந்த கூப்பு காட்டுக்குள் மரம் எடுக்க செல்லும் லாரிகளின் பாதையில் தான் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் சென்று நெருப்பை அணைக்க போராடி கொண்டிருக்கிறார்கள் .

முழுமையாக இந்த நெருப்பு அணைய இன்னும் ஒருவாரமாகும் என்கிறார்கள் .

தமிழக வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாகு பாதி வனம் எரிந்து சாம்பலான பின் சென்னையில் இருந்து பறந்து வந்து தன் வழக்கமான ஆய்வை அனல் பறக்கும் கருகின அந்நிய தாவர வனத்தை பார்வையிட்டு தங்களின் கடமைகளை துரிதமாக செய்து கொண்டிருக்கும் வன தீயணைப்பு ஊழியர்களை தன் அதிகார தோரணையில் ஆணைகளை பிறப்பித்துள்ளார் .

ஏற்கனவே இந்த பாரஸ்ட் டேல் வனத்தின் மேல் முக்கிய அரசியல் புள்ளிகளின் பார்வை விழுந்துள்ளது அதனால் தான் ஒரு தீ குச்சியால் பெரிய அளவில் வனம் எரிந்து போய்க்கொண்டிருக்கிறது .

இந்த வனம் முழுவதும் சாம்பலாகி போனபின் பெரிய அளவில் டைடல் பார்க் போல கட்டிடம் உருவாக போகிறது என்ற பேச்சு நீலகிரியில் உலாவி வருகிறது .

இந்த காட்டின் நெருப்பின் அனலால் குன்னுர் மற்றும் வெலிங்டன் பகுதிக்கு விஜயம் செய்யும் கருஞ்சிறுத்தை , சிறுத்தை கள் எங்கோ ஓடி மறைந்துள்ளது .

இந்த வனம் பத்தி எரிய காரணம் என்று நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

ஏற்கனவே கொரோனா காலத்தில் முதுமலை பந்திப்பூர் புலிகள் காப்பக வனம் எரிந்து சாம்பலாகியது குறிப்பிடத்தக்கது .