தொடர்கள்
தேர்தல்
" முதல்வருக்கு கொளத்தூர் மக்கள் செய்த கைமாறு " -ஸ்வேதா அப்புதாஸ்.

20260404194809462.jpeg
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்தது தமிழக வரலாற்றில் ஜீரணிக்க முடியாத ஒன்று .
1967 ஆம் ஆண்டு அப்போதய முதல்வர் காமராஜர் தன் தொகுதியான விருதுநகர் தொகுதியில் தி மு க இளம் வேட்பாளரான ஸ்ரீனிவாசனை எதிர்த்த நின்று தோல்வி அடைந்தார் என்பது வரலாறு.


தற்போது ஸ்டாலின் ஒரு முதல்வராக இருந்தும் தோல்வியை தழுவியது அதிர்ச்சியான ஒன்று.


வாரம்தோறும் முதல்வர் ஞாயிற்று கிழமை தவறாமல் தன் தொகுதியான கொளத்தூருக்கு விசிட் செய்து நலத்திட்டங்களை ஆய்வு செய்து வந்து தன் தொகுதியை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தும் தொகுதி மக்கள் தோல்வியை கைமாறாக கொடுத்ததை அவரால் ஜீரணிக்க முடியுமா என்கிறார் கொளத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை.


கடந்த வருடம் ஊட்டி மலர்க்கட்சிக்கு ஹாய்யாக வந்தார் முதல்வர். தோட்டக்கலை துறை மலர்களால் வடிவமைக்க பட்ட சிம்மாசனத்தில் அமர செய்தனர்.
இந்த வருடம் பிரமாண்ட சிம்மாசனம் வடிவமைத்து ஸ்டாலின் முதல்வரை அமர செய்ய இருந்தனர்.


தற்போது தமிழகத்தில் மிக பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.


ஊட்டி மலர்காட்சி புதிய முதல்வரே வருவாரா என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள்.