
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுக என்று மாறி மாறி தான் ஆட்சி செய்தார்கள்.
அவர்களே எங்களுக்குள் தான் போட்டி மூன்றாவது கட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று சொல்வார்கள்.
இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வேரூன்றி இருந்தது.
அந்த ஆதிக்கத்துக்கே சவால் விடும் வகையில் தமிழக வெற்றி கழகம் சாதனை படைத்திருக்கிறது.
திராவிடத்திற்கு மாற்று நான் தான் என்பதை திரும்பத் திரும்ப சொல்லி நிரூபித்து இருக்கிறார் ஜோசப் விஜய்.
திமுகவின் கோட்டை என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்த சென்னையில் மிகப்பெரிய ஓட்டை போட்டு விட்டது விசில் சத்தம்.
திமுகவின் தலைவரே கொளத்தூர் தொகுதியை ஒரு மாடல் தொகுதி என்று பெருமை பேசிக் கொண்டிருந்தவர் இன்று தோல்வியை தழுவி இருக்கிறார்.
கொளத்தூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் வி எஸ் பாபு ஆரம்பத்தில் திமுக.கொளத்தூர் தொகுதி ஸ்டாலின் வெற்றிக்காக ஒரு காலத்தில் பாடுபட்டு உழைத்தவர்.
இன்று சரித்திரம் திரும்பி விட்டது. யார் வெற்றிக்காக உழைத்தாரோ அவரையே தோற்கடித்து விட்டார் வி எஸ் பாபு. திமுகவின் பல மூத்த அமைச்சர்கள் முதலில் பின்னடைவு பிறகு தப்பித்தால் போதும் என்று சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றி கழகத்தை சற்று பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றார்கள்.
அதையும் மீறி துரைமுருகன் அதிமுகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்
ஆவடி நாசர் விசில் சத்தத்தில் தோற்றுப் போனார்.
துணை முதல்வரே தட்டுத் தடுமாறி தான் வெற்றி பெற்றார்.
.திமுகவுக்கு அதிர்ச்சி தோல்வி. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தங்களது இலவச திட்டங்கள் அல்லது நல திட்டங்கள் ஏதாவது ஒன்றை தமிழகத்தில் உள்ள எல்லா குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் பயனாளியாக இருக்கும்.
அவர்கள் வாக்கு நமக்கு கிடைக்கும் என்று நம்பினார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கோடியே 30 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை தருகிறோம் அவர்கள் ஓட்டே நமக்கு பெரிய வெற்றியை தேடி தரும் என்று நம்பினார்.
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 38 லட்சம் லேப்டாப்கள் வழங்கினார் எல்லாமே வாக்கு வங்கி அரசியல் தான். இவை எல்லாவற்றையும் விட அமைச்சர்கள் பொங்கல் தினம் முதல் வாக்காளர்களுக்கு கவனிப்புகளை தொடங்கினார்கள்.
இது தவிர ஓட்டுக்கு 2000 ஆனாலும் இந்தப் பயனாளிகள் எல்லா பயனையும் அனுபவித்து விட்டு விசில் பட்டனை அழுத்தி இருக்கிறார்கள்.
பணம் வெற்றியை தீர்மானிக்காது பணத்தை வாங்கிக் கொண்டு வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட விரும்புகிறார்களோ அவர்களுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்ற நிதர்சன உண்மை வேட்பாளர்களுக்கு தெரிந்தாலும் பணம் கொடுப்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணம் தந்தது. அதிமுக அதிமுக இரண்டு கட்சிகளிலும் பணத்தை வாங்கிக் கொண்டு விசில் பட்டனை அழுத்திய வாக்காளர்களும் இருக்கிறார்கள்.
மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் அந்த மாற்றத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை சரியாக தெரிந்து கொண்டு விஜய் அதை பயன்படுத்திக் கொண்டு விட்டார்.
விஜய் தமிழக வெற்றி கழகத்துக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று சொல்லி திமுகவை கடுமையாக சாடினார்.
ஸ்டாலின் சார் ஸ்டாலின் சார் என்று சொல்லி முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் திமுக பதில் சொல்லாமல் மௌனம் காத்தது. அவர்களைப் பொறுத்தவரை தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக பாஜக மற்றும் அதிமுக இருக்கும் என்று நினைத்து எடப்பாடியை தர குறைவாக விமர்சனம் செய்த அவர்கள் விஜயை கண்டு கொள்ளவில்லை.
விஜய் தொடர்ந்து திமுக ஒரு தீய சக்தி தீய சக்தி தீய சக்தி தீய சக்தி என்று பிரச்சாரம் செய்தார். தேர்தல் பிரச்சாரத்தை பொருத்தவரை திமுக தான் அதை சரியாக செய்தது என்பது உண்மை. விஜய்க்கு சில இடங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அனுமதி தந்த இடங்களில் விஜய் பேசாமல் ரத்து செய்தார்.
ஒரு விஷயம் விஜய் சொன்னதை எல்லோரும் கவனிக்க தவற விட்டார்கள். நீங்கள் பிரச்சார மேடை தராவிட்டால் என்ன நான் எப்படி பிரச்சாரம் செய்வது என்னுடைய பிரச்சாரம் எப்படி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று சொன்னார்.
சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கான பிரச்சாரம் அதிக அளவு இருந்தது அது மக்களை அதிக அளவு ஈர்த்தது என்பது உண்மை. நிருபர்களை சந்திக்கவில்லை தொலைக்காட்சியில் பேட்டி எல்லாம் தரவில்லை.
.விஜய் கூட்டணி எல்லாம் அமைக்காமல் தனித்துப் போட்டி போட்டு கிட்டத்தட்ட தனிப்பெரும்பான்மை பெறும் அளவுக்கு நெருங்கி விட்டார். விஜய் ஆட்சி அமைக்க குறைந்தது 118 இடங்கள் தேவை அத்தனை இடங்கள் அவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
இப்போதைய நிலவரம் அவர் 109ஐநெருங்கி இருக்கிறார் .பிரேமலதா, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் ஒருவேளை விஜய்க்கு ஆதரவு தரலாம். ஏன் கம்யூனிஸ்ட்டே ஆதரவு தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தேர்தல் முடிவு வருவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு வைகோ விஜய் ஆதரவு கருத்து தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் என் கட்சி நிர்வாகிகளே சிலர் சரியாக வேலை செய்யவில்லை என்று புகார் சொன்னார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீடு விஷயத்தில் எங்களுக்கு வருத்தம் தான். வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் சென்ற முறை திமுக சரிவர செய்யவில்லை என்று புகார் சொன்னார்கள்
. எனவே எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது "நான் குறி வைத்தால் தவற மாட்டேன்! தவறினால் குறியே வைக்க மாட்டேன்" என்றார் .

Leave a comment
Upload