தொடர்கள்
தேர்தல் திருவிழா
த்ரிஷா முதல்வரானால்- பால்கி

20260404200921867.jpeg

த்ரிஷா முதல்வரானால்................................

த்ரிஷா சிறு குறிப்பு.

43 வயது.
எத்திராஜ் கல்லூரியில் BBA முடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பலமாக கால் பதிந்திருக்கும் இவர் பாலிவுட்டிலும் வலம் வந்திருக்கிறார்.

அரசியலிலும் வரவும் ஆட்சியில் அமரவும் அவருக்கு ஆசை என அவரே சொல்லியிருப்பது நலம் தான். அவரது மனதில் அந்த பொறுப்புக்கு ஏற்ற ஒரு எண்ண ஓட்டம் ஓடியிருக்கும் நிச்சயமாக.

20260404220324763.jpeg
தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் பின்னிப்பிணைந்தே பயணித்துள்ளன.
அந்த வகையில் த்ரிஷா அரசியலுக்கு வருவது தற்போது மிகவும் எளிதாகிவிட்டது.


ஜெயலலிதாவும் 43 வயதில்தான் முதல்வரானார்.

முதலில் செய்ய வேண்டியது இது தான்.

இன்றைய தினத்தில் அவர் தேர்தலில் நிற்கவில்லை என்பதால் வரும் ஆறு மாதத்திற்குள் தேர்தலில் வெற்றி பெற்றால்தான் பதவியும் நீடிக்கும்.


விஜய் விட்டுக் கொடுக்கும் ஒரு சீட்டில் நின்றால் வெற்றி எளிது.

படித்தவர் முதல்வராவது நல்லதுதான்.

அவர் செய்ய வேண்டியது

மந்திரி சபையில் படித்தவர்க்கும் துறை அனுபவமுள்ளவரை நியமிக்க வேண்டும்.

முதல் 100 நாளுக்குள் என்ற இலக்கு லிஸ்ட் தயார் செய்ய வேண்டும்.
அதில் தவெகவின் வாக்குறுதிகளை பட்டியலிட்டு அதற்கான பட்ஜெட் வரைதல் அவசியம்.

நிதிநிலை வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும்.

மகளிர்க்கான துன்புறுத்தல்களை முற்றுப்புள்ளி வைக்க இதுவரை பதியப்படாத FIRகளை பதிய வைக்க வேண்டும். நடக்கும் நடந்து கொண்டிருக்கும் வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும்.

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும். ஒரு வருடத்தில் மூடிட வேண்டும் என்ற இலக்கை வைக்கவேண்டும்.
அதில் பணிபுரிபவர்களை மாற்று துறைகளில் மாற்றிட வேண்டும்.

போதைப் பொருட்கள் புழக்கத்தை ஒழிக்க வேண்டும். அதற்கு காவல் துறையில் ஒரு டாஸ்க் ஃபோர்ஸ் ஒன்றை உருவாக்க வேண்டும். அதன் சிறு குழு மாவட்டம் தோறும் செயல் படவேண்டும்.

இலவசங்களை ஒழிக்க ஆவன செய்ய வேண்டும்.

மத்திய அரசுடன் நல்லுறவு ஏற்படுத்தி மாநில நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
அவர்களுடனான நிலுவையில் உள்ள சர்ச்சைகளை நிவர்த்தி செய்து சுமூகப் படுத்த வேண்டும்.

நடைமுறையில் இருக்கும் திட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

நீர்நிலைகள் மீட்டெடுக்க வேண்டும். தூர்வார வேண்டும். மழைக்காலம் வருகிறதல்லவா.

நவோதயா பள்ளிகள் திறக்கவேண்டும்.

20260404220240195.jpeg

மேற்கூறியது முதல் ரவுண்டு தான்.

அடுத்த ரவுண்டில் மீதி வைத்துக் கொள்ளலாம்.