
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினார். அவரது கருத்துக்கணிப்பின்படி தமிழக வெற்றி கழகத்திற்கு 41% வாக்குகளுடன் 121 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம் என்பது அவர் கணிப்பாக இருந்தது
ொத்தம் 234 தொகுதிகளிலும் இரண்டு லட்சத்து 34,000 பேரிடம் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளை வைத்து இந்த கருத்துக்கணிப்பை அவர் நடத்தி இருக்கிறார். உண்மையில் இந்த கருத்துக்கணிப்பு தமிழக வெற்றி கழகத்தை குஷிப்படுத்தியது .மற்ற கருத்துக்கணிப்புகள் எல்லாம் திமுக தான் அடுத்த ஆட்சி என்று சொன்னபோது இல்லை விஜய் தான் அடுத்த முதல்வர் என்ற இந்த கருத்துக்கணிப்பு தமிழக வெற்றி கழகத்திற்கு பிடித்திருந்தது.
ஐபிஎஸ் அதிகாரி ரவி தான் நடத்திய கருத்துக் கணிப்பு பற்றி குறிப்பிடும் போது இந்த கருத்துக் கணிப்புக்கு 2340 ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளை பயன்படுத்தினேன் ஒவ்வொரு அதிகாரியும் 100 நபர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும். அந்த 100 நபர்களும் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர்கள் இளைஞர்கள் முதியவர்கள் பெண்கள் என்று வரிசைப்படுத்தி இவர்களிடம் கருத்துக் கணிப்பு கேட்க வேண்டும் வகுப்பு மாதிரி அவர்களுக்கு பாடம் நடத்தி இந்த கருத்துக்கணிப்பை நான் நடத்தினேன் என்கிறார். இந்த கருத்துக்கணிப்பில் அதிமுக திமுகவுக்கு காலங்காலமாக வாக்களித்த பலர் இந்த முறை எங்கள் வாக்கு விசில் சின்னத்துக்கு வாக்களித்தோம் என்று கருத்து சொல்லி இருக்கிறார்கள். ஏன் இந்த மாற்றம் என்ற கேள்விக்கு அவர்கள் சொன்ன பதில் எங்கள் பேரக் குழந்தைகள் விசில் தினத்துக்கு போட சொன்னார்கள். விசில் சின்னத்துக்கு போடாவிட்டால் வீட்டுக்கு வர மாட்டேன் சாப்பிட வர மாட்டேன் என்றெல்லாம் பிடிவாதம் பிடித்தார்கள். அவர்களை திருப்தி படுத்துவதற்காக நாங்கள் விசில் சின்னத்துக்கு வாக்களித்தோம் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள்
ஐபிஎஸ் அதிகாரியான ரவி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 31 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார் .திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் கடைசியாக டிஜிபி அந்தஸ்த்தில் தாம்பரத்தின் முதல் காவல் துறை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரும் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவும் கல்லூரி தோழர்கள் என்பது உபரி செய்தி.
அதே சமயம் பத்திரிகையாளர்களுக்கெல்லாம் பாடம் நடத்தும் ரங்கராஜ் பாண்டே சறுக்கி விழுந்தும் நடந்திருக்கிறது.
த வெ க பத்து சீட்டு கூட வாங்காது வாங்கினால் இனி அரசியல் பேச மாட்டேன் என்று சூளுரைத்த ரங்கராஜ் பாண்டேவை தேடிக் கொண்டிருக்கிறார்கள் வாசகர்கள்.
இதோ அந்த வலைதளத்தில் வலம் வரும் வீடியோ......

Leave a comment
Upload