
இந்த தேர்தல் திமுக அதிமுக என்ற பாரம்பரிய போட்டியில் மூன்றாவதாக விஜய் நுழைந்தார்.விஜயின் தேர்தல் பிரச்சாரம் தேர்தல் யூகம் வெறும் வாக்குகளைப் பிரிக்கும் செயலாக மட்டும் அமையாமல் அது ஒரு பெரும் வெற்றிக்கான அறிகுறி என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. எம்ஜிஆர் என் டி ஆர் க்கு அடுத்து அரசியலில் நடிகர்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. இப்போது விஜயின் வெற்றி எம்ஜிஆர் என்டிஆர் வரிசையில் இன்னொரு மிகப்பெரிய அரசியல் தலைவர் விஜய் என்ற வரலாற்றை அவர் படைத்திருக்கிறார்.
அதிமுக திமுக இரண்டுமே விஜய் விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். விஜய் அதிமுகவை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. டெல்லி எஜமானர்களின் விசுவாச கட்சி என்று விமர்சித்தார். இதற்கு அதிமுக தலைப்பில் பெரிய அளவு எதிர்ப்பு வரவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஸ்டாலினைப் போல் எடப்பாடியும் அதிமுக திமுக இடையே தான் போட்டி என்று நம்பினார். ஒரு கட்டத்தில் அமித்ஷா தமிழக வெற்றி கழகத்தை அதிமுக கூட்டணியில் இணைக்க பெரும் முயற்சி செய்து கிட்டத்தட்ட அது முடிவானது. அதாவது விஜய் இரண்டரை வருடம் முதல்வர் எடப்பாடி இரண்டரை வருடம் முதல்வராக இருப்பார் என்பதுதான் பேச்சு. இதற்கு விஜய் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டதாக தான் சொல்லப்பட்டது .ஆனால் எடப்பாடி அதை ஏற்கவில்லை. இதேபோல் ராகுல் காந்தி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான இடங்கள் தர விஜய் ஒப்புக்கொண்டார். ஆட்சியில் பங்குக்கும் சம்மதித்தார். ஆனால் உள்ளூர் காங்கிரஸ் காரர்கள் விஜயுடன் கூட்டணி என்றால் காங்கிரஸ் கட்சி பிளவு படும் என்று பயமுறுத்தி திமுகவுடன் கூட்டணிக்கு ராகுல் காந்தியை சம்மதிக்க வைத்தார்கள்.28 இடங்களை போராடி வாங்கிய தமிழக காங்கிரஸ் ஐந்து இடங்களிலே திணறிதான் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை படுதோல்வி. தமிழக வெற்றி கழக வேட்பாளரிடம் தோற்றுப் போனார் செல்ல பெருந்தகை. இன்னும் சில தினங்களில் செல்வப் பெருந்தகை பதவி பறிக்கப்படும். புதிய தலைவர் நியமிக்கப்படுவார். அவர் திமுக எதிர்ப்பு விஜய் ஆதரவு என்று பேசத் தொடங்கி பாராளுமன்றத் தேர்தலுக்கு விதியுடன் கூட்டணி என்ற நகர்வு காங்கிரஸ் திட்டம்.

சிபிஎம் கட்சி மூத்த தலைவர் கே பாலகிருஷ்ணன் தேர்தல் முடிவு வெளியாவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டி அளித்தார். அவர் அந்த பேட்டியில் "தமிழ்நாடு மீண்டும் இரட்டை இலக்கத்தில் பொருளாதாரம் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது எனில் அதற்கு அடிப்படை காரணமே தமிழ்நாட்டில் இருக்கிற உழைப்பாளி வர்க்கமும், தொழிலாளி வர்க்கத்தினு டைய உழைப்புதான்.ஆனால் அந்த தொழிலாளருக்கு நம்முடைய அரசு என்ன கொடுக்கிறது என்பது மிகப்பெரிய கேள்வி. தமிழகத்தில் புதிய அரசியல் சூழல் உருவாவதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைக்கு தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை என்பது ஏற்பட்டிருக்கிறது. வேறு எந்த தேர்தலை விட இந்த தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடிகிறது .தேர்தல் நேரத்தில் இளைஞர்கள் வேறு எங்காவது இருப்பார்கள். ஆனால் இந்த முறை அப்படி இல்லாமல் இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டிருக்கிறது . தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வேணும் என்கிற மாதிரியான ஒரு அரசியல் புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட இளைஞர்கள் அரசியல் ரீதியாக இப்போது தேர்தலில் வாக்களிப்பது ஒரு மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்திற்கு அவர்கள் வந்து விட்டார்கள் என்பதைத்தான் நமக்கு உணர்த்துகிறது. இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி வரவேற்கத்தக்கது பாராட்டத்தக்கது. இளைஞர்களின் ஒரு பகுதியினர் விஜய் பின்னால் போயிருக்கலாம் .ஒரு மாற்றம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது "என்று முன்கூட்டியே விஜய் பற்றிய அவரது கணிப்பு இப்போது பேசும் பொருளாக இருக்கிறது.

Leave a comment
Upload