தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

ஆண்ட்ரியா

20261013165043150.jpg

கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால் தற்சமயம் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

அசோக் செல்வன்

நாகர்ஜுனாவின் நூறாவது படம் 'கிங் '.இந்த படத்தில் அசோக் செல்வன் 'கர்ணா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான தேற்றத்தில் அசத்துகிறார் அசோக்செல்வன்.

சமந்தா

20261013173025701.jpg

"நான் இதுவரையில் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள பெரும்பாலனவிஷயங்கள் தோல்விகளின் இருந்துதான் வந்திருக்கின்றன .தோல்விதான் என் குரு. வெற்றி எனக்கு அவ்வளவாக எதையும் கற்றுத் தரவில்லை " என்கிறார் நடிகை சமந்தா.

ரஜினி

ரஜினியின் 'தர்மன் 'படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் போல் தெரிகிறது .படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது ரஜினியின் பிறந்த நாள் டிசம்பர் 12-ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என்கிறார்கள்.

அதுல்யா ரவி

20261013172553735.jpg

தமிழ் படம் 3 உருவாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். மிர்ச்சி சிவாவிற்கு 'விண்மீன் மண்டல சூப்பர் ஸ்டார்' என்ற பட்டம் தரப்பட்டிருக்கிறது. சிவாவுக்கு ஜோடி அதுல்யா ரவி.

அனஸ்வரா ராஜன்

"மமீதா பைஜு நடிகையாக எனக்குமிகவும் பிடிக்கும். அவர் எனக்கு வெறும் சக நடிகை மட்டுமல்ல. தனிப்பட்ட வாழ்க்கையில் நெருக்கடிகளை சந்திக்கும் நேரங்களிலும் எனக்கு துணையாக இருக்கும் அன்பான தோழி "என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் நடிகை அனஸ்வராராஜன்.

தீபாவளி விருந்து

20261013215111605.jpeg

பிரபல காஸ்ட்யூம் டிசைனர் மணீஷ் மல்ஹோத்ரா ஏற்பாடு செய்த தீபாவளி விருந்தில் ஜான்வி கபூர்,மாளவிகா மோகன், ஸ்ரீ லீலா, தமன்னா, நிஷா பதானி, கீர்த்தி சனோன், ராகுல் ப்ரீத்தி, கரினா கபூர், ஜெனிலியா என்று எல்லோரும் கலந்து பார்ட்டியை கலக்கினார்கள் .

கயாடு லோஹர்

20261013171534182.jpg

தமிழில் பிஸியாக இருந்தாலும் கயாடு லோஹர் தெலுங்கிலும் இப்பொழுது தீவிர கவனம் செலுத்துகிறார்.

மமிதா பைஜூ

2026101317125132.jpg

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்கும் ஜெய் ஹனுமான் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகை மமீதா பைஜூ.

கீர்த்தி ஷெட்டி

20261013170803980.jpg

கீர்த்தி ஷெட்டி நடித்த அனைத்து தமிழ் படங்களும் பெரிய அளவு பேசப்படவில்லை என்பதால் தற்சமயம் தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் நடிகை.

மிர்னா மேனன்

20261013170959821.jpg

ரஜினியின் ஜெயிலர் படம் இரண்டு பாகங்களிலும் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் தற்சமயம் இருளன் என்ற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

ருக்மணி வசந்த்

20261013165356942.jpg

இன்னும் பெயிரிடப்படாத ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை ருக்மணி வசந்த்.

சாய் பல்லவி

மணிரத்தினம் இயக்கத்தில் விஜய் சேதுபதி சாய் பல்லவி நடிக்கும் 'இஞ்சி வெல்லம் 'திரைப்படம் 2027 ஜனவரி 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

பிரீத்தி அஸ்ரானி

20261013170016168.jpg

விஜய் ஆண்டனி பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ள ' அப்பா குட்டி' படத்தின் டிரைலர் வெளியானது. இந்தப் படம் நவம்பர் 20-ஆம் தேதி ரிலீஸ்.

ரெஜினா கசண்ட்ரா

2026101317365589.jpg

'மெடிக்கல் மாஃபியா' முறைகேடுகளை சொல்ல வரும் 'ஆர் எக்ஸ்' படத்தில் கதையின் நாயகியாக ரெஜினா கசண்ட்ரா நடிக்கிறார். விஷால் வெங்கட் இந்த படத்தை இயக்குகிறார்.