அனிருத் - காவியா மாறன் திருமணம் ....

ரஜினி குடும்பம், ஸ்டாலின் குடும்பம், மாறன் குடும்பம் என்று மூன்று முக்கிய குடும்பங்களும் மூன்று விமானங்களில் கிரேக்க நாட்டிற்கு சென்றார்கள்.
முதல் நாள் அதாவது 10. 11.26 அன்று முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது.
மறுநாள் 11.11.26 அன்று திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தனது திருமண புகைப்படத்தை அனிருத் அதிகாரப்பூர்வமாக தனது X (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெள்ளை மற்றும் வெளிர்மஞ்சள் நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் தனது மனைவியோடு இருக்கும் இயல்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். "என் ஆயுளில் கிடைத்த ஒரே பொக்கிஷம் ...அது என் வாழ்நாள் முழுமைக்கும் " என்று குறிப்பிட்டு 11.11 என்று தனது திருமண தேதியை பதிவு செய்துள்ளார்.

திருமண நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் இது தவிர பங்கு பிரிப்பதில் மோசடி என்று வழக்கறிஞர் அறிவிப்பாணை அனுப்பிய சகோதரர் தயாநிதி மாறனும் கலந்து கொண்டார்.
தற்போது ஸ்டாலின் குடும்பமும் ரஜினிகாந்த் குடும்பமும் உறவுமுறை வட்டத்தில் இணைந்து இருக்கிறது.

காவ்யா கலாநிதி மாறன், சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவர்.
இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இணை உரிமையாளர்.
கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறனின் மகளான 2016-ஆம் ஆண்டு சன் டிவி நிறுவனத்தில் இணைந்தார். 2019-ஆம் ஆண்டில் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

கலாநிதி மாறன் தந்தை மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன். இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சகோதரியின் மகன். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலாநிதி மாறன் ஆகியோர் உறவினர்கள். மு.க.ஸ்டாலினுக்கு காவ்யா பேத்தி முறை ஆவார்.
தமிழ்த் திரையுலகின் உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் 2012- ஆம் ஆண்டு வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது இசையில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது.

அதனைத் தொடர்ந்து விக்ரம், லியோ, ஜெயிலர் என பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அனிருத் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சகோதரர் மகன் ஆவார். அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா ஒரு திரைப்பட நடிகர் ஆவார்.
குடும்ப உறவோடு ரஜினிகாந்த் அனிருத் தொழில் ரீதியிலும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். ரஜினிகாந்தின் எல்லா படங்களுக்கும் சமீப காலமாக அனிருத் தான் இசையமைப்பாளர். பேட்ட, தர்பார், ஜெயிலர் இப்படி பட்டியலிடலாம்.
சன் டிவி நெட்வொர்க் மொத்த சந்தை மூலதன மதிப்பு அக்டோபர் 19 நிலவரப்படி 25,219.45 கோடி. 2024-25 நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை படி அதன் மொத்த வருவாய் 4,543.96 கோடி. வரி செலுத்திய பிறகான நிகர லாபம் 1,654.46 கோடி.

பெரும்பாலான பிரபலங்கள் 'டெஸ்டினேஷன் வெட்டிங்' செய்வதற்கு கிரீஸ் நாட்டை தான் தேர்வு செய்கிறார்கள்.
கிரீஸ் பிரபலங்களின் விருப்பமான திருமண சுற்றுலாத்தலமாக இருக்கிறது. ஐரோப்பிய நாடான கிரீஸ், இயற்கை அழகுக்கும் தொன்மையான வரலாற்றுக்கும் பெயர் பெற்றது.
கிரீஸ் நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன.

அவற்றில் மிகப்பெரியது கிரீட் தீவு. உயரமான மலைகள், நீண்ட கடற்கரைகள், நீல நிற கடல் என இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளை கொண்ட நாடு கிரீஸ். மொத்தத்தில் காவ்யா அனிருத் திருமணம் தமிழ்நாட்டில் இரண்டு செல்வாக்கு மிக்க பிரபலங்களின் குடும்பம் ஒன்றாக இணைந்திருக்கிறது.
ஒரு பக்கம் ஊடகமும் அரசியலும் தொடர்புடையது இன்னொரு பக்கம் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ரஜினிகாந்தின் குடும்ப உறவும் பிரபலமான இசையமைப்பாளரான அனிருத் குடும்பம்.
தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. படிக்கிறது இராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா ???
அது போல சம்பாரிக்கறது தமிழ்நாட்டில், இந்தியாவில் செலவு பண்ணி தாம் தூம்னு கொண்டாடறது கிரீசிலா என்று உபீஸ் அல்லாத மக்கள் கேள்வி கேட்கிறார்கள் இணையத்தில்.
தமிழ்நாட்டில் நடந்திருந்தால் நாலாயிரம் குடும்பங்களுக்கு இந்த கல்யாணத்தில் வருமானம் கிடைத்திருக்கும். ஹூம்....
புரியாத விஷயங்களுக்கு கிரேக்கமா லத்தீனா என்று ஆங்கில சொலவடை ஒன்றும் இருக்கிறது.
அது போலத் தான் இந்த கிரீஸ் கல்யாணமும்.
ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது எதற்கு வ.எரிவானேன்???
வாழ்த்தி விட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம். !!!

Leave a comment
Upload