
கோவையில் 300 கோடி ரூபாய் செலவில், ' பெரியார் அறிவுலகம் ' என்ற பெயரில் பிரம்மாண்டமான நூலகம் கட்டப்பட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் கட்டப்பட்ட இந்த நூலகத்தை அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி முதல்வர் திறந்து வைத்தார்.
அடுத்த சில தினங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் ' பெரியார் அறிவுலகம் ' நேரில் சென்று பார்வையிட்டு நான் பார்த்து பார்த்து கட்டியது என்று பெருமிதம் கொண்டார்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் சரவெடி இன்று வரை தொடர் சத்தத்துடன் வெடித்துக் கொண்டிருக்கிறது. அவர் சொன்னது இதுதான். கோவையில் ‘ பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரம்மாண்ட நூலகம் திறக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தகம் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. ஒரு எழுத்தாளராக நான் கண்ட காட்சியின் அடிப்படையில், இந்தக் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். இதை யார் செய்திருப்பார் என்று தெரியாது; பார்வைக்கு வைக்கப்படும் போதே, கட்டாயம் ஊழல் நடந்துள்ளது என்பது தெரிகிறது. 'அகல் விளக்கு ' என்ற பதிப்பகம் வெளியிட்ட 2000 புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நூற்றுக்கும் அதிகமான பதிப்பகங்கள் இருக்கும் நிலையில் குறிப்பாக ஒரு பதிப்பகத்தின் 2000 புத்தகங்கள், அலமாரியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில், ஒவ்வொரு புத்தகமும் அதிக விலை கொண்டுள்ளது. 100 பக்கம் கொண்ட புத்தகத்திற்கு 150 ரூபாய் என விலை வைப்பர். மிகவும் பிரபலமான எழுத்தாளராக இருந்தால் 200 ரூபாய் விலை வைப்பர். ஆனால், ஐந்து மடங்கு விலை வைத்துள்ளனர். 300 ரூபாய் புத்தகத்திற்கு 1500 ரூபாய் விலை வைத்துள்ளனர்.
பெரும்பாலும் இங்குள்ள எந்த புத்தகத்திற்கும் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையே இல்லை. 2000 புத்தகங்கள் கொடுத்துள்ளனர். அந்தப் புத்தகங்கள் தரமானதாகவும் இல்லை. ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறனால் உருவாக்கப்பட்ட போலி நூல்கள் என தெரிகிறது. மோசடிப் புத்தகங்கள் என்று தான் அவற்றை நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டி உள்ளது.
அவற்றில் இருக்கும் தகவல் அனைத்திலும் மொழி நடை தமிழ் போல் இல்லை. அவற்றின் ஆசிரியர்கள் இதுவரை எந்த நூலும் எழுதியதாக தெரியவில்லை. அதனால் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்ததாக தெரிகிறது. பல புத்தகக் கட்டுகள் பிரிக்கப்படாமல் இருந்தன. அந்தப் புத்தகங்களையும் பிரித்துப் பார்த்தால் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யார், விநியோகம் செய்தவர்கள் யார் ;அந்தப் பதிப்பக உரிமையாளர் யார் என்பதையெல்லாம் கண்டறிந்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்பதுதான் பெருமாள் முருகனின் சரவெடியின் சாரம்.
இந்த ஊழல் பற்றி அமைச்சர் ராஜ்மோகன் பேசியது இது "கோவையில் ஈவேரா நூலகம் திறந்து வைக்கப்பட்டது. அதை நாங்கள் தான் கட்டினோம் என திமுக பெருமை தேடிக்கொள்கிறது. தற்போது பெருமாள் முருகன் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஈவேரா நூலகத்தில் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் ஒரு பதிப்பகத்தில் 1800 நூல்கள் வாங்கியுள்ளனர். அப்படி ஒரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்திலேயே இல்லை.
நூலகத்தில் நடந்த ஊழல், கடந்த திமுக ஆட்சியில் கடந்த ஒரு பெரிய ஊழலின் எடுத்துக்காட்டு .ஈவேரா பெயரிலேயே ஊழல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த அகழ்வாய்வு குறித்து, ஒரு நூல் கொள்முதல் செய்துள்ளனர்.
அந்த நூலில், கீழடி புகைப்படங்கள் என, இணையத்தில் இருந்து எடுத்த படங்களை வைத்துள்ளனர். அந்தப் புத்தகத்தை யார் எழுதியது தெரியவில்லை. பாரதியாரின் கதைகள் என ஒரு புத்தகத்தை வாங்கி இருக்கிறார்கள். இதை விட பள்ளி மாணவர்கள் சிறப்பாக கதை எழுதியிருப்பார்கள் .இப்படி அனைத்திலும் ஊழல் செய்துள்ளனர். இந்த ஈவேரா நூலக ஊழல் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்களோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் "என்று அமைச்சர் கூறியுள்ளார்.
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சொல்லியும் இதுவரை யார் பெயரில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அதேசமயம் பெரியார் நூலகம், சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம் இங்கெல்லாம் அகல் விளக்கு புத்தகங்களை வாரி வழங்கி இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் இப்போது கைப்பற்றி அரசாங்கம் கட்டு கட்டி வைத்திருக்கிறது.
திமுக ஒரு அறிக்கை மூலம் ஈவேரா நூலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என முத்திரையிடப்பட்டுள்ளதாக அங்கு இருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த தேதி கூட முதல்வருக்கு பிறந்தநாள் தான். நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர் திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமோகா விஜய் எழுத்தாளர்களின் பெயரை பார்த்து பதறிய பின் தான் அரசுக்கு தெரிந்ததா அல்லது எந்த விவரமும் தெரியாமல் அமைச்சர் பேசுகிறாரா என்று கேட்டிருக்கிறார்கள்.
அமைச்சர் ராஜ்மோகன்," எல்லாமே திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட புத்தகங்கள் தான் புத்தகங்களில் 2025 -ஆம் ஆண்டுக்கான முத்திரை உள்ளது .கமலாம்பாள் கருணாநிதி, நிவேதா அன்பழகன், நிவேதா பால்ராஜ், ஸ்ரீலேகா விஜய் இப்படி நடிகர் நடிகைகள் பெயரில் புத்தகங்கள் உள்ளன"என்கிறார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கம் அகல் விளக்கு எங்கள் சங்கத்தில் உறுப்பினரே இல்லை என்கிறார்கள். அகல் விளக்கு பதிப்பகம் மடிப்பாக்கத்தில் ஒரு சிறிய அறையில் இயங்குகிறது. இதே விலாசத்தில் மேலும் இரண்டு பதிப்பகங்கள் இருப்பதாக பதிப்பக உரிமையாளர் மோகன் சொல்கிறார். நாங்க ரொம்ப வருஷமா புத்தகங்களை வழங்குகிறோம். நூல்களில் நாங்கள் வெளியே கொடுத்து அச்சடிக்கிறோம் என்கிறார் மோகன். நான் யாருக்கும் இலாபப்பங்கு தரவில்லை எல்லாம் மின்னஞ்சல் வாயிலாக எனக்கு கிடைத்த ஆர்டர் என்கிறார் பதிப்பக உரிமையாளர்.
நூல்கள் கொள்முதல் செய்வதற்காக 2025 நவம்பர் 5-ஆம் தேதி ஒரு ஆணையை வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் படி நூல்களை பரிந்துரை செய்வதற்காக, எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கல்வியாளர்கள், வாசகர்களுக்கு உட்பட 137 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினரால் பரிந்துரைக்கப்படும் ஆயிரக்கணக்கான நூல்களில் இருந்து கொள்முதலுக்கான பட்டியலை இறுதிப்படுத்துகிறது. 13 பேர் கொண்ட தேர்வு குழு. இந்தத் தேர்வு குழு இறுதிப்படுத்தும் பட்டியலில் உள்ள நூல்களைக் கொள்முதல் செய்வதற்கு அவற்றினை வெளியிட்டுள்ள பதிப்பகத்தாருடன் பேசி விலையை நிர்ணயிக்கிறது.
5 பேர் கொண்ட நூல் விலை பேச்சுவார்த்தை குழு. இவ்வளவு குழுக்களை கடந்து, சீரான பரிசீலனைகளுக்குப் பிறகு புத்தகங்கள் வாங்கப்படுகின்றன. பரிந்துரை செய்தது யார் ? குழு உறுப்பினர்கள் யார் ? இந்த புத்தகங்களுக்கு பணப்பட்டுவாடா எப்போது நடந்தது இந்த விவரங்களே போதும் இது மெகா ஊழல் என்பதற்கு.
இந்த விவரங்களை இந்த அரசு வெளியிடுவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை.
இப்போது கூட ஒரு பொது நல வழக்கு மூலம் தான் நீதிமன்றம் அகல் விளக்கு வங்கி கணக்குகளை முடக்கி இருக்கிறது தவறு செய்த ஒரு நபரை கூட இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீதிபதியின் கேள்விகளுக்கு 4 நாட்கள் அவகாசம் வாங்கி இருக்கிறது ஜோசப் விஜய் அரசு.
மொத்தத்தில் இந்த ஆட்சியில் எல்லாமே சஸ்பென்ஸ் தான்.

Leave a comment
Upload