தொடர்கள்
ஆசிரியர் பக்கம்
நாயன்மார்கள் புத்தக வெளியீடு மற்றும் விகடகவி மீட். (வீடியோவுடன்)

20240216080102204.jpg

வருடத்திற்கொரு முறையாவது விகடகவி ஆசிரியர் குழு சந்திப்பது வழக்கம்.

அது ஒவ்வொரு முறையும் காஷுவலாக இருக்க வேண்டும் என்று முயற்சித்து அது மைக்கில் பேசி ஒரு சின்ன கூட்டம் போல நிகழ்ந்து விடுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த முறை ஹைலைட் ஆரூர் சந்தரசேகரின் அறுபத்திமூன்று நாயன்மார்கள் பற்றிய விகடகவியில் தொடராக வந்த புத்தகத்தை வெளியிட்டது தான்.

அவரது தாய் உட்பட குடும்பத்தினர் வந்திருந்தது விகடகவி சங்கமத்திற்கு மேலும் மெருகூட்டியது.

ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் மதன் அவர்களை சந்திப்பது ஒரு பெரிய திரில் அனுபவம்.

இந்த கூட்டத்தில் அவரை சந்திக்க அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள என்றே சிலர் விருந்தினராகவும் வந்திருந்தனர்.

வழக்கம் போல் மதன் சார் அனைவரையும் சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, உணர வைத்து, சிலிர்க்க வைத்து தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு சிறப்பித்தார்.

அவருடன் ராவ் சார், கே.பி.எஸ், சுபா வெங்கட், மேப்ஸ், நமது ஜாசன் போன்ற அனுபவஸ்தர்கள் பேசி கூட்டத்தை அர்த்தமுள்ளதாக்கினார்கள். (மேப்ஸ் பேசவில்லை.மாட்டார். அவரது மொழி புகைப்பட மொழி மட்டுமே)

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது மாண்புமிகு நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா. எத்தனை அலுவல்கள் இருந்தாலும் விகடகவி அழைப்பை தட்ட மாட்டார் எங்கள் நீதியரசர்.

20240216080448762.jpeg

20240216080745853.jpeg

(பின்னே கட்டியிருக்கும் பலூன் எங்க ஐடியா இல்லை. ஏற்கனவே நடந்த பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை கலைக்க விரும்பாமல்.....)

வீடியோ லிங்க் இங்கே