என் உயிர் லைலா... - வேங்கடகிருஷ்ணன்
😌😇✨
பாவம் விவசாயிகள்... - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்
ஓரே நாளில் இப்படி நிலைமை மாறி அத்தனை பயிர்களும் தண்ணீரில் முழுகி, இயற்கை தரும் இத்தகைய இன்னல்களுக்கு விவசாயிகளிடம் ஏதாவது சொல்ல கூட வார்த்தை எழாது... இறைவன் இவையெல்லாம் சரி செய்து, அரசு நல்ல வழி செய்து கொடுக்கும் என்று நம்புவோம்...
பாலா
மிஸ்டர் ரீல்...! - ஜாசன்
ஆனாலும் இத்தனை சுவாரசியமாக ரீல் உங்களால் மட்டுமே விட முடியும்...வேறு யாராலும் விடவே முடியாது...
அன்பே தண்டனை... – பா.அய்யாசாமி
அய்யாசாமியின் அன்பே தண்டனை சிறுகதை, இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபடுவோருக்கு சரியாக சவுக்கடி... சபாஷ்!
ஆரோக்கியமேரி, நாகப்பட்டினம்
வாவ் வாட்ஸப்!
வாட்ஸ் அப் படங்கள் பட்டைய கௌப்பிடுச்சு! எங்க ஹார்ட் பீட்டை எகிற வெச்சுட்டீங்க...
கௌஷிக், சவுந்தரராஜன், பெங்களூர்
சுட்டிகளின் கைவண்ணம்
விகடகவியின் சுட்டிஸ் ஸ்பெஷல் கட்டுரைகள் செம கலக்கல். அதுவும் இதில் வெளியான வீடியோவில் சுட்டிகளின் கைவண்ணத்தை கண்டு பிரமிப்பு ஏற்பட்டது.
சுஷ்மிதா, தீக்ஷிதா, துரைப்பாக்கம்
T20 உலகக் கோப்பை தோல்வி... - கி. ரமணி
T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தன்னம்பிக்கை இன்மையை புட்டு புட்டு வைத்திருக்கிறார் ரமணி. ஐபிஎல்லில் அதிகளவு ஈடுபாடு காட்டிய இந்திய வீரர்கள், நாட்டுக்காக ஆடும்போது சொதப்புவது கேலிக்குரியது!
ஜமுனா பிரபாகரன், ஊத்துக்கோட்டை
"கலக்கல் மித்தான்ச் " - ஸ்வேதா அப்புதாஸ் .
மித்தான்ச், ரிஷாப் ஆகிய சூப்பர்மேன்களாக வளர்க்கும் அவர்களின் பெற்றோரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இதுபோன்ற பல்வேறு அதிநவீன திறமைகளை இருவரும் வளர்த்துக் கொண்டு தலைசிறந்த குடிமகன்களாக வளரட்டும்!
கலா கார்த்திக், அயனம்பாக்கம்
"நீலகிரி கலெக்டரை மாற்ற துடிக்கும் உயர் அதிகாரிகள்...” - ஸ்வேதா அப்புதாஸ்
ஊட்டி கலெக்டர் இன்னொசன்ட் திவ்யாவின் செல்வாக்கு மக்களிடையே அதிகரிக்க, சக உயர் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கண்களை உறுத்துவது சகஜம்தான். இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் கொதித்தெழ வேண்டும். உதாரணமாக, கடலூர் கலெக்டராக இருந்த ககன்தீப் சிங் பேடி மாற்றப்பட்டபோது அப்பகுதி மக்கள் கொதித்தெழுந்ததைப் போல்! பின்னர் உச்சநீதிமன்றமே மாற்றல் உத்தரவை வாபஸ் வாங்கிவிடும்!
ரேணுகா ஹரி, நெல்லை
பாவம் விவசாயிகள்... - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்
மழை வெள்ளம்னாலும் கோடை வறட்சினாலும் விவசாயிகள் தான் பெரிதும் பாதிக்கின்றனர். அவர்களுக்கு உரிய நிவாரண நிதியுதவியும் உரிய காலத்தில் கிடைப்பதில்லை. அவர்களை மத்திய-மாநில அரசுகள் பல்வேறு வகையில் பந்தாடி வருகிறது என்பதே நிஜம்!
சிவகாமசுந்தரி, கேசவமூர்த்தி, தஞ்சாவூர்
தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜானுடன் ஒரு சந்திப்பு.... - தில்லைக்கரசி சம்பத்
தில்லைக்கரசியின் கேள்விகளுக்கு வெதர்மேன் ரிப்போர்ட் நல்லாயிருக்கு. ஆனால், அவர் சொல்ற மாதிரி... மனிதன் இயற்கையை சேதப்படுத்தாம வாழணுமே! அப்புறம், அரசியல்வாதிங்க எப்படி பிழைக்கறது?!
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
அசர வைக்கும் ஆய்வாளர்... - மரியா சிவானந்தம்
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் மனிதநேய செயல் பாராட்டுக்கு உரியது. அந்நேரத்தில் பெண் என்றும் பாராமல், ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் வாலிபரை தூக்கி சுமந்தாரே... அவரே பாரத தாய்!
மாயா குப்புசாமி, வடபழனி
வினீஷா உமாசங்கர்.... - தில்லைக்கரசிசம்பத்
காலநிலை மாற்றம், கார்பன் மாசு அதிகரிப்பை பற்றி வருடா வருடம் பேசிக்கொண்டு இருக்காமல் உலகத் தலைவர்களே உடனடியாக செயலில் இறங்குங்கள் என்ற தமிழக மாணவி வினிஷா உமாசங்கரின் பேச்சு, இளைய தலைமுறை செயல்பாடுகளின் எதிரொலிதான்! சிறப்பு.
சூர்யா, ரோஹித், சாய்கிருஷ்ணா, சென்னை
ஆட்சி மாறினாலும் அவஸ்தை மாறவில்லை மழை - ஒரு பரிதாப ரிப்போர்ட் - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்
சென்னை மழை வெள்ள சேதங்கள் குறித்து விகடகவி கட்டுரை மிகச்சிறந்த உதாரணம். 5 ஆண்டுகளுக்கு ஆட்சி மாறினாலும், சென்னை நகரம் மழை வெள்ளத்தில் மூழ்குவது மாறாது! ஏன்னா ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை பிளாட் போட்டு விற்றவர்கள் 2 பிரதான மற்றும் கூட்டணி கட்சிகள்தானே... வாய்க்கு வந்ததை உளறுவார்கள். நாமும் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்ட வேண்டியதுதான்!
சுந்தர்ராஜன், பரிமளா, வேளச்சேரி
வலையங்கம்
குழந்தைகளை கவனியுங்கள் வலையங்க வரிகள் அனைத்தும் மனதில் ரணகாயங்கள் ஏற்படுத்தியது. ஒரே ஆறுதல் - தமிழகம் 7-வது இடத்தில் இருப்பது! குழந்தைகள் ஊட்டச்சத்து உணவிலும் பணம் பார்க்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் இருக்கும்வரை இந்நிலை மாறாது!
அனந்தராமன், சிவகாசி
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்... - 4 - இரா.சு.இராசன்
ஐந்தியக்கப் பேராற்றல் - இதைவிட பொருத்தமான சொல் இருக்க முடியாது. நான் என்னுடைய எழுத்துக்கள் மற்றும் மொழிபெயர்ப்பில் இதனை உபயோகிப்பேன் ஐயா. உங்கள் தமிழ் பணிக்கு என்னால் இயன்ற கைம்மாறு. என் அஞ்சலி 🙏
அன்பே தண்டனை... – பா.அய்யாசாமி
நல்லதொரு மெச்சதகுந்த கற்பனை!
“பெண்கள் பரிபாலனம்…” - வெ.சுப்பிரமணியன்
இப்படியும் ஒரு கதை. அதை பிரசுரிக்க ஒரு பத்திரிகை!
வெள்ளம் 2015... - கி. ரமணி
2015 வெள்ளம்.... அதிலிருந்து எதேனும் கற்றுக் கொண்டது உண்டா?. எல்லாரும் தான்! மக்கள், மாநகராட்சி, அரசு, மற்றும் அரசு சார்ந்த ஊழியர்கள்... அது போகட்டும். இப்போதாவது எதேனும் கற்றுக் கொண்டது உண்டா?
பார்கவன்
"நீலகிரி கலெக்டரை மாற்ற துடிக்கும் உயர் அதிகாரிகள்...” - ஸ்வேதா அப்புதாஸ்
அது இந்திய மண்ணின் சாபம். நன்றாக பணி புரிந்து வருவது பலரையும் உறுத்துவது!
பார்கவன்
“பெண்கள் பரிபாலனம்…” - வெ.சுப்பிரமணியன்
ஐயா பொம்பள நாட்டாமை ஏதோ உங்க வீட்டு பிரச்சனை இல்லை. ஆண்டாண்டு காலமா நம்ம நாட்டோட ஏன் உலகத்தோட வழக்கமே பொம்பள ராஜியம்தான். எங்க போய் சொல்லுறது இந்த அநியாயத்தை. பேருக்கு குடும்ப தலைவர்ன்னு சொல்வாங்க. நம்பாதீங்க.
முத்துசாமி பி, ஓகையூர்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Aaroor.Sundarasekarin GnanaSambandar article bakthiyai Thoondum murail ulladu!
பத்ரநாராயணன், வேடல்
குழந்தைகள் ஆரோக்கியம் நம் கையில்…!! - மீனாசேகர்.
Ella.periyavargalum kooda padithu Rasikkavendiya katturai.wishes to MeenaSekar.
கீதாமணி, விஜயபுரம்
Leave a comment
Upload