
உலகப் பொதுமறை என்று பேசப்படும் திருக்குறள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு திருவள்ளுவரின் பெருமையை பேசுகிறது. பிரதமர் மோடியும் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் அங்கு திருக்குறளின் பெருமையைப் பற்றி மனம் திறந்து பேசுகிறார். ஒன்றரை அடியில் உங்களின் எல்லா கேள்விகளுக்கும் அவர் எளிய முறையில் விளக்குகிறார். ஆனாலும் தமிழ்நாட்டில் அவர் அரசியல் காரணங்களுக்காக சர்ச்சையில் சிக்கி தவிக்கிறார். மொத்தத்தில் ஐயோ பாவம் திருவள்ளுவர்.
ஆளுநர் மாளிகையில் காவி உடை அணிந்த திருவள்ளுவரை வைத்தது சர்ச்சையானது. இந்த சர்ச்சையை கிளப்பிவிட்டது திமுக தான். காவி திமுகவுக்கு பிடிக்காத ஒரு வண்ணம் என்று நாம் எல்லோரும் நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல காவி அவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பார்கள் ஆதரிக்கவும் செய்வார்கள். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்கும் போது ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் காவி உடையில் இருந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். மதத்தில் புரட்சி செய்த மகான் என்று ராமானுஜர் வரலாறு கலைஞர் டிவியில் தற்சமயம் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அரை மணி நேரம் ஒளிபரப்பாகும் அந்த அந்தத் தொடர் முழுக்க எல்லோரும் காவி மயமாகத்தான் இருப்பார்கள். ராமானுஜர் மீது சனாதன எதிர்ப்பாளர்களுக்கு திடீர் கரிசனம் ஏன் ?சிறுபான்மையர் வாக்கு வங்கி இனி தங்களுக்கு கிடையாது என்பதை கிட்டத்தட்ட தேர்தல் முடிவு மூலம் தெரிந்து கொண்டு விட்டார்கள் இனிமேல் இந்துவே சரணம் என்று சரணகதி அடைவதற்கு முதல் படி தான் இந்த ராமானுஜர் தொடர்.
முதன்முதலில் திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்து, இன்று நாம் அனைவரும் பரவலாகப் பார்க்கும் பொதுவான அடையாளப் படத்தை வரைந்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா.

திருவள்ளுவருக்கு முறையான ஒரு வடிவத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவர் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல ஆய்வுகளைச் செய்தார்.
அவர் வரைந்த திருவள்ளுவரின் திருவுருவப் படம், 1964ஆம் ஆண்டு தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னர், 1967ஆம் ஆண்டு மத்திய அரசு இந்த உருவப் படத்தை அஞ்சல் தலையாகவும் (Stamp) வெளியிட்டுச் சிறப்பித்தது.
இன்று நாம் காணும் ச திருவள்ளுவரின் தோற்றத்திற்கு இவருடைய தூரிகையே முதன்முதலில் உயிர் கொடுத்தது.
திருவள்ளுவருக்கு வெள்ளை உடை போட்டது கருணாநிதி காலத்தில் தான் என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே. அதுமட்டுமல்ல 1960களில் இருந்த திருவள்ளுவர் படத்தில் வெள்ளை உடையில் திருவள்ளுவர் இருந்தார் என்ற படத்தை காட்டுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுகிறார் பாண்டே.
பாஜகவின் மாநில செயலாளர் ராம ஸ்ரீ னிவாசன் ஒரு விளக்கத்தை பதிவு செய்திருந்தார். திருவள்ளுவருக்கு ஏன் காவி உடை இருக்கக் கூடாது என்பது அவர் கேள்வி. எந்தவித மத அடையாளம் இல்லாத திருவள்ளுவருக்கு ஒரு மத அடையாளத்தை எப்படி கொடுக்கலாம் என்று சிலர் கேட்கின்றார்கள் .எந்தவிதமான அடையாளமில்லாத திருவள்ளுவருக்கு இவர்கள் மட்டும் ஏன் வெள்ளை நிற உடை அடையாளத்தை கொடுக்க வேண்டும் என்பது அவர் இன்னொரு கேள்வி. அவர் இந்து புலவர் தான். திருக்குறளில் இந்து மதத்தின் கடவுள்களை குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். அப்படியானால் அவர் ஒரு இந்துவாக தான் இருக்க முடியும் என்பது அவர் வாதம்.
சரஸ்வதி லட்சுமி கடவுள்களுக்கு எந்தவிதமான அடையாளமும் இல்லாமல் இருந்தபோது ரவிவர்மா தான் அந்த கடவுளுக்கு அடையாளத்தை வரைபடமாக வரைந்தார். அதற்கு முன் சரஸ்வதி உருவத்தை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வள்ளலார் வெள்ளை உடை அணிந்து இருந்தார்.வள்ளலாரை மக்கள் பார்த்து இருக்கிறார்கள்.ஆனால் வள்ளுவரரை யாரும் இதுவரை பார்த்திராத போது அவருக்கு கொண்டையும் தாடியும் இவர்கள் எப்படி கொடுத்தனர் என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் பாஜக ராம ஸ்ரீ னிவாசன்.
இவ்வளவு எல்லாம் பேசுகின்ற திராவிட கட்சியினர் மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலுக்கு உள்ளே போக மாட்டார்கள். திருவள்ளூர் கோயிலுக்கு உள்ளே போனால் பதவி பறிபோகும் அல்லது அரசியலில் ஆபத்து வரும் என்ற சென்டிமென்ட் தான் காரணம். இந்த கேள்வியை எந்த பத்திரிகையாளர்களும் கேட்பதில்லை அது வேறு கதை.
திராவிட கட்சிகள் பாரதியாரை ஒரு சில காரணங்களுக்காக கண்டுகொள்ளாமல் அல்லது பெரிதாக குறிப்பிடாமல் விட்டது போல நல்ல வேளையாக திருவள்ளுவரையும் அப்படி செய்யாமல் இருந்ததே பெரிய விஷயம் தான்.
இதனிடையே திருவள்ளுவர் திருமாலைத் தான் கடவுளாக ஏற்றுக் கொண்டவர் என்று ஆணித்தரமாக கூறுகிறார் ஆன்மீக அறிஞர் டாக்டர்.எம்.ஏ.வெங்கடகிருஷ்ணன்.


Leave a comment
Upload