தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

ராஷ்மிகா மந்தனா

20260505155054275.jpg

தான் அணிந்துள்ள தாலியை ராஷ்மிகா மந்தனா தானே டிசைன் செய்திருக்கிறார். நிறைய அளவு தங்கத்தை பயன்படுத்தி அந்த நகை செய்யப்பட்டது என்கிறார் நடிகை.

ஜான்வி கபூர்

20260505153916645.jpg

"பொது இடங்களிலும், திரைப்பட நிகழ்ச்சிகளிலும் இருப்பது போல், படப்பிடிப்பு தளத்தில் அவர் சாதுவான மற்றும் அமைதியான மனிதர் கிடையாது. இந்தியாவின் பெரிய ரவுடி இயக்குனர் அவர்தான். அதனால் தான் 'ஆச்சியம்மா' என்ற ஆற்றல் மிகுந்த எனது கதாபாத்திரத்தை அவரால் உருவாக்க முடிந்தது" என்று பொத்தி படம் சம்பந்தமான விழாவில் இயக்குனர் புச்சிபாபு சனா குறித்து கலகலப்பாக கருத்து சொன்னார் நடிகை ஜான்வி கபூர்.

நிவேதா பெத்துராஜ்

20260505155414741.jpg

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடிப்புக்கு திரும்பி உள்ள நிவேதா பெத்துராஜ் வெங்கடேஷ் நடிக்கும் ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பாயல் ராஜ்புத்

20260505165559123.jpeg

தனது சோசியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வரும் நடிகை பாயல் ராஜ்புத் நாலு மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை வைத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை கவர்ச்சி சரிதான் என்கிறார்.

கங்கன ராணாவத்

20260505165752464.jpeg

கழுத்தில் தாலி, கையில் வளையல்கள், நெற்றியில் திலகம் என்று கங்கணா ரணாவத் தோற்றமளிக்கும் புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. "நான் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறேன். அப்படி ஒரு படத்துக்காக நடிக்கும் கேரக்டரின் கெட்டப்பில் இருக்கும்போது யாரோ சிலர் போட்டோ எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டனர். நான் ரகசிய திருமணம் எல்லாம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார் நடிகையும் அரசியல்வாதியுமான கங்கணா ரணாவத். ஒரு அரசியல் தலைவரை அவர் காதலிப்பதாக ஒரு கிசுகிசுவும் சுற்றி வருகிறது.

நயன்தாரா

20260505161239282.jpg

கமலை இயக்கும் நெல்சன் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்கிறார். இதுவரை கமல் ஜோடியாக நயன்தாரா நடிக்க வில்லையாம்.

அண்டர் 18

20260505170041328.jpeg

அண்டர் 18 என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிடி மாஸ்டராக நடிக்கிறார். வழக்கறிஞராக கிச்சா சுதீப் நடிக்கிறார்.

பூஜா ஹெக்டே

20260505154439607.jpg

"என்னைப் பொருத்தவரை மனதில் ஆயிரம் சோகங்கள் மறைந்து கிடந்தாலும் முகத்தில் அதைக் காட்டக் கூடாது என்று உறுதியாக இருப்பேன்"என்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

திரிஷா

எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் உண்டா என்ற கேள்விக்கு இப்போது வரை அரசியலுக்கு வருவது குறித்து என்னிடம் எந்த ஐடியாவும் இல்லை என்கிறார் நடிகை திரிஷா.

கெனிஷா

20260505170340664.jpeg

ரவி மோகனுடன் இணைத்து பேசப்பட்ட பாடகி கெனிஷா மலையாள படத்தில் அறிமுகமாகிறார்.

கியாரா அத்வானி

20260505170804994.jpeg

"நான் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததும் எல்லோருக்கும் 'ஹாய், ஹலோ, குட் மார்னிங்' என்று சொல்வது வழக்கம். இதைப் பார்த்த இயக்குனர் கீது மோகன்தாஸ் ஒரு நாள் என்னை அழைத்து இனி யாருக்கும் ஹாய், ஹலோ, குட் மார்னிங் சொல்ல வேண்டாம். படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததும் உங்கள் கேரக்டர் மனநிலைக்கு போயிடுங்க அப்போதுதான் ஸ்கிரீனில் அது எதார்த்தமாக இருக்கும் என்றதால் நான் அவர் மீது கோபப்பட்டேன். எனது கேரக்டரின் தன்மையும், தீவிரமும் கேமரா முன் குறையாமல் இருக்கவே அவர் இப்படி சொன்னார் என்பதை புரிந்து கொண்டதும் அவர் மீதான கோபம் போய்விட்டது" என்கிறார் நடிகை கியாரா அத்வானி.