தொடர்கள்
விகடகவியார்
கரப்பான் பூச்சியும் சர்ச்சையும் - விகடகவியார்

20260505172157850.jpeg

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு வழக்கு சம்பந்தமான விவாதத்தில் "வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் போல பிரச்சினைகளை உருவாக்குவதாக சொன்னது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் அருகே உள்ள சம்பாஜி நகரை சேர்ந்த அபிஜித் திப் கே என்பவர் காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற வலைதளத்தை தொடங்கினார்.

அதுல இன்ஸ்டாகிராம் எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் பரப்ப, அதில் பல லட்சம் பேர் உறுப்பினர்கள் ஆனதுடன் பல்வேறு காணொளிகள், பாடல்கள் ஆகியவற்றை பரப்ப தொடங்கி அந்த வலைதளம் ஒரு பிரசித்தி பெற்ற ஒரு வலைதளமானது.

இப்போது இந்த தளத்தை மத்திய அரசு முடக்கி இருக்கிறது.

ஆங்காங்கே இளைஞர்கள் இந்த கட்சியின் பெயரில் ஊர்வலமாக செல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கூட அப்படி ஒரு ஊர்வலம் நடந்தது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்த இளைஞர்கள் கோபம் இதில் தீவிரமாக வெளிப்படுகின்றது.

தலைமை நீதிபதி நான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கரப்பான் பூச்சி பிரபலமானதும் விளக்கம் சொன்னார்.

"எக்ஸ் வலைதளத்தில் இந்திய தலைமை நீதிபதி சொன்னதை பார்த்துக் கொண்டிருந்தேன் .

அதில் அவர், நாட்டின் இளைஞர்களை, குறிப்பாக அமைப்பை விமர்சிப்பவர்களையும் தங்கள் கருத்துக்களைத் துணிச்சலாக வெளிப்படுத்துவர்களையும் கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டார்.

ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமையும், கருத்து சுதந்திரத்தையும் வழங்கும் அரசியலமைப்பை பாதுகாப்பதில் கடுமையாக கொண்ட தலைமை நீதிபதியை இப்படி பேசியது மிகவும் அபத்தமானதாக தோன்றியது.

கரப்பான் பூச்சிகளுடன் ஒட்டுண்ணிகளுடன் அவர் இளைஞர்களை எப்படி ஒப்பிட முடியும் ? " என்கிறார் அபிஜித் திப்கே.

இந்த கருத்தை அவர் வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

அதற்கு ஜென்ஸி மற்றும் 25 வயதுக்கு இளைஞர்களிடமிருந்து ஆச்சரியமான பதில்கள் வந்தன. அவர்கள் தான் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று யோசனை சொன்னார்கள்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் ஆன்லைனில் ஒரு நையாண்டி அரசியலமைப்பை நான் உருவாக்கினேன் என்கிறார்.

அமைப்பில் உறுப்பினராக சேர்க்க சில தகுதிகளையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

தலைமை நீதிபதி கூறியது போல் சோம்பேறியாக இருக்க வேண்டும், வேலையில்லாதவராக இருக்க வேண்டும், எப்போதும் ஆன்லைனில் நேரத்தை செலவிடுபவராக இருக்க வேண்டும் சுருக்கமாக சொன்னால் இளைஞர்களை இழிவுபடுத்தும் விதமாக இந்திய தலைமை நீதிபதி பயன்படுத்திய ஒவ்வொரு இழிவான கருத்துக்களையும் நாங்கள் இந்த கட்சிக்கான உறுப்பினர் தகுதியாக வைத்து விட்டோம் என்கிறார் அபுஜித் திப்கே.

உறுப்பினர் பதிவு தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் இதற்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்தது.

பெரும்பாலான மக்கள் அனைவரும் இதற்கு பதில் அளிக்க தொடங்கியதோடு இல்லாமல் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள தொடங்கினார்கள்.

அதன் பிறகு தான் இது வெறும் நகைச்சுவையோ நையாண்டியோ மட்டுமல்ல அதைவிட பெரிதாக மாறப் போகிறது என்பதை உணர்ந்தோம்.

மக்கள் மத்தியில் ஒரு வித விரக்தி மனப்பான்மை இருக்கின்றது என்பதை அவர்கள் வெளியிட்ட கருத்துக்களை பார்த்து தெரிந்து கொண்டேன் என்கிற அபிஜித் உடனே நாங்கள் ஒரு இணையதளத்தை உருவாக்கி கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டோம் என்கிறார்.

இன்ஸ்டாகிராமில் அவர்களுக்கு பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை நான்கு மில்லியனை தாண்டி விட்டது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் கூட நான் இந்த கட்சியில் சேர விரும்புகிறேன் என்று விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.

திருணாமுல் காங்கிரஸ் எம்பி மெஹுவா மொய்த்ராவும் இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.

இது டிஜிட்டல் ஊடக உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய திடீர் திருப்பம் புரட்சிகரமான நிகழ்வு என்றும் பேசப்படுகிறது.

அபிஜித் இதற்கு நான் மட்டும்தான் காரணம் என்று சொல்ல மாட்டேன். அவர்களாக ஒன்றிணைந்து இருக்கிறார்கள்.

அவர்களை ஒன்றிணைத்தது எது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்களின் மனதில் பல ஆண்டுகளாக தேங்கி கிடந்த ஏமாற்றமும் கோபமும் தான் இவ்வளவு பெரிய வரவேற்புக்குகாரணம் என்கிறார் .

மக்களுக்கான அரசு மக்களுக்கான அரசியல் என்று சொல்லிக்கொண்டு ஏதோ இலவசங்களை வழங்கி ஓட்டுக்கு பணம் தந்து ஆட்சியைப் பிடித்ததும் மக்களை மறந்து விடுகிறார்கள்.

வேலையில்லா திண்டாட்டம் என்பது இன்று வரை தீர்க்கப்படாத பிரச்சனை என்பதைத்தான் கரப்பான் பூச்சிகள் சொல்லி இருக்கிறது.