
18 ஆயிரத்து 600 கோடியில் மூன்று திட்டங்கள் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்.
திராவிட மாடல் ஆட்சி கூட இதே மாதிரி நிறைய ஒப்பந்தங்கள் போட்டுச்சு ஆனா, கம்பெனி திறந்தா மாதிரி தெரியல ?
அண்ணாமலை ராஜினாமா கடிதம் எனக்கு வரவில்லை நயினார் நாகேந்திரன்.
உங்ககிட்டயே ராஜினாமா கடிதம் வாங்கிட்டதா சொல்றாங்க ? அப்புறம் எப்படி உங்ககிட்ட தருவாரு ?
தமிழக நிதி ஒதுக்கீடு குறைப்பு உரிமைகள் பறிக்கப்படுவதை அரசு ஏற்கக் கூடாது அன்புமணி ராமதாஸ்.
அது விடுங்க நீங்க இப்ப எந்த கூட்டணியில் இருக்கீங்க ?
டெல்லிக்குச் சென்று கல்வி நிதியை தமிழகத்துக்கு பெற்றுத்தருவோம் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.
பணமா வாங்கி வருவீங்களா ? செக்கா வாங்கி வருவீங்களா ?
செயல்பாடுகளால் தமிழக வெற்றிக்கழகமும் பாஜகவும் ஒன்றுதான், திமுக கடும் தாக்கு.
அப்ப பாஜக உள்ளே வந்துடுச்சு என்பது உண்மைதான் !!
கல்விதான் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி முதல்வர் விஜய் வாழ்த்து.
ஆனா பாருங்க நீங்கதான் படிக்காமயே பாதியிலேயே திரும்பிட்டீங்க !!
இண்டியா கூட்டணியில் திமுக ஒரு அங்கம், கிரீஷ் சோடங்கர்.
நீங்களே அந்த கூட்டணியில் தேவையான்னு சில கட்சிகள் யோசிக்குது அந்த விஷயம் தெரியுமா !!
காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை உடைத்து உள்ளோம், முதல்வர் விஜய்.
அதுக்கு பதில் மொத்த விற்பனையில் சட்டமன்ற உறுப்பினர்களை வாங்கிட்டிங்க !!
விடுதலை சிறுத்தை மீது எங்களுக்கு அதிக பாசம். பாசம் உள்ளவர்கள் மீது தான் அதிக கோபம் வரும் ஆ.ராசா.
அப்ப தலைவர் ஸ்டாலின் மீது பாசம் இல்லை அப்படித்தானே ?
எடப்பாடியை சந்திக்க விஜய் நேரம் கேட்கவில்லை கே.பி.முனுசாமி.
அதுக்கு பதில் தான் சண்முகம் வேலுமணி சிக்கிட்டாங்களே !!
பக்கத்து தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்.
அடுத்த முறை அந்த தொகுதியில் போட்டி போட போறாரு அதான் அட்வான்ஸா தேங்க்ஸ் சொல்லி இருக்காரு !!
திருப்பதி நெய் கலப்பட விவகாரம் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.
கலப்பட நெய் லட்டு வாங்குறதுக்கு அவ்வளவு கிராக்கி !!
மம்தாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், மேற்குவங்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு.
அங்கேயும் ஒரு சண்முகம் வேலுமணி இருக்காங்க போல தெரியுது !!
2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
ரொம்ப சீக்கிரம் தீர்ப்பு வந்துடுச்சு !!

Leave a comment
Upload