
தமிழகம் இந்த வருட அக்னி நட்சத்திரம் மே 4 முதல் 28 வரை சூரிய கதிர்வீச்சை எதிர்கொண்டு அதிர்ந்துவிட்டது.
தமிழக கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சுட்டெரித்தாலும் மறுப்புறம் வெப்ப அலை வீச்சு மற்றும் கடற்காற்று நிலப்பரப்பினை நோக்கி வராததால் வெப்பம் சுட்டெரித்தது.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கடும் வெப்பத்திற்கு ஆளாகி அவதி பட்டனர்.

பசிபிக் பெருங்கடலில் 2026 ஆண்டு மத்தியில் உருவாக இருக்கும் சூப்பர் எல் நினோ நிகழ்வால் தமிழகத்தில் கடும் வெப்ப அலைகள் , கடும் வறட்சி , குடிநீர் தட்டுபாடு ஏற்படும் என்றும் வடகிழக்கு பருவ மழை காலத்தின் போது கடலோர மாவட்டங்களில் ஒரு வருடம் பெய்ய வேண்டிய மழை ஓரே நாளில் கொட்டி தீர்த்து பெருவெள்ளம் வரும் . இந்த நிலைமை 2027 ஆண்டு வரை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை வழக்கத்தினை விட அரை டிகிரி அல்லது அதற்கு மேல் உயர்ந்து உலகம் முழுவதும் வானிலையை மாற்றி அமைக்கும்.
தமிழ்நாட்டில் இந்த வருடம் 111°F வரை கோடை வெயில் சுட்டெரித்தது.கோடை மழையும் சரிவர பெய்யவில்லை .
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சராசரியை விட குறைவாக தான் பெய்யும் என்று வானிலை நிபுணர்கள் சொல்கிறார்கள்.

விவசாயம் பாதிக்கபடலாம் , நிலத்தடி நீர் மட்டம் குறைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்படலாம் .
பெருவெள்ளமும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் ஏற்படலாம் என்று தகவல் உலாவுகிறது.
தமிழக அரசு போர்கால அடிப்படையில் தண்ணீர் சேமிக்கப்படும் ஏரிகள் , குளங்கள் , கால்வாயகள் கண்மாய்கள் தூர்வாரி மழைநீர் சேகரிப்பை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

வாயிலில்லா ஜீவ ராசிகளுக்கு பகல் நேரத்தில் குடிக்க நீர் வையுங்கள் ..
மிக சக்தி வாய்ந்த சூப்பர் எல்-நினோ நிகழ்வு இந்த ஆண்டில் ஏற்படுவதால் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் வறட்சி மற்றும் காட்டுத்தீ ஏற்படக்கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனமும் ஐ.நா.-வும் எச்சரித்துள்ளது.

2026 ஆண்டு உலகெங்கும் வெப்ப ஆண்டாக வரலாறு படைக்கும்.

Leave a comment
Upload