
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பாரதிய ஜனதாவில் பட்டும் படாமலே இருந்தார் அண்ணாமலை. ஆனாலும் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அவருக்கென தனி ஹெலிகாப்டர் தந்து தேர்தல் பிரச்சாரம் செய்யச் சொன்னது டெல்லி பாஜக. பிரச்சாரத்தை சொல்லியபடி செய்தார். ஆனாலும் பெரிய அளவு வெற்றி இல்லை. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை தனி கட்சி தொடங்குவார் என்பது பேசும் பொருளானது.

அண்ணாமலையை பொருத்தவரை சமூக வலைதளத்தில் கிட்டத்தட்ட ஐம்பது ஐடி வைத்துக் கொண்டு அவரது ஆதரவாளர்கள் அண்ணாமலை புகழ் பாடுவார்கள்.
முதல்வர் அண்ணாமலை, அண்ணாமலை ஆர்மி இப்படி நிறைய நிறைய எல்லாமே அண்ணாமலைக்கு ஜால்ரா அடிக்கும் பதிவுகள் தான் அதில் இருக்கும்.
பாரதிய ஜனதா பற்றியும் பிரதமர் மோடி பற்றியும் பெருமை பேசும் படி அந்தத் தளங்களில் எதுவும் இருக்காது.
எல்லா புகழும் அண்ணாமலைக்கு என்ற லெவலில் தான் அந்தத் தளங்கள் அண்ணாமலை புகழ் பாடும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த இரண்டாம் தேதி கட்சியை விட்டு விலகுவதாக ஒரு கடிதத்தை பாரதிய ஜனதா தலைமையிடம் தந்தார் அண்ணாமலை.
கூடவே அமித்ஷாவை சந்தித்து நமது விலகல் முடிவை இறுதியாக அறிவித்தார்.
இரண்டாம் தேதி ராஜினாமா கடிதத்திற்கு ஐந்தாம் தேதி ஏற்றுக் கொண்டதாக பாஜக தலைமை அறிவித்தது.
சமூக வலைதளம் மூலம் நான் சந்தித்து உங்கள் கருத்துக்களை கேட்பேன் என்று நான்காம் தேதி அதாவது அண்ணாமலை பிறந்தநாள் அன்று வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் அண்ணாமலை. சொன்னபடி ஐந்தாம் தேதி 12 மணிக்கு சமூக வலைதளத்தில் காட்சியளித்த அண்ணாமலை தான் ஏன் பாரதிய ஜனதாவின் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்பதற்கான காரணங்களை சொன்னார்.
.அது குறிப்பிட்டு சொல்ல வேண்டியது தேசியக் கட்சிகளுக்கு தமிழகத்தின் மொழி தெரியவில்லை என்பது.
பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஏதாவது திராவிட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தல் அரசியலை எதிர்கொள்கின்றன.
அதில் சிலர் சட்டமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிறார்கள் என்பதை அண்ணாமலை மறந்துவிட்டார். மும்மொழி க் கொள்கை தவறு என்று இப்போது சொல்கிறார்.
இதே அண்ணாமலை சென்றாண்டு மும்மொழி என்றால் இந்தியை தான் படிக்க வேண்டும் என்பதல்லவேறு வடமொழிகளை கூட படிக்கலாம் என்றார்.
என்னுடைய பார்வை திமுக பாரதியஜனதா இரண்டையும் சரிசமமாகத்தான் பார்க்கும்.
ஒரு முதல்வர் 34 அமைச்சர்களால் தமிழ்நாட்டின் பிரச்சனை தீராது என்கிறார். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதே தெரியவில்லை.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார் ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என்கிறார்.
என்னை கட்சியில் சேருமாறு ரஜினி அழைத்தார் என்கிறார் நான் பாரதிய ஜனதாவில் இணைந்து விட்டு அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டேன் என்கிறார் அண்ணாமலை.
அது மட்டுமல்ல கட்சியை நிர்வாகிப்பேன் ஆட்சியை ஒரு படித்த இளைஞரிடம் ஒப்படைப்பேன் என்று என்னைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டார் என்கிறார் அண்ணாமலை.
தமிழ்நாட்டுக்கு இன்னொரு கட்சி தேவை என்று சொல்லி அவர் தொடங்கி இருக்கும் இயக்கத்திற்கு நான்கு மணி நேரத்தில் 6 லட்சம் பேர் இணையதளத்தில் ஆதரவு தெரிவித்து இணைந்திருக்கிறார்கள்.
கடந்த 18 மாதங்களாக பொறுமையாக வெளியில் கூச்சல் போடாமல் கட்சியின் முக்கிய தலைவர்களிடம் என் கருத்து வேறுபாடு தெரிவித்து வந்தேன் என்றும் சொல்கிறார்
தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குகிறோம். இது இயக்கமா கட்சி இல்லையா என்று யாரும் கேட்க வேண்டாம் கண்டிப்பாக அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கட்சி போட்டியிடும் என்கிறார்.
2011 தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் போட்டியிடுவோம் என்று ரஜினிகாந்த் சொன்னது நமக்கு இப்போது தேவையில்லாமல் நினைவுக்கு வருகிறது.
ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகி கல்யாண் சிங் உமா பாரதி எடியூரப்பா போன்ற முன்னாள் முதல்வர்கள் தனி கட்சி தொடங்கி பிறகு மீண்டும் பாஜகவில் ஐக்கியமானார்கள்.
சட்டமன்ற உறுப்பினர் கூட ஆகாமல் தொடர் தோல்வியை தழுவிய அண்ணாமலை என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்க வேண்டும்.


Leave a comment
Upload