ஓவிய கலைகள் உருவாகி வரும் சூழலில் மற்ற ஒரு கலை நூல் வடிவங்களாக மெருகேறிக்கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊட்டி பகுதியில் உள்ள முக்கிய ஹோட்டல்களில் இந்த “ டஃப்டிங் கலை அரங்கேறியது.
கோவையை சேர்ந்த தேஜிஸ்வனி இந்த கலையை ஒரு வொர்க் ஷாப் மூலம் செய்து வருகிறார்.
குன்னூர் ஹை பீல்ட்ஸ் எஸ்டேட் ஹோட்டலில் இந்த வொர்க் ஷாப் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேஜேஸ்வனி பருத்தி துணியால் அவுட் லைன் ஓவியத்தை வரைந்து கொடுக்க இந்த வொர்க் ஷாப்பில் பதிவு செய்து வரும் டஃப்டிங் கற்று கொள்ள வரும் கலைஞர்கள் மிகவும் உன்னிப்பாக அவர்களுக்கு கொடுக்கப்படும் தையல் கன் மெஷின் மூலம் ஒரு அழகான நூல் ஓவியங்களை உருவாக்கி வருகிறார்கள்.
இந்த டஃப்டிங் கலை லண்டனில் உருவாகி தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது.
தேஜேஸ்வனி கூறும் போது,

“ நான் ஜஸ்ட் லண்டன் டூர் சென்றேன் அப்பொழுது அங்கு தான் டஃப்டிங் வொர்க் ஷாப் சென்று பார்த்தபோது அதன் மேல் ஒரு பற்று ஏற்பட்டு அங்கே கற்று கொண்டு வந்தேன்.
கோவை வந்த பின் இந்த வொர்க் ஷாப் ஆரம்பித்துள்ளேன்.
இந்த நூல் கன் எல்லாம் மும்பையில் இருந்து வாங்கியுள்ளேன் .
ஒரு கன்னின் விலை 10 ஆயிரம் ரூபாய். பின் பிரேம், நூல், வொர்க் ஷாப் வாடகை என்று ஏகப்பட்ட செலவு அதை சரிகட்ட ஸ்டிச்சிங் ஓவியம் வரைய வரும் ஓவியர்கள் ஸ்டிச் செய்து ஒரு தொகை கொடுத்து அதை வாங்கி செல்லலாம்.

கலர் நூலை கன்னில் பொருத்தி பிரேமில் பொருத்தியுள்ள துணியில் வரைந்துள்ள ஓவிய அவுட் லைனில் கன் ஷூட் செய்து அழகான ஓவியத்தை ஸ்டிச் செய்து உருவாக்கிவிடுவது ஒரு கலை “என்கிறார்.
சேலத்தில் வொர்க் ஷாப் நடத்த ஏகப்பட்ட பேர் வந்து இந்த ஓவிய கலையை கற்று கொண்டு அசத்தி விட்டார்களாம்.
தேஜேஸ்வனி கோவை பி எஸ் ஜி கல்லூரியில் படித்து தற்போது இந்த அழகிய ஓவிய கலை வொர்க் ஷாப் நடத்தி பல கலைஞர்களை உருவாக்கி வருகிறார்.
லண்டனில் இருந்து வந்துள்ள மரியா படு பிசியாக இந்த டஃப்டிங் ஓவியத்தை கன் மூலம் ஷூட் செய்து வரைந்து கொண்டிருந்தார்.
ஒரு அழகான ரோஸ் கலர் ‘போ’வை வரைந்து அசத்தினார் அவரிடம் பேச்சி கொடுத்தோம்,

“ நான் லண்டனில் இருக்கும் போது இந்த டஃப்டிங் ஆர்ட் அருமையாக இருக்கிறது அதுவும் லண்டனில் ஒரு அழகான ஓவியம் ஷூட் செய்து ஸ்டிச்சிங்கில் வரைந்து தள்ளுவார்கள். அது தத்துருபமாக இருக்கும்.
ஒரு சீனரி ஓவியம் ஷூட் செய்து ஸ்டிச்சிங்கில் வரைய ஒரு மணிநேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை ஆகும்.

இந்த வொர்க் ஷாப் மூலம் பொழுதும் போகும் அழகிய ஓவியமும் நம் கையால் உருவாகி நம் கையில் தவழும் இது சூப்பர் தானே “என்கிறார் .
தற்போது இந்த ஓவிய ஸ்டிச்சிங் கலை பிரபலமாகி வருகிறது.

Leave a comment
Upload