தொடர்கள்
கதை
காக்கி சட்டைக்காரி- முனைவர் என். பத்ரி

20260506002223542.jpeg

அது ஒரு வெள்ளிக் கிழமை இரவு. அந்தப் பேருந்து ஒரு நடுத்தர நகரத்தின் பேருந்துநிலையத்தில் வந்து நின்றது. வந்தனா சென்னையிலிருந்து வந்த பேருந்திலிருந்து கீழேஇறங்கினாள்.

அங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அவளுடைய கிராமத்திற்கு அவள் செல்லவேண்டும்.சென்னையில் பெண்கள் விடுதி ஒன்றில் தங்கி பணிபுரியும் அவளுக்கு ஒவ்வொருவெள்ளி இரவும் இது ஒரு தொடர்கதை.

30 வயதை நெருங்கும் அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்றகவலை அவளுடைய அம்மா சித்ராவுக்கு அதிகம்.பேருந்து நிலையத்தில் இருந்த ஓய்வுஅறைக்குள் நுழைந்த வந்தனா ஒரு காக்கிச்சீருடையை அணிந்துக் கொண்டு வெளியேவந்தாள்.

கிராமத்துக்குச் செல்லும் கடைசி 10 மணி பேருந்துக்காக காத்திருந்தாள்.மக்கள் அதிகம் இருந்தப் பகுதியில் உட்கார்ந்த அவள் பேருந்து வந்து நிற்கும் இடத்தை மிகக்கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளுடைய கிராமத்திற்கு செல்லும் கடைசிபேருந்து அது.

பௌர்ணமி நாட்களில் அதை திருவண்ணாமலைக்கு அனுப்பிவிடுவார்கள்.அப்போதெல்லாம் அந்த கிராமத்திற்கு போகும் மக்கள் பாடு திண்டாட்டம்தான்’நல்ல வேளை .இன்று பௌர்ணமி இல்லை. பேருந்து வந்துவிடும்.’ என்ற நம்பிக்கையில் அவள்உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

காக்கி சட்டையில் இவளைப் பார்த்த உள்ளூர் காவல்காரர் ஏறெடுத்து பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். மணி 10 மணியை தாண்டி விட்டது. பேருந்து இன்னும்வந்த பாடு இல்லை.

டிப்டாப் உடையில் இருந்த இளைஞன் இவளுக்கு கொஞ்சம் தூரத்தில் வந்து உட்காந்து கொண்டான் சிறிது நேரத்திற்கு பிறகு கைபேசியில் யாருடனோ பேசினான். சிறிதுநேரத்தில் இன்னொரு இளைஞனும் வந்தான் இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகபேசிக் கொண்டிருந்தார்கள்.

காக்கிச்சட்டையில் இருந்தாலும், வந்தனாவுக்கு மிகவும் பயமாக இருந்தது ஏறத்தாழமக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது இவள் மனதால் பயப்படுவது அந்த இளைஞர்கள்உணர்ந்து கொண்டார்கள் இருந்தும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.வந்தனாவுக்குஉடம்பெல்லாம் வியர்த்தது.

ஒரு வழியாக 10.30 மணி அளவில் அவளுடைய ஊருக்கு செல்லும் பேருந்துவந்தது. பேருந்தில் ஏறி அமர்ந்த அவளிடம்,அந்த இளைஞன் ஒரு துண்டுச்சீட்டைக்கொடுத்தான். ’ஊருக்கு பாதுகாப்பாக போய்ச் சேர்ந்த உடனே இந்த எண்ணுக்கு மெசேஜ்பண்ணி விடுங்கள், என்று சொல்லி விட்டு மறைந்தான்.சீட்டில் கண்ணன் என்ற பெயருடன்அவனுடைய தொலைபேசி எண்ணும் தென்பட்டது.

சனி, ஞாயிறு விடுமுறைகளில் கிராமத்தில் தனியாக இருக்கும் தன்னுடைய அம்மாவைபார்க்க வந்தனா வருவாள். மற்ற நாட்களில் எல்லாம் பக்கத்து வீட்டு கண்ணியம்மாள்தான்அவளுடைய அம்மாவுக்கு உதவியாக இருக்கிறாள்.

வந்தனாவின் வருமானம்தான் அவர்களின் குடும்பத்திற்கு ஒரேஆதாரம். அவள் தன்னுடைய சிறுவயதிலேயே தந்தையை இழந்தவள். தாயின் அரவணைப்பில்வாழ்ந்து வளர்ந்தவள்.அம்மா சித்ரா ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை.அவளுக்குஓய்வூதியம்எதுவும் கிடையாது.

இப்பொழுதுதான் அவளுக்கு புரிந்தது. பாதுகாப்பாக இந்த இரண்டுஇளைஞர்களும் இதுவரை இருந்திருக்கிறார்கள். ஏன் இவர்கள் தனக்கு பாதுகாப்புகொடுத்தார்கள்? நான் இதுவரை இவர்களை பார்த்ததே கிடையாதே? அவளுடைய எண்ணம்அலைப்பாயத் தொடங்கியது.

டுத்த 20 நிமிடத்தில் தன்னுடைய ஊரை சென்றடைந்தது அந்த பேருந்து. வாசலிலேயேஅவளுடைய அம்மாவும், பக்கத்து வீட்டு கண்ணியம்மாகவும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

பெண்னைப் பார்த்த அம்மாவின் முகத்தில்தான் எவ்வளவு மகிழ்ச்சி.அவளைஅணைத்தபடி வீட்டிற்குள் அழைத்துச் சென்று சாப்பிடவைத்தாள்.

அப்போது கன்னியம்மாவின் மகள் அர்ச்சனா அங்கு வந்தாள்.’அக்கா, முதல்ல அந்த காக்கிச் யூனிஃபார்மை கொடுங்க’ என்று அதை வாங்கிக் கொண்டு சிட்டாகப் பறந்துப்போனாள்.அவள் ஓர் உள்ளூர் ஊர்க்காவல் படை உறுப்பினர். ஒரு பாதுகாப்புக்காக வந்தனாஅவளின் சீருடையை வாங்கிக் கொள்வது வழக்கம்.

சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் பொழுது கண்ணன் பற்றிய விவரத்தை அம்மாவிடம் சொன்னாள் வந்தனா.

‘கன்ணன் என்னிடம் 5ஆம் வகுப்பு வரை படித்தவன்.இன்றுக் காலை வங்கியில் அவனைப்பார்த்தேன் உன்னை பற்றி சொன்னேன். அவனுடைய வீடு அங்கு பேருந்து நிலையத்தின்பக்கத்தில்தான். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் நீ தனியாக வருவதாக அவனிடம்சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் அவன் இன்றுஉனக்கு உதவி இருக்கிறான்.’ சொல்லி முடித்தாள் அவளின் அம்மா.

’நீ காக்கைச் சட்டைக்காரி இல்லை.சென்னையில் ஓர் அலுவலகத்தில் வேலைசெய்கிறாய்’ என்பது அவனுக்கு தெரியும்.உன்னை பாதுகாப்பாக பேருந்து பேருந்தில்ஏற்றிவிடத்தான் அவன் அங்கு இருந்திருக்கிறான். உடனே, தொலைபேசியில் அவனுக்குநன்றியைச் சொல்’ என்று சொல்லிவிட்டு படுக்கப் போனாள் அவளுடைய அம்மா.

இப்படியும் ஒரு இளைஞனா?’ என்று வியந்தப்படி படுக்கப் போன வந்தனா இனிதனக்கி காக்கிச் சட்டை தேவையில்லை என்று முடிவு செய்தாள்.

கண்ணன் இருக்க எனக்கு என்ன கவலை? என்று எண்ணியபடியே தூங்கச் சென்றவந்தனாவுக்கு தூக்கம் ஏனோ வரவில்லை!