தொடர்கள்
வலையங்கம்
 நல்ல விஷயம் தானே

20240612202823870.jpg

வீட்டுப் பெண்களானகுடும்பத் தலைவிகளுக்கு தனியாக வருமானம் இல்லை என்பதால் அவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை கணவர் அளிக்க வேண்டியது என்றும் அதுதான் உண்மையான வளர்ச்சி என்றும் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பி வி நாகரத்தினனாமுஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் பராமரிப்பு தொகை கோரலாம் என்று சொல்லி தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

இந்தியாவில் திருமணம் ஆன பெண்களிடம் தனி வருமானம் என எதுவும் இல்லை. தங்களின் தேவைகளுக்கு குடும்பத்தில் இடம் கேட்டு பணத்தை பெற வேண்டிய சூழல் உள்ளது. அவர்களுக்கு நிதி சுதந்திரம் இல்லை. திருமணம் ஆகிவிட்டால் கணவருடனும் அவர்கள் குடும்பத்துடனும் தங்க வேண்டும் என்பது இந்திய கலாச்சாரத்தின் முறையாக உள்ளது.

திருமணம் ஆகி தன்னை நம்பி வந்த மனைவி உணர்வு பூர்வமாக மட்டுமின்றி நிதி ரீதியாகவும் தன்னையே சார்ந்து இருக்கிறாள் என்பதை கணவர்கள் புரிந்து கொள்வதில்லை .குடும்பத்தின் நலனுக்காக நாள்தோறும் உழைக்கும் பெண்கள் கணவரிடம் எதிர்பார்ப்பது அன்பு மற்றும் பாசம் மட்டுமே. ஆனால் பல குடும்பங்களில் பெண்களுக்கு இது கிடைப்பதில்லை என்று நீதிபதி குறிப்பிட்டு இருக்கிறார்.

கூடவே தனக்கென்று தனியாக வருமானம் ஈட்ட முடியாத மனைவியின் கவலைகளை கணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்திற்கு மேற்கொள்ளப்படும் செலவுகள் இல்லாமல் அவர்களுக்கென்று தேவைப்படும் தனிப்பட்ட செலவுகளுக்கும் தேவையான பணத்தை சற்றும் யோசிக்காமல் கணவர் வழங்கி அவர்களுக்கு நிதி சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை அளிக்க முன் வரவேண்டும் என்று உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பி வி நாகரத்தினா குறிப்பிட்டுள்ளதுநல்ல விஷயம் தான் இதை கணவர்கள் புரிந்து நடப்பது நல்லது.