வரதட்சணை என்பது 60கள் மற்றும் 70களில் பிராமண குடும்ப பெண்களுக்கு தான் திருமணத் தடையாக இருந்தது.
வரதட்சணை, சவரன் கணக்கில் நகை, வெள்ளிப் பொருட்கள் என்பதுதான் பெண்பார்க்கும் போது மணமகன் தரப்பில் முக்கிய பேச்சாக இருக்கும்.
அந்த காலத்தில் வரதட்சணை பற்றி நிறைய மேடை நாடகங்களில் வசனங்கள் பேசி இருக்கிறார்கள்.
டௌரி கல்யாணம் வைபோகமே என்று விசு ஒரு நாடகம் எழுதி அது அப்படியே திரைப்படமாக வந்தது. சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கூட வரதட்சனை ஒரு முக்கிய இடத்தை வகித்தது.
அதெல்லாம் இப்போது அந்த காலம் என்று ஆகிவிட்டது.
பிராமண குடும்பங்களில் கிட்டத்தட்ட வரதட்சணை என்பது இப்போது இல்லவே இல்லை என்று ஆகிவிட்டது.
இதற்கு இன்னொரு காரணமும் உண்டு பெண்கள் வேலைக்கு போகிறார்கள் அது அவங்களது பொருளாதார சிக்கலை சரி செய்யும் என்பதும் ஒரு முக்கிய காரணம். "நீங்க ஒன்னும் போடவேண்டாம் உங்க பெண்ணை எங்க மாட்டுப் பொண்ணா ஆக்குங்க அது போதும்" என்று பேசி திருமணத்துக்கு சம்மதம் தெரிவிப்பார்கள் ஆண் வீட்டார்கள்.
இப்போது வரதட்சணை என்பது பிராமணர்கள் இல்லாத பிற ஜாதிகளில் தான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
லட்சத்தில் வரதட்சனை, நூற்றுக்கணக்கில் நகை, மாப்பிள்ளைக்கு கார் என்று கோரிக்கைகள் மிகப்பெரிய பட்டியலாக நீண்டு கொண்டிருக்கிறது.
அப்படியே திருமணம் நடந்தாலும் திருமணம் நடந்த ஒரு சில நாட்களிலேயே மாப்பிள்ளை வீட்டாரின் உண்மை முகம் வெளியே வருகிறது.
இதற்குப் படித்த முட்டாளான மாப்பிள்ளையும் உடந்தை என்பதுதான் இன்னொரு சோகம்.
பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் திருமணம் ஆன ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் நீதிமன்றத்திற்கு வந்து விடுகிறது என்று ஒரு வழக்கறிஞர் பேசும்போது குறிப்பிட்டார்.
பெரும்பாலான தற்கொலைகள் வரதட்சணை தொடர்புடையது என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
உண்மையில் இதற்குக் காரணம் என்ன பெண்ணை கட்டிக் கொடுத்தால் போதும் என்பதால், தீர விசாரிக்காமல் அவசர அவசரமாக திருமணம் செய்யும் பெண் வீட்டார்கள் ஒரு வகையில் பொறுப்பு. இன்னொரு காரணம் மேட்ரிமோனியல் தளங்கள். முன்பெல்லாம் அக்கம் பக்கம் சொந்தத்தில் உள்ளவர்கள் இந்த ராமசாமி பையன் நல்ல பையன் ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது கை நிறைய சம்பாதிக்கிறான். நீ உன் பொண்ண அந்த பையனுக்கு பேசி பாரு என்று யாராவது தகவல் தருவார்கள் அதன் பிறகு பேசிப் பார்த்து திருமணம் கைகூடும். இப்போது அந்த தொடர்பு எல்லாம் கிட்டத்தட்ட விட்டே போய்விட்டது.
திருமணம் என்றால் நம் உடனே போய் மேட்ரிமோனியில் பணம் கட்டி வரன் தேடுவது என்று ஆகிவிட்டது.
மேட்ரிமோனியல் வலைதளம் என்பது ஜாதி வாரியாக வந்துவிட்டது.
இது கிட்டத்தட்ட வருமானம் கொழிக்கும் ஒரு தொழில் என்று ஆகிவிட்டது .
தனியார் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களே இதற்கு சாட்சி. மேட்ரிமோனியில் பதிவு செய்யப்படும் பல தகவல்கள் பொய் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஆனாலும் அவர்களின் சக்கரை தடவிய பேச்சை நம்பி திருமணம் நடந்து கடைசியில் வரதட்சணை அது இது என்று கிட்டத்தட்ட 25 சதவீத திருமணங்கள் சிக்கலில் இருக்கிறது என்கிறது ஒரு புள்ளி விவரம்.
இதற்கும் அவர்கள் உதாரணம் சொல்வது மேட்ரிமோனியல் தளத்தை தான்.
சில விவரம் அறிந்த பெண் வீட்டார்கள் தனியார் ரகசிய துப்பறிவுத்துறை மூலம் விசாரிக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் தகவல்களை அடிப்படையில் அந்த வரன் ஓகேயா இல்லையா? என்று முடிவு செய்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
70-களில் 80-களில் திருமணம் கிட்டத்தட்ட உறுதி என்று முடிவு செய்வதற்கு முன்பு மணமகன் பற்றி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் அலுவலகம் அவர்கள் நண்பர்கள் ஆகியோரிடம் விசாரிப்பார்கள்
இப்போதெல்லாம் அவசர கதியில் இன்று விசாரணை எல்லாம் இல்லாமல் மாலை ரிசப்ஷன் காலை திருமணம் ஒரு மணிக்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. வரதட்சணை பற்றி அந்த காலத்தில் ஒரு புதுக்கவிதை வந்தது.
நாங்கள் சூர்ப்பனகைகளாகவே இருக்க விரும்புகிறோம்
இல்லை என்றால் எங்கள் மூக்கிற்கும் வைரம் வேண்டும்
திருமணம் பெற்றோர் கடமை....
ஆனால் அவசரப்படாமல் நிதானமாக அந்தக் கடமையை செய்தால் சம்சார வாழ்க்கை இனிக்கும் இது பெண்ணை பெற்றவர்களின் பொறுப்பு.
இன்னொரு விஷயமும் இங்கே குறிப்பிட வேண்டும். வரதட்சிணையே வேண்டாம் என்றால் பையனுக்கு ஏதோ குறை இருக்கிறதோ என்ற ஆதிகால சந்தேகமும் ஒழிய வேண்டும்.
வரதட்சிணை வாங்கி திருமணம் செய்வது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று ஆணும் உணர வேண்டும்.
Leave a comment
Upload