இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போவதாகவும், இந்தத் தொடரின் சிறந்த ஆட்டநாயகனாக விளங்க வேண்டும் என்றும் தன்னுடைய ஆசையை சுப்மன் கில், இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப முதல் டெஸ்ட் தொடரில் 147 ரன்கள் எடுத்து தனது திறமையை நிரூபித்தும், இந்திய அந்த போட்டியில் தோல்வியை தழுவியது. இதை ஈடு காட்டும் விதத்தில், எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. இது ஒரு சாதாரண வெற்றி அல்ல, இமாலய வெற்றி. எட்ஜ்பாஸ்டனில் நடந்த போட்டியில் இந்திய வென்றது இதுவே முதல் முறை, அதுவும் 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது சாதாரண செயலல்ல.
இந்த வெற்றிக்கு முழு முதற்காரணம் இந்திய அணியின் தலைவர் சுப்மன் கில். இவரை அணித் தலைவராக அறிவித்தது முதல், முதல் டெஸ்ட் போட்டியின் தோல்வி வரை அனைவரும் கில்லின் திறமையை சந்தேகித்து பலவித விமர்சனங்களை முன் வைத்தனர். அவர்களுக்கு தனது ஆட்டத்தின் மூலம் சுப்மன் கில் பதிலளித்துள்ளார். மொத்த கிரிக்கெட் உலகத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இருபத்தைந்து வயதில் கில் பல சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிரஹம் கூச்சை (456 ரன்கள்) தொடர்ந்து, 430 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அணித்தலைவராக, நான்காவது இடத்தில் ஆடி, தனது முதல் ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையும், இரண்டு செஞ்சுரிகள் மற்றும் 150 ரன்கள் ஒரே டெஸ்ட் ஆட்டத்தில் எடுத்த ஒரே வீரரும் கில். எப்படி இவரது சாதனைகளை நாம் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
சடுக் கொண்டே செல்லலாம்.
சச்சின், கங்குலி என கிரிக்கெட் உலகம் முழுவதும் இந்த வெற்றிக்கு பாராட்டுகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். பும்ரா ஆடாமல் கிடைத்த இந்த வெற்றியை குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் இந்திய அணி வலிமையாக இருப்பதாகவும், லார்ட்ஸில் நடக்கும் அடுத்த போட்டியிலும் இந்திய வெல்லும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வெற்றிக்கு ஆகாஷ் தீப், சிராஜ், பண்ட், ஜடேஜா, ராகுல் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக அளித்தார்கள். ஐந்து நாட்கள் கொண்ட இந்த தொடரின் இறுதி நாள் ஆட்டம் மழையின் காரணமாக நடக்குமா என எண்ணி இருந்த தருணத்தில், ஆட்டம் துவங்கியதும் இங்கிலாந்தை அரை நாளுக்குள் முடக்கியதற்கு கில்லின் தலைமை முக்கியமான காரணம் என்றே கூறலாம். ஆகாஷ் தீப்பின் பத்து விக்கெட்டுகள் எடுத்தது, சரியான நேரத்தில் வாஷிங்டன் சுந்தரை உபயோகித்து விக்கெட் எடுத்தது என இந்த இளம் இந்திய அணியின் வெற்றி நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இங்கிலாந்தில் கோட்டையாக விளங்கிய எட்ஜ்பாஸ்டன், தோல்வியே கண்டிராத இங்கிலாந்து அணி, முதல் முறை 336 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளது.
கிரிக்கெட்டை தாண்டி, கில்லின் தலைமைப் பண்பு, பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்கும் பாங்கும் பாராட்டுதலுக்குரியது. ஆங்கில பத்திரிகையாளர் ஜோ வில்சனுக்கும், கில்லுக்கும் நடந்த உரையாடலில் கில் அவரது கேள்விகளுக்கு சற்றும் பதட்டமில்லாமல் பதிலளித்த விதம் இதனை உறுதி செய்கிறது. அஸ்வின் தனது உரையில் கில் இந்திய அணி வெற்றி பெற என்ன வேண்டும் என்பதையும் அதற்கான தன்னுடைய முறையும், அணியில் இருப்பவர்களின் பங்கையும் தெளிவாக விளக்கிய விதம் ஆச்சரியம் அளிப்பதாக கூறியிருந்தார்.
இந்திய அணி நல்லதொரு தலைமையை பெற்றிருக்கிறது என்பது மகிழ்ச்சி, பெருமையும் கூட!
Leave a comment
Upload