தொடர்கள்
விகடகவியார்
எடப்பாடிக்கு சேரும் கூட்டம் யோசிக்கும் திமுக !! -விகடகவியார்

20250612054226505.jpeg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் கோடை வெயிலை போல் கொளுத்தும் வெயிலுக்கு இதமான நன்னாரி சர்பத் கொண்டு வந்து வைத்தார் ஆபீஸ் பையன்.

சந்தோஷமாக அதை சுவைத்துக் குடித்தார்.

எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டாரே!' என்று நாம் ஆரம்பித்ததும் ...

எடப்பாடி, முதல்வர் ஸ்டாலின் வசை பாடுவதில் இருந்து அவருக்கு நிறைய கூட்டம் கூடுகிறது என்று உங்களுக்கு தெரியவில்லையா?

எடப்பாடிக்கு இவ்வளவு கூட்டம் எப்படி கூடுகிறது ? என்றும் திமுக யோசிக்கிறது.

அதிமுக கூட்டணி பற்றி சொல்லும் என்றோம் நாம் ."கூட்டணிக் கட்சிகள் என்று பாஜக மற்றும் சிறு சிறு கட்சிகளுக்கு எடப்பாடி அவரே தொடர்பு கொண்டு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

தேமுதிக, பாமகவை தவிர்த்து விட்டார்" என்றார் விகடகவியார்.

'அவர்களை ஏன் அழைக்கவில்லை என்று நாம் கேட்டோம்.

தேமுதிகவை இப்போதே அழைத்தால் அவர்கள் நிறைய டிமாண்ட் வைப்பார்கள்.

பாமகவை பொறுத்தவரை அவர்கள் சண்டை ஓயட்டும் என்று காத்திருக்கிறார் எடப்பாடி என்றார் விகடகவியார்.

20250612054356575.jpg

பாமக விஷயத்துக்கு வாரும்' என்றோம். அன்புமணி சென்ற வாரம் டெல்லி போனார் அப்பா பையன் சண்டையில் தலையிடுமாறு பாஜக பெரியோரிடம் பேசினார் அன்புமணி.

கட்சி நிர்வாகிகள் உங்கள் பக்கம் இருந்தாலும் வன்னியர் சங்கம், வன்னியர் சமுதாயம் உங்க அப்பா சொல்வதை தான் கேட்கும் எனவே அவருடன் சமாதானமா நீங்கள் சென்றால் தான் நல்லது என்று புத்திமதி சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்.

அன்புமணி முடிவு என்ன ?

அவர் என் வழி தனி வழி என்று சமாதானம் எல்லாம் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டார்.

பெரியவர் ராமதாஸ் இனிஷியல் ஆக வேண்டும் ஆனால் என் பெயரை போட்டுக் கொள்ளட்டும் அன்புமணி ராமதாஸ் என்று போட்டுக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு அப்பா மகன் விரிசல் பெரிதாக்கி கொண்டே போகிறது" என்றார் விகடவியார்.

20250612054417751.jpeg

துரைமுருகன் விஷயத்துக்கு வாரும் என்று சொன்னோம்

.துரைமுருகன் பதவிக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவர் பாட்டுக்கு ஓரமாக உட்காரக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும் அவ்வளவுதான்.

முக்கிய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அதாவது கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கெல்லாம் கட்சித் தலைவர் அவரைக் கண்டு கொள்வதில்லை.

உடன்பிறப்பே வருக 'என்று நிர்வாகிகளை சந்தித்தார் அதற்கெல்லாம் பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு அழைப்பு இல்லை.

இருந்தாலும் அமைதியாக தான் இருக்கிறார் தேர்தலின் போது மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் ஏகத்துக்கு கெடுபிடி செய்யும் என்பதை தெரிந்து கொண்ட திமுக தலைமை பட்டுவாடா செய்வதற்கான விட்டமின் 'ப' இப்போதே தொகுதிகளில் பதுக்கத் தொடங்கி விட்டது என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.