தலைமை தேர்தல் ஆணையர்
1. என்னதான் உங்கள் பிரச்சனை ?
ஒரு பிரச்சனையா இரண்டு பிரச்சனையா பிரச்சனையுடன் எழுந்து பிரச்சனையுடன் தூங்கப் போகிறோம் இதுதான் எங்கள் அன்றாட நிகழ்வு. இதன் நடுவே உச்ச நீதிமன்றம், ராகுல்காந்தி, அதிமுக, பெரிய ராமதாஸ், சின்ன ராமதாஸ் இப்படி பஞ்சாயத்து எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. எங்கள் அலுவலகத்திலேயே மருத்துவர்கள் சிறப்பு முகாம் ஏற்படுத்தி அவ்வப்போது எங்கள் பிபியை சோதனை செய்து கொள்கிறோம்.
2. உச்சநீதிமன்றம் பீகார் அந்த பிரச்சனையை சொல்லுங்கள் ?
ராகுல்காந்தி உச்ச நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என்கிறார். ஆனால் வழக்கு தேர்தல் ஆணையத்தின் மீதுதான். இதிலிருந்து எந்த அளவுக்கு அவர் குழம்பி இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.
3. நீங்கள் ஏதோ ஆவணத்தை பூர்த்தி செய்து தரவில்லை என்றால் உங்களை ஓட்டளிக்க அனுமதிக்க மாட்டோம் என்கிறீர்களாமே?
இந்தியாவில் தேர்தல் இந்தியர்களுக்கு நீங்கள் இந்தியர் தான் என்று உறுதிமொழி தர சொல்கிறோம். இந்தியர்கள் இல்லாதவர்கள் வாக்களிக்க கூடாது என்று ஆனால் அதெல்லாம் செய்யக்கூடாது என்கிறது காங்கிரஸ்.
4. மத்திய அரசு உங்களுக்கு ஆதரவாக பேச மாட்டார்களா ?
அதெல்லாம் பேச மாட்டார்கள் தேர்தல் ஆணையம் அதிகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று உஷாராக ஒதுங்கி கொள்வார்கள்.
5. 'ராமதாஸ்கள்'பிரச்சனை என்ன ?
இரண்டு பேருமே பாட்டாளி மக்கள் கட்சி எனக்கு தான் சொந்தம் என்று சொல்கிறார்கள் மத்திய அரசு தமிழ்நாட்டில் இப்போது தேர்தல் எல்லாம் கிடையாது. அந்த மனுவை கிடப்பில் போடு என்று சொல்லிவிட்டது உத்தரவு எஜமான் என்று அப்படியே செய்து விட்டோம்.
6. மத்திய அரசு தலையிடவில்லை என்று சொன்னீர்கள்?
அது பிகார் பிரச்சனைக்கு மட்டும் பொருந்தும் என்கிறார்கள்
Leave a comment
Upload