ஐபிஎல்லின் வணிக மதிப்பு இன்றய தேதியில் 18.5 பில்லியன் டாலர்தாங்க. அதாவது, 15,87,43,32,00,000 ரூபாய் தாங்க. இது போன வருஷத்தில் இருந்த மதிப்பை விட 12.9% அதிகம்.
இந்த வருஷம் கப் அடிச்ச ஆர்சீபீயோட மதிப்பு இந்த வருஷம் தான் உயர்ந்தது.
அதே போல ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பும் சென்ற வருட மதிப்பில் 13.8% உயர்ந்து இன்று 3.9 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதாவது, இந்த பிராண்ட் ரசிகர்கள், கம்பெனி ஆதரவு, முதலீடு செய்வோரிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளதாக இருப்பதையே காட்டுகிறது.
இந்தியாவில் கிரெடிட் கார்ட் தேய்ப்பு கிட்டத்தட்ட 15.6 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இதில் மிடில் கிளாஸ் மாதவர்கள்தான் பெரும்பங்கு வகிக்கிறார்கள்..
ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியாவிடம் உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை 52 கோடியைத் தாண்டிவிட்டது
அதாவது, அமெரிக்காவின் ஜனத்தொகையத் தாண்டிவிட்டது.
இந்த பேங்கின் இருப்பு நிலைக் குறிப்பு (balance sheet) 175 நாடுகளின் GDP யை விட உயர்ந்தது.
சுதா- நாராயண மூர்த்தி தம்பதியினரின் மாபிள்ளையும் முன்னாள் இங்கிலாந்து பிரதமருமான ரிஷி சுனக் கோல்ட்மேன் சேசஸ்சில் மூத்தஆலோசகராக பணியில் சேர்ந்துள்ளார்.
இதே கம்பேனியில் 2001 – 2004 வரை பணி புரிந்திருக்கிறார். நல்ல காலம் நம்ம ஊர் பொதுவான அரசியல்வாதி மாதிரி இல்லாமல் படிப்பு இருந்ததால் தப்பிச்சார்.
ரெண்டு பொண்ணுகளுக்கு அப்பாவாச்சே. கல்யாணம் பண்ண வேணாமா?
கேப்டன் கூல் என்ற அடைமொழிக்கு டிரேட் மார்க் அங்கீகாரம் தனக்கென வைத்துக்கொள்ள முனைந்திருக்கிரார் தல தோணி.
இதற்கு ஒரு சட்ட வல்லுனர் குழாம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
நம்ம தல இத கூலா எடுத்துப்பாரா என்று பார்க்கணும்.
Leave a comment
Upload