கடந்த ஜூலை ஆறாம் தேதி ஆஷாட சுக்ல ஏகாதசி திருநாள். அந்த நாள் மராட்டிய தேசத்தில் உள்ள பண்டரிபுரத்தில் ஆயிரத்தில் இருக்கும் மக்கள் தொகை இருபது லட்சங்களுக்கு மேல் தாண்டி நிற்கும், தெய்வீகத்தை பரப்பி நிற்கும்.
க்ஷேத்ரம் என்றால் ப்ரம்மோத்சவம், வசந்தோத்சவம் போன்ற பல ஆரவார ஆடம்பர உத்சவங்களைத் தான் கேட்டிருப்போம்.
ஆனால் அங்கு நடப்பதோ நாம உத்சவம்.
ஆம். நாம உத்சவம் தான் ப்ரதானம்
அதாவது, பகவான் நாமம் சொல்லுவதுதான்.
ஏதோ
ஒரு நல்ல நாள் குறித்து, ஆள் சேர்த்து, மேடை அமைத்து, மைக் பிடித்து ஒரு மூன்றோ அல்லது பத்து மணி நேரமோ என்று இல்லாமல், என்றுமே எந்த கணமும் நிற்காத இன்னிக்கி நேத்து இல்லீங்க, கடந்த எழுநூறு வருடங்களாக நடந்து வருகிறது இந்த நாம ஜெபம்.
ராம்க்ருஷ்ண ஹரி வாசுதேவ ஹரி என்ற நாமம் தான் அது.
கூடவே பாமரனும் பட்டென பாடிடும் அபங்கங்கள். அபங்கம் என்றால் பின்னமில்லாதது என்று பொருள்.
பண்டரிபுரம் சென்றால் அந்த பூமியின் ஒவ்வொரு அங்கமும், கட்டிடம், அதன் செங்கல், அஃறிணையும் ஆனந்தமாய்க் கேட்டிடுமமே இந்த நாமத்தை.
ஆமாம், ஞான்தேவ் மஹராஜ் மற்றும் அவரது கூடப் பிறந்தவர் நால்வரும் செய்த லீலைகளில் அங்கு மேய்ந்து கொண்டிருந்த எருமை ருத்ரம் சொல்லியது. நால்வரும் அமர்ந்திருந்த குட்டி மண் சுவரை உயரச்செய்து நடக்கச் செய்தனர் எனில் நாம மகிமையின் சிறப்பை சிலிர்க்க அறியலாம். இன்றும் அங்கு அந்த எருமையின் சமாதி, அந்த அசைந்து நடந்த சுவர் இருக்கின்றன.
ஒவ்வொரு இல்லத்திலும் கண்டிப்பாக தம்பூரா இருக்கும். அங்கு வசிப்பவர்கள் முறை போட்டுக்கொண்டு தம்பூரா இசைத்தவாரே ராம்க்ருஷ்ண ஹரி வாசுதேவ ஹரி என்ற நாமாவை சுவைத்தவாரே இருப்பார்கள். கிட்டத்தட்ட நம் வீடுகளில் ரேடியோவில் பாடல்கள் கேட்பது போலே இங்கு நிகழ்வாக இசைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த பணி வீட்டினரோட நித்தியக்கடமையாக இருக்கக் காணலாம். இந்த நிலை அந்த ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் உண்டு.
கலி புகாத க்ஷேத்ரம் என்று அடித்து சொல்லலாம். இன்றும் அங்கு பொழுது போக்கும் சினிமா தியேட்டர்களோ, கள்ளுக் கடைகளோ இல்லை. ஏகாதசி அன்று ஹோட்டலில் கூட சாப்பாடு கிடையாது. கிடைக்காது. கிடைக்கும் உணவும் விரதத்திற்கு இசைவான உணவாய்த் தானிருக்கும்.
சரி.
இந்த பண்டரிபுரத்திற்கு ஆஷாட சுக்ல ஏகாதசிக்கு அருகில் உள்ள 300லிருந்து 400 கிமீ தூரத்தை ஞானதேவர், துக்காராம் போன்ற அந்த நாள் பாண்டுரங்கனின் சந்த் பாகவதர்களின் திருப் பாதுகைகளை பல்லக்கில் ஏற்றிக்கொண்டு லட்சோப லட்ச பக்தர்களுடன் பாத யாத்திரையாக காடுகளையும் மலைகளையும் ஆனந்தத்துடன் அபங்கங்களையும், நாமங்களையும் பாடியவாரே கிராமங்களே நகர்வது போலே நடந்து வருவார்கள்.
பண்டரிபுரம் சென்றடைந்து கோவிலில் அவனைக் காண்பதை விட அங்கு கூடியிருக்கும் பக்த லட்சங்களுடன் நாம உத்சவத்தில் ஈடுபடுவார்கள். அடியவருக்கு அடிவராக அவனும் கோவிலுள் இருப்பது கடினம் தான். அவனும் பக்தரோடு பக்தராக கலந்து தெய்வீகத்தைப் பரப்பிடுவான். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அனுபவித்ததுதானே.
அந்த லட்சங்களில் எவரையோ ஒருவரை அழைத்து பாடு என்றால் அபங்கத்தை தவறாது பாடுவார். அது ஹரி பாட் கீர்த்தன். அது மஹாராஷ்ட்டிரத்தில் ஒரு தேசீய கீதமாக அனைவரும் பாடுவார்கள். ஆனால் நம்ம ஊரில் நாலாயிர திவ்யப்பிரபந்தத்திலிருந்து ஒரு பாசுரமோ, தேவாரத்திலிருந்து ஒரு பண்ணோ சொல்லத்தெரியாது என்பது தான் நிதர்சனம்.
அந்த நாளில் அங்கு கூடும் பக்தர்களின் எண்ணிக்கை இருபது லட்சங்களைத் தாண்டும். கடந்த சில வருடங்களாக இந்த லட்சங்களின் கரைந்து போன அனுபவம் எனக்குண்டு.
கடந்த ஆண்டு இந்த கரைந்து போன அனுபவத்தைக் கட்டுரையாக்கித் தந்திருந்தேன். இதோ அந்த லிங்க். படித்து ஆனந்தம் கொள்ளுங்களேன். கூடவே இந்த ஆஷாட சுக்ல ஏகாதசி கொண்டாட்டங்களைப் பற்றிக் கூறும் எனது மற்ற கட்டுரைகளின் லிங்க்களும் இங்கு இணைத்துள்ளேன்.
பண்டரிபுரத்தில் பக்தி வெள்ளம் ஆஷாட சுக்ல ஏகாதசி கோலாகலம் பால்கி
https://www.vikatakavi.in/magazines/276/10091/aashada-sukla-ekadasi-celebrations-in-Pandharpur.php
ஆஷாட சுக்ல ஏகாதசி கொண்டாட்டங்கள் – பண்டரிபுரத்திலிருந்து நேரடியாக ரிப்போர்ட் 1 - பால்கி
https://www.vikatakavi.in/magazines/383/13277/Ashadai-celebrations-in-Pandharpur.php
ஆஷாட சுக்ல ஏகாதசி கொண்டாட்டங்கள் – பண்டரிபுரத்திலிருந்து ரிப்போர்ட் 2
https://www.vikatakavi.in/magazines/384/13306/ashaadi-celebrations-at-pandharpur.php
ஆஷாட சுக்ல ஏகாதசி – பண்டரிபுரத்திலிருந்து நேரடி ரிப்போர்ட். 3 இறுதி பகுதி - பால்கி
https://www.vikatakavi.in/magazines/385/13317/ashadi-celebrations-in-Pandharpur.php
பண்டர்பூருக்கு வார்கரி பயணம் - நந்தினி டையஸின் பயணக்குறிப்பு. - பால்கி
https://www.vikatakavi.in/magazines/275/10049/warkari-yatra-to-pandarpur.php
https://www.vikatakavi.in/magazines/379/13173/Ashada-sugla-egadasi-in-Pandharpur.php
ராம்க்ருஷ்ண ஹரி வாசுதேவ ஹரி
Leave a comment
Upload