தொடர்கள்
பொது
ஆஷாட சுக்ல ஏகாதசி – பண்டரிபுரத்திலிருந்து நேரடி ரிப்போர்ட். 3 இறுதி பகுதி - பால்கி

சென்ற வாரம் இந்த ஆஷாட சுக்ல ஏகாதசியின் கொண்டாட்டங்களில் குருமார்களின் பங்கு முக்கியம் எனக் கூறியிருந்தேன்.

இந்த வார்கரி யாத்திரையை சந்த் ஞானேஷ்வர் சந்த் நாம்தேவர், சந்த் ஏக்னாத் ஆகியோர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.

சுமார் எழுனூறு வருடங்களாக மகாராஷ்டிராவின் விட்டலனின் பக்த சந்த்துக்களின் திருப்பாதுகைகளைச் சுமந்து கொண்டு வரும் பால்கிகள் (பல்லக்கு=மராட்டியில் பால்கி என்பதாகும்) இந்த வாரியின் பிரதான அங்கம்.

சந்த் ஞானேஷ்வரரின் திருப்பாதுகைகள் ஆலந்தியிலிருந்தும், சந்த் நாம்தேவின் திருப்பாதுகைகள் நர்சி நாமதேவிலிருந்தும், சந்த் துக்காராமின் திருப்பாதுகைகள் தேஹுவிலிருந்தும், சந்த் ஏக்நாத்தின் திருப்பாதுகைகள் பைதானிலிருந்தும், சந்த் நிவ்ருத்திநாத்தின் திருப்பாதுகைகள் திரியம்பகேஸ்வரிலிருந்தும், சந்த் முக்தாபாயின் திருப்பாதுகைகள் முக்தைநகரிலிருந்தும், சந்த் சோபான் காகாவின் திருப்பாதுகைகள் சாஸ்வாத்திலிருந்தும் மற்றும் சந்த் கஜானன் மகாராஜின் திருப்பாதுகைகள் ஷேங்காவிலிருந்தும் இந்த வாரியில் கலந்துகொள்ளும்.

நமது பாரத பண்பாட்டில் குருவுக்கு தெய்வத்திற்கு முன்னரும் பெற்றோர்க்குப் பின்னரும் குருவின் ஸ்தானம் உண்டு.

இதுதான் இந்த விட்டல பக்தர்களை வழிநடத்துகிறது. அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையை செம்மைப் படுத்திவர்கள் அவர்களாதலால் அவர்களுக்கு உரிய கெளரவத்தையும் பக்தர்கள் தர தவறுவதில்லை.

இந்த கலியுகத்திலிருந்து பார்த்தல் ஆதி சங்கரர் முதலாய் ராமானுஜர், மத்வர், ராகவேந்திரர், சங்கீத மும்மூர்த்திகள் மஹாபெரியவா வரை மக்களை வழி நடத்தி சென்றிருக்கின்றனர்.

ஸ்ரீராமபிரான் காலந்தொட்டு, திருப்பாதுகைகளை போற்றும் நற்செயல் இன்றும் யுகம் தாண்டியும் தொடர்கிறது.

அனைத்தும் குருவின் மகிமையே.

இதனால் தான் இந்த யாத்திரையிலும் சரி, பண்டரிபுரத்திலும் சரி குருமார்களின் திருப்பாதுகைகள் தாங்கிய பால்கிகளுக்குத்தான் அதிக மரியாதை.

சென்ற வருடம் வார்கரி யாத்திரையைப் பற்றி நாம் எழுதிய கட்டுரை உங்களின் பார்வைக்கு.

https://www.vikatakavi.in/magazines/275/10049/warkari-yatra-to-pandarpur.php

ஏகாதசியும் வந்தது. அனைத்து வார்கரி யாத்திரிகர்களும் குருமார்களின் பால்கியைத் தொடர்ந்து நகரை வந்தடைந்த வண்ணமிருந்தனர்.

அந்த திருப்பாதுகைகளைத் தொட்டுத் தொழுதிடக் காத்திருந்தவர்களுடன் நாங்களும் சேர்ந்துகொண்டோம்.

திருப்பாதுகைகள் தாங்கிய பால்கிகளின் புகைப்படங்கள்:

20240722221704133.jpg [சந்த் நாம்தேவ் ஊட்டிவிட அந்த நிவேத்தியத்தை முழுவதும் உண்டுவிட்ட விட்டலன் இவன்தான்]

20240722221758203.jpg [சந்த் நாம் தேவ் மஹராஜின் 16ஆவது & 17ஆவது வம்சாவளியுடன் }

20240722222040277.jpg

20240722222147563.jpg[தோளில் தாங்கியபடி பால்கிகள் செல்கிறது]

20240722222351951.jpg

[சிலர் திருப்பாதுகைகளை தலையில் சுமந்தவாரே…]

20240722222532233.jpg

[சந்த் முக்தாபாயீயோட திருப்பாதுகைகள்]

2024072222284582.jpg [சந்த் ஞானேஷ்வர் மஹராஜோட திருப்பாதுகைகள். இந்த ஆஷாட சுக்ல ஏகாதசி வார்கரி பாத யாத்திரைக்கு வித்திட்ட மஹான்]

20240722223056524.jpg [சந்த் ஏக்நாத் மஹராஜோட திருப்பாதுகைகள்]

20240722223149179.jpg [சந்த சோபான் மஹராஜின் திருப்பாதுகைகளின் பால்கி முன்பு இந்த பால்கி]

20240722223431591.jpg

[பாண்டுரங்கன் நரஹரி சோனார் என்னும் அதீத சிவ பக்தனுக்கு ஹரியும் நானே ஹரனும் நானே என்று காண்பித்து அவரை ஆட்கொண்டார் விட்டலன்]

20240722223723205.jpg[விட்டலன் கோயில் ஏகாதசிக்காக விமரிசையான அலங்கரிப்புடன்] [விட்டலன் கோயில் ஏகாதசிக்காக விமரிசையான அலங்கரிப்புடன்]

20240722223953247.jpg

20240722224203201.jpg

வெவ்வேறு திண்டிகளில் இருந்து வாரியாகச் வர்காரிகள் வழித்தடத்தில் குறிப்பிட்ட சில கிராமங்களில் மைதானங்களில் கூடுவார்கள்.

அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் வட்டமாக நிற்க வேண்டும். நடுவில் குதிரை ஓடுவதற்காக சாலை திறந்து விடப்பட்டுள்ளது. வார்கரிகள் வட்டத்தில் நின்று கிண்ணாரம், டோல்,மிருதுங்கம் இசை வாத்தியங்களை முழங்குவார்கள். இந்த ஆரவார ஒலி ஒலிக்கும்போது போது ஒரு குதிரை வளையத்தின் வழியாக ஓடுகிறது. வார்காரி அவருக்குப் பின்னால் ஓடுகிறார். இதற்கு உபே ரிங்கன் என்று பெயர்.

20240722224359329.jpg

20240722224435989.jpg

20240722224532587.jpg

ஏகாதசியன்று கோயிலுக்குள் கிடைத்த மூலவர் காட்சி வீடியோ

ஏகாதசி முடிந்தது, த்வாதசி வந்தது. வந்த அனைவரும்

விட்டலனின் கோவிலை வலம் வந்து பிரியா விடை பெற்றுக்கொண்டு கிளம்ப மனமில்லாமல் கிளம்பினோம்.

ராமகிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி.

இனி அடுத்த வருடம்.