தொடர்கள்
கதை
கிருஷ்ண ஜெயந்தி - ஆனந்த் ஶ்ரீனிவாசன்

20240724091306741.jpeg

அன்று சனிக்கிழமை அந்தக் கோகுலம் காலனியில் ஆஸ்திக சபையின் ஆர்கனைசர் சத்தியமூர்த்தி விஷ்ணு சஹஸ்ர நாமம் பாராயணம் முடிந்த பின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

நம்ம காலனியில் உள்ள 20 வீடுகளில் குலுக்கல் முறையில் இந்த வருடம் யார் ஆத்தில் கோகுலாஷ்டமி கொண்டாடுவது என்று உத்தேசித்து உள்ளோம்.

யாருக்கு அந்தப் பாக்கியம்?.இந்த குழந்தைச் சீட்டை எடுத்து கொடுக்கும் .

குழந்தை கோமளவல்லி ஆராவமுதன் பெயரை எடுத்தது..

“அதிர்ஷ்டகாரிடி கோமளி ! ” என்றாள் அலமு பாட்டி.

ஆராமுதன் ஒரு தனியார் கம்பனியில் சீப் அக்கவுண்ட்டா வேலை வயது 36. கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆச்சு!

“இந்த வார ராசிபலன்ல, உங்க பெயர் பிரபலமாகும்; அதுக்குச் சான்ஸ் இருக்கு; என்று போட்டுருந்தது.அது நிஜமாகி விட்டது பாத்தேளா!” என்றாள் கோமளி.

“ஆமாம்”.

“சரி சரி மச மசன்னு நிக்காம, ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்கோ.?இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. ரொம்பக் கிராண்டா பண்ணனும்”

பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டே ஜமாய்ச்சுடுவோம்”! என்றார்.ஆராமுது.

“மொதல்ல வீடு நன்னா யில்லை. ஒயிட் வாஷ் பண்ணனும் .ஜன்னல் கதவு எல்லாம் பல்லை இளிக்கிறது பெயிண்ட் அடிக்கணும்”?

“வாசல் அடைச்சு ஷாமியானா போடணும்.!”

“தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் இன்விட்டேஷன் நல்லா கிராண்ட இருக்கணும்”

“நான் அப்படியே மூணு பட்டு புடவை வாங்கிக்கறேன்” .

“என்னடி கோமளி. ஒன்னு பத்ததா?”

“நவராத்திரி தீபாவளி வருது. ஆடி தள்ளுபடியில் இப்பவே வாங்கி வைச்சுக்கிறேன்”.

“ஆமாம் கிருஷ்ண ஜெயந்தி அன்னிக்கு, ஒன்பது கஜம் தானே.கட்ட போறே?” .

“யாருன்னா ஒன்பது கஜத்தை கட்டிண்டு அங்கேயும் இங்கேயும் அலையறது”?

“அப்படிச் சொல்லாதே. வைதீக காரியம். இப்ப ரெடிமேட்ல 9 கஜம் புடவை கிடைக்குது. பேசாம அதை வாங்கி அன்னிக்கு ஒரு நாள் மட்டும் கட்டிக்கோ”.

“நீ மடிசார் புடவையில எப்படி அழகாக இருப்பே தெரியுமா?

“அதைத் தள்ளியே நின்னு சொல்லுங்க! இப்படிக் கிட்ட வந்து கொஞ்ச வேணாம்”.

“மறந்தே போச்சு மடிமேல் விளையாடி மனம் போல் உறவாடி. அந்தப் பாட்டு தான் ஞாபகத்துக்கு வரது கோமளி”

“என்னன்னா பெருமாள் காரியம் பன்றச்சே, இப்படித் தத்து பித்துண்ணு சினிமா பாட்டு பாடிண்டு.”.

“சாரி கோமளி”.

“ஆமாம் பட்சணம் சீடை முறுக்கு வெல்ல சீடை பண்ணனும் ;யாரை வைச்சு பண்ண போறே?

“பேசாம கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல வாங்கிடலாம். அவா பாக்கெட் போட்டு கொடுத்துடுவா” .

“அபசாரம், அபசாரம் கடையிலிருந்து வாங்கிக் கொடுக்கலாமா? ஏன் உன் புத்தி இப்படிப் போகுதோ?”.

“ஆத்து முழுவதும் மாவு கோலம் கண்ணன் கால் போட.”“எதிர் வீட்டு அனிருத் வாண்டை கூப்பிட்டு மாவிலே அவன் காலை நனச்சு ஒவ்வொரு காலா வைக்கச் சொல்லு”.

“ஐயோ ! அந்த வாலு இங்கேயும் அங்கேயும் தாறுமாறா ஒடும்.”

“கடையில் கிருஷ்ணன் கால் ஸ்டிக்கர் கிடைக்கும்; வாங்கிண்டுவாங்கோ.ஒட்டலாம்”

“வாசலில் ஸ்பீக்கர் வைச்சு காலனி முழுவதும் கேட்கும்படி கிருஷ்ணா கானம் டி வி மூலம் ஒளிபரப்புச் செய்வோம்”.

“யூ ட்யூப்ல லைவ் டெலகாஸ்ட் செய்வோம் . பெருமையா இருக்கும்”.

“குட் ஐடியா கோமளி.அது தான் இப்ப டிரெண்ட்.”

மறுநாள் ஶ்ரீஜெயந்தி .முதல் நாளே கோமாளி அம்மாவும் ஆராமுது அம்மாவும் முறுக்கு ,வெல்ல சீடை,உப்புச் சீடை. கொஞ்சம் அவல் வெல்லம் எல்லாத்தையும் தயார் செய்து பாக்கெட் போட்டு தயாராக வைத்து இருந்தார்கள்..

புது பொலிவுடன் அகமும் அழகாக அமைந்திருந்தது.

சாயந்திரம் சூரியன் மெல்ல மறையும் நேரம். ஆராமுதும் அகம் மட்டுமல்ல ,ஷாமியான பந்தல் முழுவதும் வாழைக்குருத்து , தென்னங்குருத்து தோரணம் , மாவிலை தோரணம் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.

Welcome to Sri Krishna Jayanthi Function என்கிற பேனர். வாசலில் கோலமும் அப்படியே.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்தது.

ஷாமியானவில் எல்லோருக்கும் Welcome Drink காஃபி. வழங்கப்பட்டது.

“யூ ஆர் வெல்கம்”என்று ஒவ்வொருவரையும் வரவேற்றார் ஆராமுது.

கோமளியின் மடிசார் பார்த்து எல்லோரும் வழக்கமா கேள்வி

கேட்டார்கள்

“எங்கே வாங்கினே”?

“ஒங்களுக்குச் சூப்பரா இருக்கு.”

அருமையான கலர்.

அலமூ பாட்டி தன் பங்குக்கு .”என் கண்ணே பட்டுடும் போல் இருக்கே.!” என்றாள்.

நல்ல வேளை பாட்டிக்கு இது ரெடிமேட் டிரஸ் என்று தெரியாமல் போனது..என்று சந்தோசப்பட்டாள்.கோமளி.

நாலஞ்சு பெஞ்ச் போட்டு அதில் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணன் படமும். வெண்ணெய் உண்ணும் பால கிருஷ்ணன் படமும் வைத்து மாலைகள் சாத்தப் பட்டுருந்த்த்து. வெள்ளி குத்து விளக்கு இரு புறமும்.

இரண்டு வெள்ளி தாம்பாளத்தில் பழங்கள் புஷ்பங்கள் பட்சணம் வெண்ணெய், அவல் விளாம்பழம் வெல்லம் வைக்கப் பட்டுருந்தது.

கோமளி அவசர அவசரமாக ஆராமுதுவை கூப்பிட்டு“ஏன்னா !நாவல்பழம் வைக்கலியே.?”

“கிச்சாமி அவாத்துக் கொல்லையில் மரம் இருக்கு நான் சுத்தமா பறிச்சுண்டு வரேன்.; கடையில் வாங்கவேண்டாம்ன்னு.பஞ்சகட்சம் கட்டி விடும் போது சொன்னான்”.

“பாவி கழுத்தைஅறுத்துட்டானே.”

“வீடும் பூட்டி இருக்கு. எங்கே போய்த் தொலைஞ்சான்.? தெரியலையே?”

அதற்குள் சத்தியமூர்த்திச் சாஸ்திரிகள், பூஜைக்கு நேரமாச்சு. துரிதப் படுத்தினார்.

நல்ல வேளை கிச்சாமி வேர்க்க வியர்க்க ஒரு கிலோ நாவல் பழங்களைக் கொண்டு வந்து தட்டில் வைத்தான்.

பூஜைக்கு முன்னாடி சின்னதா உபன்யாசம். .

“ஏன் கோகுலாஷ்டமி ஒரு நாள் ஸ்மார்ததாவும், அதற்கு மறுநாள் ரோஹிணி நட்சத்திரம் போது வைஷ்ணவாளும் கொண்டாடு கிறார்கள் தெரியுமா?”.

“இதற்குச் சாஸ்திர பூர்வமாகப் பல பொருள்கள் நிறைந்த விடை உண்டு. ஆனால் அடியேன் விளையாட்டாகக் கூரத்தாழ்வான் சொன்ன பதிலிருந்து ஒன்றை சொல்கிறேன்” .

“ஒரு சொல் ,ஒரு இல், ஒரு வில் என வாழ்ந்தவர் ஶ்ரீ ராமர். எனவே அவர் பிறந்த தினம் ஒரே நாளாகக் கொண்டாடப்படுகிறது.”

“ஆண்டாள் கண்ணனைப் பாடும் போது ,ஏலாப் பொய்க் களுரைப்பானை இங்கே போத கண்டீரோ” என்று நாச்சியார் திருமொழியில் பாடுகிறாள்.

கண்ணன் நிறையப் பொய்களைச் சொல்வான்.விளையாட்டுப் பிள்ளை”.

அவனுக்கு இரண்டு தந்தை, இரண்டு தாயார்.

பெற்றவர்கள் தேவகி வாசுதேவர்,வளர்த்தவர்கள் யசோதா நந்தகோபன்.

இரண்டு பெற்றோர்களுக்கும் கண்ணன் பிறந்த நாளை கொண்டாடவேண்டும் என்கிற ஆசை. அதனால் தான் இரண்டு கொண்டாட்டங்கள்.

உபன்யாசம் முடிந்தது

ஆசனபலகையில் ஒக்கார்ந்து நீங்க இரண்டு பேரும் கிருஷ்ணனை சேவிச்சுட்டுச் சங்கல்பம் பண்ணுங்கோ”.

“ நமபார்வதி பதீயே என்று பூஜை ஆரம்பிக்கும் போது ஆராமுதுவின் செல் அடிக்கவே ,பார்த்த போது. அவருடைய எம். டி யின் PA நம்பர்.

“எக்ஸ்கியுஸ் மீ” என்று சொல்லிவிட்டு வாசலுக்கு வந்ததும்.

“மிஸ்டர் ஆராவமுதன் அர்ஜெண்டா ஆபீஸ் வாங்கோ”

போனதும் ஆராமுதுக்கு எகப்பட்ட டோஸ். தப்பும் தவறுமான ஸ்டேட்மென்ட்.காண்பித்து

“வாட் திஸ் .?

“சாரி சார் !ஒரு வாரமா கிருஷ்ண ஜெயந்தி பங்க்ஷ்ன்ல பிஸியா இருந்ததினால் சரியா கவனிக்க முடியாம போச்சு.”

“உடனே ரெக்டிபை பண்ணிடுறேன்.”

வேலை என்னவோ பத்து நிமிடத்தில் முடிந்தது.

வேலை முடியும் போது வீட்டிலிருந்து போன். மிகுந்த அவசரம் உடனே வரச் சொல்லி அலமு பாட்டி சொன்னதும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

எம் டியிடம் நிலைமையைச் சொல்லி, அந்த டிராபிக்கில் வந்து சேர்ந்த புஷ்பங்கள் சில பக்ஷ்ணங்கள் சிதறிக் கிடந்தது. யாரும் இல்லை.

கோமளி, கோமளி, என்று தேடியவருக்கு எதிரில் வந்த மாமியார் “காங்கிரட்ஸ்” மாப்பிள்ளை நீங்க போனபிறகு கோமாளி தலை சுத்தி கீழ விழுந்தட்டா!

நம்ம காலனி டாக்டர் யசோதா பாத்துட்டு கன்ஃபர்ம் பண்ணிட்டா....

கிருஷ்ணன் வரப் போறான். !!

ஆராமுது மேடையில் இருந்த கண்ணனை பார்த்தார். மானசீகமாக நன்றி சொல்ல,அவன் சிரித்துக் கொண்டிருந்தான்.