"நம்ம ஊர்ல காய்கறி விலை எல்லாம் ரொம்ப ஜாஸ்தியா சொல்றாங்க கேரட் கிலோ 200 ரூபாய் என்கிறார்கள். நீங்க டி நகர் போய் காய்கறி வாங்கி வாருங்கள் என்று என் மனைவி பையை நீட்ட நான் காசு என்று கேட்டதும், உங்க பர்ஸில் 300 ரூபாய் இருக்கிறது. அது போதும் என்று சொல்லி அனுப்பினார்.
நான் ட்ரெயின் ஏறி உட்கார்ந்த போது என் எதிரில் கணவன், மனைவி இரண்டு சிறுவர் சிறுமி உட்கார்ந்து இருந்தார்கள். சிறுவரும் சிறுமியும் ஜன்னல் ஓரம் சந்தோஷமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கணவனும் மனைவியும் அவர்களுக்கு ஒவ்வொரு ஸ்டேஷன் வரும்போதும் அது எந்த ஸ்டேஷன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் மெல்ல அந்த இளைஞரை பார்த்து புன்னகை செய்தேன். கூடவே குழந்தைகள் இப்போதுதான் முதலில் ரயிலில் வருகிறார்களா என்று கேட்டேன். அப்போது இளைஞர் நாங்கள் கார் வைத்திருக்கிறோம், இருந்தாலும் குழந்தைகள் பஸ் ரயில் பயணம் செய்து அந்த அனுபவத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் சில சமயம் அவர்களை பஸ் ரயிலில் நாங்கள் அழைத்து வருவோம் என்று சொன்னார்.
நான் நல்ல விஷயம் இது என்று பாராட்டிய போது அவர் சொகுசு வாழ்க்கையை குழந்தைகளுக்கு ரொம்பவும் காண்பிக்க கூடாது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய பக்குவம் அவர்களுக்கு தேவை என்று கூடுதல் தகவலாக அதையும் சொன்னார். அந்த இளைஞர். அந்த இளைஞரின் பேச்சு எனக்கு பிடித்துப் போனது. இப்போது எங்கே செல்கிறீர்கள் என்றுதான் அவரைக் கேட்டேன் கடற்கரைக்கு சென்று காற்று வாங்கிவிட்டு இரவு ஒரு ஓட்டலில் தங்கி விட்டு நாளை பொழுது ஓட்டலில் மாலை மீண்டும் பீச் இரவு திரும்புவோம்.
இரவும் ரயிலில் தானா அல்லது கார் வந்து விடுமா என்று அவரிடம் நான் கேட்டேன். இல்லை எனது காரில் எனது டிரைவர் அவரது குழந்தைகளை காரில் பீச்சுக்கு அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு ரயில் பஸ் அனுபவம் இருக்கும்.
காரில் அவர்கள் பயணம் செய்வதற்கான வாய்ப்பு இருக்காது. எனவே அந்த அனுபவத்தை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று அவர்களை காரில் அழைத்து வர சொல்லிவிட்டு நாங்கள் ரயிலில் பயணிக்கிறோம் என்று சொன்னார்.
அந்த இளைஞர் எனக்கு மிகப்பெரிய மனிதராக இப்போது தெரிய ஆரம்பித்தார். அப்போது அவருடைய மனைவி ரயிலில் விற்ற வேர்க்கடலை, பர்பி, சமோசா, மாங்காய் வெள்ளரிப்பிஞ்சு இப்படி எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு வாங்கி தந்ததுடன் கொஞ்சம் வாங்கி பையில் வைத்துக் கொண்டார். நான் அதைப் பார்த்ததும் அவர் இது எங்கள் டிரைவர் குழந்தைகளுக்கு என்று சொன்னார்.
அவரைப் பற்றி நான் விசாரித்த போது மறைமலைநகரில் நான் சிறிய அளவு மின்னணு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கிறேன். வெளி மாநிலங்களில் எங்கள் தயாரிப்புக்கு நல்ல கிராக்கி. நான் என்னுடைய கம்பெனியில் வேலை செய்பவர்களை நான் ஊழியர் என்று பார்ப்பதில்லை. நான் அவர்கள் எல்லோரையும் பார்ட்னர் என்று தான் அழைப்பேன். நான் முதல் போட்டவன் அவர்கள் அவர்கள் உழைப்பை பங்களிப்பாக தருகிறார்கள். எல்லோரையும் நான் இப்படி அழைப்பதால் அவர்களுக்கு இது நமது கம்பெனி என்ற பொறுப்புணர்வோடு வேலை செய்வதால் என்னுடைய பணி சுமை குறைகிறது.
கம்பெனி கணக்கு வழக்குகள் எல்லாம் வெளிப்படை. அவர்கள் குழந்தைகளின் கல்வி செலவு கம்பெனி உடையது இப்படி அவர் நிறைய சொல்லிக் கொண்டே போக எனக்கு வியப்பு.
இப்படி ஒரு கம்பெனி முதலாளி இருந்தால் முதலாளி தொழிலாளர் ஒற்றுமை மற்றும் தொழிலும் ஆரோக்கியமாக பெருகும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மாம்பலம் ரயில் நிலையம் வந்ததும் நான் இறங்க வேண்டும் என்று சொல்லி அவர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு இறங்கினேன்.
Leave a comment
Upload