அப்செட்
டிராகன் படம் நூறாவது நாள் விழாவில் படத்தின் நாயகி கயாடு லோஹர் மற்றும் அனுபவமா பரமேஸ்வரன் வராததால் படக்குழு அவர்கள் மீது அப்சட்டில் இருக்கிறது.
ஜோவிகா
பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா அணிந்திருந்த ஆடை மீது விமர்சனம் எழுந்தது ."உங்கள் பாரம்பரியம் தான் என்ன அதை முதலில் சொல்லுங்கள் பிறகு என் உடையை பற்றி பேசலாம்" என்று பதில் சொல்லி இருக்கிறார் நடிகை.
பிரீத்தி முகுந்தன்
தமிழில் ஸ்டார் படத்தில் கவின் ஜோடியாக நடித்தவர் பிரீத்தி சமீபத்தில் வெளியான கண்ணப்பா படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அனுபமா பரமேஸ்வரன்
`"விமர்சனம் செய்து என்னை நோகடித்தாலும் நான் சினிமாவை விட்டு விலக மாட்டேன் "என்கிறார் அனுபவமா பரமேஸ்வரன்.
காத்திருந்தார்
சமீபத்தில் ராம் இயக்கத்தில் சிவா கிரேஸ் ஆண்டனி ஜோடி நடித்த படம் பறந்து போ.
கிரேஸ் ஆண்டனி
பறந்து போ படத்தில் என்னை நடிக்க இயக்குனர் ராம் அழைத்த போது அவர் யாரென்று எனக்குத் தெரியாது. அவருடைய பேரன்பு படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவர் படத்தில் நடித்ததில் நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்கிறார் கிரேஸ் ஆண்டனி
ரஷ்மிகா
கொடவா சமூகத்தில் இருந்து திரைக்கு வந்த முதல் நடிகை நான் என்று ராஷ்மிகா பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. காரணம் இந்த சமூகத்தில் இருந்து ஏற்கனவே பிரேமா, தஸ்வினி, கரும்பையா, ரீஷ்மா, ஸ்வேதா என்று ஒரு பெரிய பட்டியல் நீள்கிறதாம். ஏதாவது அந்த சமூக அமைப்புகள் ராஷ்மிகாவை கலாய்க்கிறார்கள்.
பவ்யா திரிகா
கோச்சடையான் பட அசோசியேட் இயக்குனர் சூரிய பிரதாப் எஸ் இயக்கும் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக பவ்யா திரிகா நடிக்கிறார்.
ஸ்ருதிஹாசன்
இதுவரை திருமணம் சம்பந்தப்பட்ட கேள்விகளை தவிர்த்து வந்தவர் ஸ்ருதிஹாசன். எனக்கு காதலிப்பது பிடிக்கும் ..... இப்போது வரை யாரையும் நான் காதலிக்கவில்லை என்கிறார் நடிகை.
ஐஸ்வர்யா ராஜேஷ்
"ஒரு நல்ல நடிகையாக இருக்க வேண்டும் என்றால், எந்த வேடத்திலும் நடிக்க வேண்டும் அப்படி நடிப்பதற்கு வயது தடை இல்லை ஆறு குழந்தைகளின் அம்மாவாக நடிக்க கூட நான் தயார் "என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
Leave a comment
Upload